புதன், 19 ஜூலை, 2017

சவுக்கை கல் ஊடாக வரும் ஒளி மூலம் நாட்காட்டி வானியல் காலக்கணக்கீடு வெயில் புத்தாண்டு

aathi tamil aathi1956@gmail.com

25/3/14
பெறுநர்: எனக்கு

பழநியின் பெருங்கல் சவுக்கை

இந்த பக்கம் சில பிரச்சனைகளை கொண்டுள்ளது
பழநியின் பெருங்கல் சவுக்கை என்பது பழநியில் வாழ்ந்த பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய காலக்கணிப்பு கட்டமைப்பாகும். இந்த பெருங்கல் அமைப்புகள் இந்தியாவின் தமிழகத்தில் உள்ள பழனியிலும்இங்கிலாந்து நாட்டின் கோர்ன்வால் மாகாணத்திலும், இத்தாலியிலும் காணப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலுள்ள சவுக்கையிலும் சில மாறுபாடுகள் காணப்பட்டாலும் கல்லின் நடுவிலோ கல்லமைப்பின் நடுவிலோ ஒரு வட்டப்பொந்து அனைத்து சவுக்கைகளிலும் காணப்படுகிறது.

பழநிதொகு

பழநி யிலுள்ள பெருங்கல் சவுக்கை
பழனி அருகே ஆண்டிப்பட்டி மலைப்பகுதியில் இந்த சவுக்கை உள்ளது. இந்த சவுக்கையின் படி ஒரு ஆண்டின் ஆரம்பத்தையும் அரைப்பகுதியையும் முடிவையும் எளிமையாக கணித்தனர். சூரியன் வடக்கில் இருந்து தெற்காக செல்லும் 6 மாத கால பயணத்தை தெற்கு நோக்கிய காலம் என்றும் தெற்கில் இருந்து வடக்காக செல்லும் 6 மாத கால பயணத்தை வடக்கு நோக்கிய காலம் என்றும் கூறுவர். அதன்படி கி.பி. 2013ஆம் ஆண்டின் தெற்கு நோக்கிய காலம் ஆடி முதலாம் தேதி தொடங்கியது. சூரியனின் ஒளி தெற்கு நோக்கிய நகர்வு பாதையை தொடங்கும் காலத்தில் இந்த சவுக்கையில் உள்ள பொந்தின் வழியாக வழியாக சூரிய ஒளி ஊடுருவும். அதன்படி இச்சவுக்கையில் உள்ள துவாரம் வழியாக சூரிய ஒளிக் கதிர்கள் தென்மேற்காக ஊடுருவியதை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தினர்.[1][2] பழனியில் உள்ள சவுக்கை மூன்று கற்களை ஆய்த எழுத்து போல் அமைத்தது போன்ற தோற்றத்தில் உள்ளது. ஆனால் இங்கிலாந்தில் உள்ள சவுக்கையின் அமைப்பு வேறுபட்டு காணப்படுகிறது.

மேற்கோள்களும் குறிப்புகளும்தொகு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக