வெள்ளி, 7 ஜூலை, 2017

சுவிட்சர்லாந்து ஞானலிங்கேஸ்வரர் தமிழ் வழிபாடு தேரோட்டம் சுவிஸ்

aathi tamil aathi1956@gmail.com

9/9/14
பெறுநர்: எனக்கு
உலகிலே தமிழ் மொழி வழிபாட்டில் அதிசயிக்கும்
சுவிட்சர்லாந்து ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில்
தேர் தீர்த்தம்
உலக வரலாற்றில் பழமையுடைய இந்து சமய
வழிபாட்டில் தமிழ் மொழியில் வழிபாடு இடம்
பெறுவது இல்லை, பாரத நாட்டில் கூட
பகுதியளவில் தான் தமிழில் வழிபாடு இடம்
பெறுகிறது.
உலக வரலாற்றில் தமிழ் மொழியில் இந்து சமய
வழிபாடு இடம் பெறும் ஓரே இடம் சுவிட்சர்லாந்து
நாட்டின் தலைநகர் பேர்ன் மாநிலத்தில்
ஞானலிங்கேச்சுரர் ஆலயத்தில்
என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பல நாடுகளில் இருந்து வருகை தந்த
பக்தர்கள் கலந்து கொண்டதுடன் பல பிற
மொழி பேசும் மக்களும் மற்றும் சுவிட்சர்லாந்து
பொலிஸ் உயர் அதிகாரிகளும்
கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலயத்தில் தொடர்ச்சியாக, கலியுகத்தின்
முற்பகுதியில், வாகை ஆண்டு, மடங்கற் திங்கள்,
மூதிரை (21. 08. 2014) வியாழக்கிழமை 17.00
மணிக்கு, ஞானலிங்கேச்சுரத்தின் வாகை ஆண்டுத்
திருவிழா, குருவருளும் திருவருளும்
நிறைந்து ஆரம்பமாயிற்று.
இருவினையொடுக்கி வாழ்வில் நல்வளம் அளிக்கும்
பேரரசி ஞானாம்பிகை அருட்பேறும், நட்டம்
பயின்று வேண்டுவதனைத்தும் அருளும் எல்லாம் வல்ல
பரம்பொருள் ஞானலிங்கப்பெருமான் திருப்பேறும்
நிறைகொண்டு 30. 08. 2014 ஞானலிங்கேச்சுரர்
திருக்கோவிற் தேர்த்திருவிழா மிகவும்
சிறப்பாக நடைபெற்றது.
காலை 06. 00 மணிக்கு சிறப்புத் திருமுழுக்கு,
தமிழ் வேள்வி வழிபாட்டுடன்
தேர்த்திருவிழா தொடங்கியது. 09.00
மணிக்கு செந்தமிழ்த் திருமறையில் ஒன்பது தமிழ்
அருட்சுனையர்களின் தமிழார அருள் வழிபாட்டுடன்
நடைபெற்று ஞானாம்பிகை உடனயா ஞானலிங்கப்பெரும
ான் 11.00 மணிக்கு திருத்தேரில்
எழுந்தருளினார்.
தாயகத்தை நினைவுபடுத்தும் வகையில் அடியார்கள்,
பாற்குடம் ஏந்தி வந்தனர், திருநீற்றுச்
தீச்சட்டியும், இளந்தமிழ்ச் செல்வங்களின்
காவடியுடம் அணிசேர ஞானலிங்கேச்சுரத்தினைச்
சுற்றிப் புறப்பட்ட தேர் அருகில் அமைந்திருந்த
'சுளோஸ்கல்டே" விளையாட்டு அரங்கினை அடைந்தது.
அங்கு 12.00 மணிமுதல் நடனவேள்விச்சதுர
ினை கீழ்க்கண்ட வகையில் நடன மாணவியர்
வழங்கியிருந்தனர்.
• தேர்த்திருவிழா அன்று திருக்கோணேஸ்வரா
நடனாலய ஆசிரியை திருமதி விஜயசுந்தரம்
சந்திரவதனி அவர்களின் 108 நாட்டியமாணவியர்
களின் ஆடற்கலை, சதுர்வேள்வியாக தேர்முன்றலில்
இடம்பெற்றிருந்தது.
• கலாநிகேதன் நாட்டியாலய ஆசிரியை திருமதி.
ஸ்ரீதரன் கிருஸ்ணபவானி அவர்களின் மாணவியர்
ஆடல்வல்லான் திருக்கலை வழங்கியிருந்தனர்.
• பரதாஞ்சலி நாட்டியாலய ஆசிரியை திருமதி.
அனுசா சற்குணநாதன் அவர்களின் மாணவியர்
சிவநடனம் நடைபெற்றது.
• தேர்த்திடலில் சிவன்சக்தி நர்த்தனாலய
ஆசிரியை திருமதி. சுகந்தி பிரதீபன் அவர்களின்
மாணக்கர் சிவசக்தி நடனம் படைத்திருந்தனர்.
பெருந்தொகையில் இறைபக்தியுடன் அடியர்கள்
தேர்த்திருவிழாவில் சுவிசின் பல
பகுதிகளிலும் இருந்து வந்து பங்கெடுத்திருந்
தனர்.
தேர்த்திருவிழா செய்மதித் தொலைக்காட்சிகளில்
நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
இந்நேரடி ஒளிபரப்பிற்கு சுவிஸ் செல்வா சுக்
நிறுவனம் (Shelvazug) நல்கை வழங்கியிருந்தது.
விழாக்காலத்தில் தாயகத்திலிருந்த
ு வருகை தந்திருந்தது தவில் நாதக் கலைஞர்கள்
நாகராச மதுசூதனன் குழுவினர் இசைமீட்டினர்.
தமிழ்வின்

புலத்தமிழர் புலம்பெயர் கோயில் கோவில் ஈழத்தமிழர் சைவம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக