வெள்ளி, 14 ஜூலை, 2017

பாரதப்போர் தமிழர் ஐவர் பாண்டவர்

aathi tamil aathi1956@gmail.com

14/4/14
பெறுநர்: எனக்கு
மகாபாரதப் போரும் தமிழர்களும்!
மகாபாரதப் போரானது பாண்டவர்கள்
ஐந்து பேருக்கும் கவுரவர்கள்
நூற்றுவருக்கும் இடையில் நடந்ததாகக்
கூறப்படுகிறது. வியாசர் இயற்றிய மகாபாரத
நூலின்படி இந்த பாண்டவர்கள் ஐந்து பேரும்
பாண்டு மன்னனின் பிள்ளைகள் என்றும்
கவுரவர்கள் நூற்றுவரும் திருதராட்டிரனின்
மக்கள் என்றும் சொல்லப்படுகிறது.
குருசேத்திரம் என்னும் இடத்தில் நடந்ததாகக்
கூறப்படும் இந்த பெரும்போர்
உண்மையிலேயே நடந்ததா? கற்பனையாகக்
கூறப்படும் ஒன்றா? உண்மை என்றால் எந்த
அளவிற்கு அதில்
உண்மை கலந்துள்ளது என்று காண்பதே இக்
கட்டுரையின் நோக்கமாகும்.
உண்மையில் இந்த மகாபாரதப்
போரானது தொல்தமிழகத்தைச் சேர்ந்த
ஐந்து தமிழ் மன்னர்களுக்கும்
வேற்றினத்தாருக்கும் இடையில் நடந்த
போராகும். இந்த வேற்றினத்தாருக்கு என்ன
பெயர் வைப்பது? ஏற்கெனவே ஆரியர் என்ற
சொல் புழக்கத்தில் இருந்தாலும் இச்சொல்
பல குழப்பங்களையே தோற்றுவித்துள்ளது.
எனவே இந்த வேற்றினத்தவருக்கு 'நூற்றுவர்'
என்ற பெயரையே கொள்ளலாம்.
இந்த மகாபாரதப் போரானது பல நாட்கள்
நீடித்ததாகச் சொல்லப்படுகிறது. என்றால்,
ஒரு ஐந்து பேர் ஒருநூறு பேருடன்
போரிட்டு வெல்ல பல நாட்களாகுமா?. என்ற
ஐயம் மனதில் எழலாம். அதுமட்டுமின்றி,
வெறும் ஐந்துபேர் ஒருநூறு பேருடன்
போரிட்டு வெல்ல முடியுமா? என்ற
கேள்வியும் கூடவே எழலாம். இக்
கேள்விகளுக்கான
விடைகளை மட்டுமின்றி இப் போரில்
பங்கேற்ற அந்த ஐந்து தமிழ் மன்னர்கள் யார்
யார்? என்றும் கீழே காணலாம்.
தமிழ் மன்னர்கள்:
தொல்தமிழகத்தில் இருந்ததாகக் கூறப்படும்
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்,
பாலை என்ற ஐவகை நிலங்களையும்
ஆண்டு கொண்டிருந்த ஐந்து தமிழ்
மன்னர்கள் தாம் இந்த மகாபாரதப் போருக்குத்
தலைமையேற்றவர்கள் ஆவார். இவர்கள்
ஐவரின் தலைமையில் பல்லாயிரக் கணக்கான
தமிழ் வீரர்களும் நூற்றுவர் தலைமையில்
பல்லாயிரம் எதிரி வீரர்களும் நிலம் அதிரப்
பொருத 'தும்பை' வகைப் போரே மகாபாரதப்
போர் ஆகும்.
இப்போரில் பங்கேற்ற ஐந்து தமிழ் மன்னர்கள்
தான் பிற்காலத்தில் பாண்டவர்களாகிய
தருமன், அர்ஜுனன், பீமன், சகாதேவன்,
நகுலன் என்று அழைக்கப்பட்டனர். இப்
பெயர்கள் இம் மன்னர்களின் இயற்கைப்
பெயர்கள் அல்ல; பட்டப்பெயர்கள்.
ஒவ்வொரு நிலத்தில் இருந்தும் வந்த இம்
மன்னர்களுக்கு அவர்களின்
தனிச்சிறப்பு கருதி இடப்பட்ட தமிழ்ப்
பெயர்களே வடமொழியில்
இவ்வாறு திரிபுற்று வழங்கப்படுகின்றன.
தருமன்:
பாண்டவர் ஐவரில்
முல்லை நிலத்து மன்னனாக
வந்தவனே தருமன் ஆவான். கற்பு நெறியும்
ஒழுக்கமும் சான்ற முல்லை நிலத்தில்
இருந்து வந்தமையால் இம்
மன்னனுக்கு தருமன் என்ற பட்டப்பெயர்
வழங்கப்பட்டது. தருமன் என்ற தமிழ்ப்
பெயரே தர்மா என்று வடமொழியில்
வழங்கப்பட்டது.
தருமன் -----> தர்மா
மேகத்தை தெய்வமாகக்
கொண்டது முல்லை நாடு. இந்த மேகம்
தரும் மழையோ தருமத்தை அடிப்படையாகக்
கொண்டது. ஒரு நாட்டில் தருமம் பிறழும்
போது மழையில்லாமல் போவதை நாம்
அறிவோம். திருவள்ளுவரும் இக்
கருத்தை பல இடங்களில்
வலியுறுத்தி உள்ளார்.
இப்படி முல்லை நிலமானது தருமத்தையே தலைமேற்கொண்டு விளங்குவதால்
இந் நாட்டில் இருந்து வந்த
மன்னனுக்கு அவரது நாட்டின் சிறப்பான
தருமம் பற்றி 'தருமன்' என்ற
பெயரை சூட்டியிருக்கலாம்.
அர்ஜுனன்:
குறிஞ்சி நிலத்தில் இருந்து வந்த
மன்னனே அர்ஜுனன் ஆவான்.
இவனது பட்டப்பெயர் அருஞ்சுனையன்
என்பதாகும். அரிய பல சுனைகளை உடைய
மலைநாட்டில் இருந்து வந்தமையால் இவன்
அருஞ்சுனையன் எனப்பட்டான். இவன் சிறந்த
வேடன் ஆவான். வில் எய்வதில் நிகரற்ற
ஆற்றல் உடையவனாக அறியப்பட்டான்.
அருஞ்சுனையன் என்ற தமிழ்ப்
பெயரே அர்ஜுனா என்று வடமொழியாக்கப்
பட்டிருக்கலாம்.
அருஞ்சுனையன் -----> அர்ஜுனா
பீமன்:
மருத நிலத்தில் இருந்து வந்த தமிழ்
மன்னனே பீமன் ஆவான்.
இவனது பட்டப்பெயர் பருமன் என்பதாகும்.
ஓங்கிய உருவமும் அதற்கேற்ப ஈடான
உடலும் வலிமையும் கொண்டவனாக
இருந்ததால் பெருமை கருதி பருமன்
எனப்பட்டான். பருமம் உடையவன் ஆதலால்
பருமன் எனப்பட்டான். இப் பருமன் என்ற
தமிழ்ப் பெயரே வடமொழியில் பீமன்
என்று வழங்கப்படுகிறது.
பருமன் ----> ப்ரமன் ---> பீமன் ----> பீமா
அதுமட்டுமின்றி, ஐந்து பூதங்களில்
வலிமை மிக்கது காற்று ஆகும். மெல்லிய
தென்றலாய் வருடிக் கொடுப்பதும் புயலாய்
மாறி பொருட்களை புடைபெயர்த்து இடுவதும்
காற்றே ஆகும்.
வலிமையின்றி தொய்ந்து கிடக்கும்
ஒரு டயருக்குள் காற்றினை அடித்தவுடன்
அது ஒரு வண்டியையே தாங்கி நிற்கும்
ஆற்றலைப் பெறுகிறது. இந்த காற்றின்
ஆற்றல் சிறப்புற்று விளங்கும்
மருதநிலத்தில் இருந்து வந்தவன்
என்பதாலும் காற்றைப் போல
எதிரிகளை தனது உடல் வலிமையால்
பந்தாட வல்ல பலசாலி மன்னன் என்பதாலும்
இவனுக்கு இப் பெயர் சூட்டப்பட்டிருக
்கலாம்.
பருமன் என்ற சொல்லில் இருந்து தோன்றிய
ப்ரமன் என்ற சொல்லே பிரம்மாண்டம்
(பெரியது) என்ற சொல்லுக்கும்
வலிமை மிக்க சுழல் காற்றினைக் குறிக்கும்
பிரமம் என்ற சொல்லுக்கும் ஆதாரமாய்
இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ப்ரமன் ----> பீமன் (பருமையும் வலிமையும்
கொண்டவன்)
ப்ரமன் ----> ப்ரமாண்டம் (பெரியது)
ப்ரமன் ------> ப்ரமம் (வலிமையான
சுழல்காற்று)
சகாதேவன்:
நெய்தல் நிலத்தில் இருந்து வந்த தமிழ்
மன்னனே சகாதேவன் ஆவான்.
இவனது பட்டப்பெயர் சகடதேவன் ஆகும்.
இப் பெயரே சகாதேவ் என்று வடமொழியில்
வழங்கப்படுகிறது.
சகடதேவன் ------> சகாதேவா
வண்டிச் சக்கரங்களைச் (சகடம்) செய்வதில்
பெயர் பெற்றிருந்தவர்கள் இந் நிலத்து மக்கள்
ஆதலால் அச் சிறப்பு கருதி இவனுக்கு இப்
பெயர் ஏற்பட்டிருக்கலாம். ஐந்துநில
மக்களிலும் கடலில் செல்லும்
மரக்கலங்களை முதலில் கண்டறிந்தவர்கள்
நெய்தல் நில மக்களே ஆவர். கடலில்
இருந்து விளைவிக்கப்பட்ட உப்பினை ஏற்றிச்
செல்லத் தேவையான வண்டியையும்
சக்கரங்களையும் முதலில் கண்டறிந்ததும்
நெய்தல் மக்களாகவே இருக்கலாம்
என்று தோன்றுகிறது. ஏனென்றால் அதிக
விளைபொருட்களை உடைய மருத நிலத்தில்
பொருட்களைக் கடத்த மாடுகள் இருந்தன.
முல்லை நிலத்திலோ குறிஞ்சி நிலத்திலோ வண்டிகளில்
ஏற்றிக் கடத்த வேண்டிய அளவுக்குப்
பொருட்பெருக்கம் இல்லை. பாலைநிலத்தில்
கொள்ளையடிப்பதைத் தவிர
வேலை எதுவும் இல்லை. எஞ்சியுள்ள
நெய்தல் நிலத்தாருக்கு மட்டுமே பெரும்
அளவிலான மீனையும் உப்பினையும் கடத்த
வேண்டிய சூழல் இருந்ததால்
அவர்களே வண்டிகளைக் கண்டறிந்திருக்க
லாம். முதன்முதலில் கையால் தள்ளப்பட்ட
இந்த வண்டிகளில் மாடுகளைப்
பூட்டி இழுக்கும் வழக்கம் பின்னாளில்
ஏற்பட்டிருக்க வேண்டும்.
நகுலன்:
பாலைநிலத்தில் இருந்து வந்த தமிழ்
மன்னனே நகுலன் ஆவான். இவனுடைய
பட்டப்பெயர் நற்குலன் என்பதாகும். இப்
பெயரே நகுலா என்று வடமொழியில்
வழங்கப்படுகிறது.
நற்குலன் -----> நகுலா
முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை என்னும்
நான்கு நிலங்களுக்கும்
தனித்தனியே சிறப்பு உண்டு. ஆனால்
பாலை நிலத்து மக்களுக்கு என்ன
சிறப்பு உள்ளது?
பிறரது பொருட்களை கொள்ளையடிப்பதைத்
தவிர அவர்கள் வேறெதுவும் அறியாதவர்கள்.
இருந்தாலும் தமிழருக்கு எதிரான போர்
என்றதும்
தானாகவே வந்து தனது ஆதரவைக்
காட்டினான் இந் நிலத்து மன்னன்.
தொல்காப்பியர் கூறியதைப் போல இம்
மன்னன் கடைக்குலத்தவனாக
வே இருந்தாலும் ஆதரவு தந்து போர்
புரியத் தயாராக இருந்ததால்
அவனுக்கு 'நல்ல குலத்தவன்' என்ற
பொருளில் 'நற்குலன்' என்ற பட்டப்பெயரைச்
சூட்டியுள்ளது தமிழரின் பரந்த
மனப்பான்மையைக் காட்டுகிறது.
இதுவரை கண்டவற்றை கீழ்க்கண்டவாறு தொகுத்து வழங்கலாம்.
போர் நடந்த இடம்:
இந்தியாவின் தற்போதைய
அரியானா மாநிலத்தில் உள்ள குருசேத்திரம்
என்ற ஊரில் தான் இப்போர் நடந்ததாகக்
கூறப்படுகிறது. தொல்தமிழகப் பகுதிகளில்
தமிழ் மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த
பொழுது ஆஃப்கானிஸ்தானில் இருந்து கைபர்
போலன் கணவாய் வழியாக இந்த
வேற்றினத்தாராகிய நூற்றுவர்கள்
இந்தியாவிற்குள் நுழையத் தலைப்பட்டிருக்க
க் கூடும். அப்பொழுது அவர்களுக்கும் தமிழ்
மன்னர் ஐவருக்கும் இடையில் இந்த
குருசேத்திரம் என்னும் இடத்தில்
வைத்து நடந்த பெரும்போரே இந்த
மகாபாரதப் போராகும். இந்த நூற்றுவர்கள்,
தமிழரின் போர்வீரத்தைப்
பற்றி முன்னரே கேள்விப்பட்டிருக்கக் கூடும்.
அதனால் தான்
அவர்களது படைக்கு நூறு பேர்
தலைமை தாங்கி பெரும் படையாக
வந்துள்ளனர்.
போர்க்காலத்தில் இப் போரில் ஈடுபட்ட தமிழ்
மன்னர் ஐவரின் படைவீரர்களுக்கும்
தேவையான உணவினை அளித்தான்
பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்னும்
தமிழ் மன்னன்
என்று புறநானூறு கூறுகிறது.
அப்படியென்றால் இம் மன்னனுடைய நாடும்
தொல்தமிழகத்தில் தான் இருந்திருக்க
வேண்டும். அப்படி இருந்தால் தான் இவனால்
படைவீரர்களுக்கு குருசேத்திரத்தில்
உணவளித்திருக்க முடியும். இப்போதுள்ள
தமிழகத்தில் இருந்துகொண்டு இதைச்
செய்திருக்க சாத்தியமில்லை.
ஆதாரங்கள்:
மேலே நாம் பல புதிய செய்திகளைக்
கண்டோம். இவை உண்மை என்பதற்கு என்ன
ஆதாரங்கள் உள்ளன என்று காண்போம்.
மேலே கண்ட பல புதிய செய்திகளில்,
பாரதப் போரில் ஈடுபட்ட தமிழ் மன்னர்கள்
ஐவரின் பெயர்களில் வேண்டுமானால்
மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால்
மகாபாரதப்போர் என்பது தமிழ் மன்னர்கள்
ஐவருக்கும் வேற்றினத்தார் நூற்றுவருக்கும்
இடையில் நடந்த போர் தான் என்பதில்
எந்தவித மாறுபாடுமில்லை.
இதை உறுதிசெய்யும் வண்ணம் தமிழ்
இலக்கியங்களில் இப் போர் பற்றிய
குறிப்புக்களும் உள்ளன.
அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம்
வரையாது கொடுத்தோய்
- புறநானூறு - 2
பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பாரதப்
போர் நிகழ்ந்த காலத்தில்
பெருஞ்சோறு அளித்த நிகழ்ச்சியை இப்பாடல்
விவரிக்கிறது.
ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து அவியப்
பேரமர்க் கடந்த கொடிஞ்சி நெடுந்தேர்
ஆராச் செருவின் ஐவர் போல
- பெரும்பாணாற்றுப்படை - 415-417
-பொன்.சரவணன் இளமுனைவர் (தமிழ்)

search பாண்டவர் பாண்டியரே கௌரவர் குறவரே வேட்டொலி 
 இலக்கியம் புராணம் மகாபாரதம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக