|
22/7/14
| |||
தமிழால் தமிழர் ஆயினர் அன்னவர்
தமிழை ஒழிக்கவும் தளரா துழைத்தனர்.
தமிழால் தமிழர்க்குத் தலைவர் ஆயினர்.
“தமிழால் ஏதுளது“ என்று சாற்றுவர்
தமிழைப் பேசித் தலைவர் ஆயினர்
தமிழை எழுதித் தலைவர் ஆயினர்
“தமிழால் பயன் ஏது“ என்று சொன்னார்.
தமிழர் வாழத் தக்கவை ஆன
எல்லாக் கருத்தையும் இயம்பி வந்தனர்
எல்லா உண்மையும் எடுத்துக் காட்டினர்
அரை நூற்றாண்டாய் அறிவு புகட்டினர்
அந்த அருமைத் தலைவரே இந்நாள்
ஆங்கிலம் தாயாய் அமைக என்றும்
தமிழால் உருப்படோம் என்றும் சாற்றினர்
தமிழர் தலைவர் தமிழாற் பேசியும்
தமிழால் எழுதியும் தந்த கருத்தினைத்
தமிழர் தங்கு தடையின்றி உணர்ந்தனர்
உணர்ந்துதாம் நன்னிலை உற்றனர் என்க.
இதனைத் தலைவரும் ஏற்றுக் கொள்வர்!
அன்றியும் அருமைத் தமிழே அன்றி
வேறுமொழி எமக்கு வராதென
விளம்புவர்.
தமிழே தலைவ ராக்கியது, மற்றும்
தமிழே புகழ்பெறச் செய்த தென்பதை
எவரும் மறுக்க இயலா தன்றோ?
இப்படிப் பட்ட தலைவர் என்பவர்
தமிழில் இலக்கியம் இல்லை என்றனர்
தலைவரைச் செய்தது தமிழிலக் கியமே
தமிழினம்படைத்தது தமிழிலக் கியமே
தமிழைத் திறம்படப் பேசவும் எழுதவும்
வைத்தது யாது? வண்டமிழ் இலக்கியம்!
தமிழ் இலக்கியம். தமிழ் இலக்கணத்தை
உண்டு பண்ண உதவ வில்லை
என்று தமிழர் தலைவர் சாற்றுவர்
அதே நேரத்தில் அந்தத் தலைவர்
முப்ப தாண்டாய் முளைத்த இலக்கியம்
எத்தனை ஆயிரம் என்பதை அறியார்!.
:- பாவேந்தர் பாரதிதாசன்
தமிழை ஒழிக்கவும் தளரா துழைத்தனர்.
தமிழால் தமிழர்க்குத் தலைவர் ஆயினர்.
“தமிழால் ஏதுளது“ என்று சாற்றுவர்
தமிழைப் பேசித் தலைவர் ஆயினர்
தமிழை எழுதித் தலைவர் ஆயினர்
“தமிழால் பயன் ஏது“ என்று சொன்னார்.
தமிழர் வாழத் தக்கவை ஆன
எல்லாக் கருத்தையும் இயம்பி வந்தனர்
எல்லா உண்மையும் எடுத்துக் காட்டினர்
அரை நூற்றாண்டாய் அறிவு புகட்டினர்
அந்த அருமைத் தலைவரே இந்நாள்
ஆங்கிலம் தாயாய் அமைக என்றும்
தமிழால் உருப்படோம் என்றும் சாற்றினர்
தமிழர் தலைவர் தமிழாற் பேசியும்
தமிழால் எழுதியும் தந்த கருத்தினைத்
தமிழர் தங்கு தடையின்றி உணர்ந்தனர்
உணர்ந்துதாம் நன்னிலை உற்றனர் என்க.
இதனைத் தலைவரும் ஏற்றுக் கொள்வர்!
அன்றியும் அருமைத் தமிழே அன்றி
வேறுமொழி எமக்கு வராதென
விளம்புவர்.
தமிழே தலைவ ராக்கியது, மற்றும்
தமிழே புகழ்பெறச் செய்த தென்பதை
எவரும் மறுக்க இயலா தன்றோ?
இப்படிப் பட்ட தலைவர் என்பவர்
தமிழில் இலக்கியம் இல்லை என்றனர்
தலைவரைச் செய்தது தமிழிலக் கியமே
தமிழினம்படைத்தது தமிழிலக் கியமே
தமிழைத் திறம்படப் பேசவும் எழுதவும்
வைத்தது யாது? வண்டமிழ் இலக்கியம்!
தமிழ் இலக்கியம். தமிழ் இலக்கணத்தை
உண்டு பண்ண உதவ வில்லை
என்று தமிழர் தலைவர் சாற்றுவர்
அதே நேரத்தில் அந்தத் தலைவர்
முப்ப தாண்டாய் முளைத்த இலக்கியம்
எத்தனை ஆயிரம் என்பதை அறியார்!.
:- பாவேந்தர் பாரதிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக