வெள்ளி, 7 ஜூலை, 2017

பாவலேறு கவிதை பெருஞ்சித்திரனார் விடுதலை அத்தன் அத்தா

aathi tamil aathi1956@gmail.com

14/9/14
பெறுநர்: எனக்கு
ஒற்றுமை ஒற்றுமை என்றே உரைப்பது
===================================
வெற்றுரை மட்டு மன்றே; வீணுரை!
================================
ஒன்றை மட்டும் நினைவில் ஊன்றுக.
என்றைக் கென்னினும் எவரிடத் தென்னினும்
அரசியல் நலன்கள் ஆயிரம் வரினும்
பொருளியல் நலன்கள் பூத்துக் குலுங்கினும்
உரிமை யில்லாத் தமிழகம் தமிழர்க்குக்
கருவில் லாத கழிநிலை மலடி!
’துறக்கமே எனக்குச் சிறையாக வாய்ப்பினும்
இறப்பத் தாண்டிக் குதிக்கவே விரும்புவேன்’
எனுமோர் அறிஞன் இயம்புதல் தெளிவாய்!
பினுமுன் பேதைமை பேசுவ தொழிவாய்!
ஆகவே தமிழனே! அழைக்கின்றேன், உனை!
சாகவே என்னினும், விடுதலைச் சாவே!
இன்றைத் தமிழகம் அடிமைவிட் டெழுந்தால்
பின்றைத் தமிழகம் பெரும்பயன் எய்தும்!
உன்னை விடுதலை கொப்புவித் திடுக!
அன்னை நாட்டினை விடுதலை செய்க!
முன்னைப் பெரும்புகழ் உலகலாம் முழக்குக!
“என்னைக்கும் என்னை இனத்திற்கும்
என்னைப்
பின்னைக்கும் யானே பெரும்புகழாம் நின்றே”
னென்
றன்னைக்கும் சொல்லி அத்தனுக்கும்
சொல்லி,
உன்னைக்கும் உன்னின் உழைக்கும்
உறவுக்கும்
பன்னி யுரைத்துப் பலவா றெடுத்துரைத்து
மின்னிப் புறப்படுக மேனிலையை
உன்னி நடத்திடுக, உறுபயன் விளையவே!
ஒற்றுமை ஒற்றுமை என்றே உரைப்பது
வெற்றுரை மட்டு மன்றே; வீணுரை!
- ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார்-1972
==============================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக