வியாழன், 6 ஜூலை, 2017

இராவணன் அரக்கன் சங்ககால இலக்கியம்

aathi tamil aathi1956@gmail.com

19/9/14
பெறுநர்: எனக்கு
 கலித்தொகையும் அரக்கன்
என்றே கூறுகிறது,
இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல -
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை,
நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய்த், தன்
கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்;
கலித்தொகை, பாடல் 38, குறிஞ்சிக் கலி,
இயற்றிவர் கபிலர்.
இமய மலையை வில்லாக(வும்
வாசுகியை நாணாகவும், திருமாலை பாணமாகவும்)
வளைத்த சடாமுடி தாங்கியவனும், உமையும்
அமர்ந்திருந்த உயர்ந்த மலையை, ஐயிரண்டு (பத்து)
தலைகளை உடையவனும் அரக்கர்களின் அரசனுமான
(ராவணன்) கடகங்கள் செறிந்த தன்னுடைய
கைகளை அம்மலைக்கு அடியில் புகுத்தி, அதனைப்
பெயர்க்க முயன்றதைப் போல,
 'ஐயிரு தலையின் அரக்கர் கோமான்'
என்கிறது குறுந்தொகை
 புறநானூற்றின் 378ஆவது பாடலில்
ஒரு குறிப்பு காணப்படுகிறது. சோழன்
செருப்பாழி எறிந்த இளஞ்சேட்
சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடுகிறார்.
மன்னனைக் காண ஒரு பாணன்-பாணி கூட்டம்
வந்திருக்கிறது. பாட்டுப் பாடுபவர்கள். மன்னன்
மகிழ்ந்து போய் அவர்களுக்கு நிறைய பொன்னும்
ஆபரணங்களும் தருகிறான். பாணர்கள் பாவம்.
அவர்கள் இதற்கு முன்னால் அணிகலன்களைப்
பார்த்தில்லை. அளவைப் பார்த்துப்
பார்த்து அணிகலன்களைப் பூட்டிக் கொள்ள
முயல்கிறார்கள். எப்படி? மோதிரத்தை எடுத்துக்
காதில்; காதில் அணிய வேண்டிய
வளையத்தை விரலில்; இடுப்பில் அணிய வேண்டியதைக்
கழுத்தில்; கழுத்தில் அணிய
வேண்டியதை இடுப்பில்..... சிரிக்கிறார் புலவர்.
'பாவம். இந்த எளிய மக்கள் இதற்கு முன்஡னல்
பார்த்திராத அணிகலன்களைக் கொடுத்தாய்.
முன்னே எப்போதும் பார்த்திராத நகைகளை அணியத்
தெரியாமல் இவர்கள் விழிக்கிறார்களே,
அது எப்படி இருக்கிறது தெரியுமா?
கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை....
மிகக் கடுமையாகப் போர் புரியக் கூடிய
இராமனின் துணைவியான சீதையை, இராவணன் தூக்கிச்
சென்றபோது, அவள் தன்னுடைய
அணிகலன்களை ஒரு துணியில் பொதிந்து பூமியில்
நின்றுகொண்டிருந்த வானரங்களுக்கு மத்தியில்
வீசினாள். அந்த அணிகலன்களை எடுத்த குரங்குகள்,
துணி மூட்டையைப் பிரித்துப் பார்த்து,
அணிகலன்களைக் கண்ணுற்று, மேனியில்
அணிவதற்கானவை இவை என்பதை மட்டும் அறிந்து,
இப்படித்தான் கைக்குப் போட வேண்டியதைக்
காதிலும், காதுக்குப் போட வேண்டியதைக்
கையிலும் மாற்றி மாற்றி அணிந்துகொண்டன.
 மணிமேகலையில் இராமாயணம்:
'நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்
பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்
(உலக அறவி புக்க காதை, 10-20)
“நெடியோனாகிய
திருமால் மண்ணில் அவதாரம் புரிந்து,
அவன் அடங்காத பெரிய கடலை அடைத்த போது,
குரங்குகள் பெயர்த்துக் கொண்டு வந்து எறிந்த
பெரிய பெரிய மலைகள் எல்லாம் கடலின் வயிற்றில்
சென்று மறைந்தது போல, இந்த அடங்காப்
பசியை நிரப்ப இடும் மலை மலையான உணவு எல்லாம்
என் வயிற்றின் ஆழத்தில்
சென்று மறைந்து விடுகிறது”.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக