|
20/9/14
![]() | ![]() ![]() | ||
Kathir Nilavan
தகுதியற்ற இந்தி மொழி-திரு.வி.க.
தில்லி இந்துத்துவ
மோடி அரசு இந்தி மொழியை திணிப்பதில் தீவிரம்
காட்டி வருகிறது. தில்லியில் செப்.14இல்
இந்திமொழி நாள் கொண்டாடப்பட்டுள்ளது. அதில்
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசும் போது,
'இந்தியைப் பிரபலபடுத்துவதில் ஒவ்வொருவரும் கவனம்
செலுத்த வேண்டும்' என்று கூறியிருக்கிறார்.
பிரணாப் முகர்ஜி மொழியால் வங்க இனத்தைச் சேர்ந்தவர்.
வங்கமொழியின் பெருமை பேச வேண்டிய வாய்
இந்தி மொழிக்கு பல்லில்லிப்பது மிகக் கேவலமானது.
வங்கமொழி மறந்த பிரணாப் முகர்ஜி போன்ற
இந்தி அடிவருடிகளுக்கு அன்றே,
நமது 'தமிழ்ப்பெரியார்' திரு.வி.க. அவர்கள்
இந்தி மொழி உருவாக்கித் தராத சான்றோர்களை வங்க
மொழி தான் உருவாக்கித்
தந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
ம.பொ.சி.யின் 'தமிழ்முரசு' ஏட்டில் (1.8.1948)
'தகுதியற்ற இந்தி' எனும் தலைப்பில் வெளி வந்த
திரு.வி.க.வின் உரை வீச்சு பின் வருமாறு:
"ஒரு நாட்டில் ஒரு மொழி தேசிய மொழியாக்கப்பட
வேண்டுமானால், அம்மொழியில் ஏனைய மொழிகளைக்
காட்டிலும் அதிகக் கலைகள், அதிகப் பண்புகள், அதிக
காவியங்கள் இருக்க வேண்டும். ஆராய்ச்சியாளர்களையும்,
பேரறிஞர்களையும் அம்மொழி ஈன்றிருக்க வேண்டும்.
அப்போது தான் அது தேசிய மொழியாகும்.
இந்தியை எடுத்துக் கொண்டால் அதில் எவ்வித கலைகளும்
கிடையாது. கலையே இல்லாத
போது கலைஞர்களை அது எங்கு தோற்றுவித்திருக்கப்
போகிறது! இந்தியில் இலக்கியமோ, இலக்கணமோ,
காவியமோ, கிடையாது. திருக்குறளுக்கு ஒப்பான
நீதி நூலோ, தொல்காப்பியத்திற்குச் சமமான இலக்கணமோ,
சிலப்பதிகாரத்திற்கு இணையான
காவியமோ கிடையாது.
ஒரு காலத்தில் நாவலந்தீவு பூராவும்- இன்றைய பரத
கண்டம் பூராவும் பரவியிருந்த தமிழகம் -முதலில்
விந்தியம் வரை குறுகி- இன்று வேங்கடம்
வரை குறுகி நிற்கிறது. இந்த நிலையில்
இத்தமிழகத்தில் இந்தி நுழைந்து விடுமானால்
தமிழகமே மறைந்து போகும். ஆகவே, இதைக்
கடைசி மூச்சுள்ள ஒவ்வொரு தமிழனும் எதிர்த்தே தீர
வேண்டும்.
தமிழ்மொழிக்குள்ள பண்பில் இலட்சத்தில்
ஒரு பங்கு கூட இந்தியில் இல்லை என்பதை அமைச்சர்கள்
கூட, ஒப்புக் கொள்வர். இந்தி மொழி இந்தியாவில்
தோன்றி சற்றேறக்குறைய 200 ஆண்டுகள் தான்
ஆகியிருக்கும். அது ஒரு தாஸையோ, ஜகதீஸ் சந்திர
போஸையோ, ஒரு பானர்ஜியையோ,
ஒரு தாகூரையோ உண்டாக்கிக் கொடுக்க வில்லை. வங்காள
மொழி தான் அவர்களை உண்டாக்கியது.
ஆகவே, கலையற்ற- பண்பற்ற- கலைஞர்களை ஈன்றெடுக்கும்
ஆற்றலற்ற- இந்தி மொழி இந்நாட்டு மக்களுக்குத்
தேவையற்றது. இதை நாம் எதிர்த்தே தீர வேண்டும்."

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக