Posted February 26, 2007 -அருச்சுனா- 1987 ஆம் ஆண்டின் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் கூறப்பட்ட மிக முக்கியமான ஒரு விடயம் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு தனி அலகாக இணைக்கப்பட வேண்டும் என்பதாகும். எமது தேசத்தின் குரல் திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் போரும் சமாதானமும் - விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாறு என்ற நூலில் இவ்விடயம் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. ஒரு தனித்துவமான நிர்வாக அலகாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்பதை இத் தீர்வுத்திட்டத்தின் மிக முக்கிய அம்சமாகக் கொள்ளலாம். அன்றைய ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அரசாங்கம் இவ் இணைப்பினை வேண்டா வெறுப்பாக ஒரு நிர்ப்பந்தம் காரணமாக ஏற்றுக்கொண்டது. இன்றைய மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் தனது அரசியற் கூட்டாளி ஜே.வி.பியினரின் உதவியுடன சிறிலங்காவின் கங்காரு நீதிமன்றத்தின்; தீர்ப்பின் மூலம் வடக்கு, கிழக்கு இணைப்பினை இரத்துச் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத் தீர்ப்பிற்கு அமைவாக 2007 ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாகப் பிரிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு மதிப்பளித்து இந்நடவடிக்கையை மேற்கொள்வதாக சர்வதேச சமூகத்திற்குக் காட்டுகின்ற சிறிலங்கா அரசாங்கம், நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்படாத ஒரு விடயத்தையும் இதனோடு சேர்த்து நடைமுறைப்படுத்த முற்படுவது பெரிதும் கண்டுகொள்ளப்படாமல் விடப்படுவதாகத் தெரிகின்றது. உயர்நீதிமன்றம் தமிழர் தாயகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு உத்தரவிட்டது. ஆனால் மகிந்தவின் அரசாங்கமோ தமிழர் தாயகத்தை மூன்றாகப் பிரிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. வடமாகாணம் ஒரு நிர்வாக அலகாகவும், கிழக்கு மாகாணம் இரண்டு நிர்வாக அலகுகளாகவும்; பிரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருகோணமலை தவிர்ந்த கிழக்கு மாகாணம் (மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள்) ஒரு நிர்வாக அலகாகவும் திருகோணமலை ஒரு தனியான நிர்வாக அலகாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வடமாகாணம், திருகோணமலை தவிர்ந்த கிழக்கு மாகாணம் என்பன மாகாணசபை அரசாங்கத்தின்கீழ் நிர்வகிக்கப்படுகின்ற அதேநேரத்தில் திருகோணமலை மாவட்டம் நேரடியாக மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தின்கீழ் கொண்டு வரப்படும் எனச் செய்திகள் கூறுகின்றன. இது உண்மையாயின் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை நடைமுறைப்படுத்துதல் என்று கூறிக்கொண்டு தமிழர் தாயகத்தினை கூறுபோடும் மற்றுமொரு சதித்திட்டத்தினை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது. 1940-களின் பிற்பகுதியிலிருந்து வரண்ட பிரதேசக் குடியேற்றத் திட்டங்கள், கிராம விரிவாக்கத் திட்டங்கள், அத்துமீறிய குடியேற்றங்களை ஒழுங்குபடுத்துதல், மற்றும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் என்ற முகமூடிகளை அணிந்து கொண்டு சிங்கள அரசாங்கங்கள் தமிழர் தாயகத்தைச் சூறையாடி, தமிழர் தாயகம் என்ற எண்ணக்கருவினை சிதைக்க முற்பட்டன. இன்று உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ற முகமூடியை அணிந்து கொண்டு தமிழர் தாயகத்தை - தமிழர்களின் இருப்பினை கேள்விக்குறியாக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட ஆரம்பித்துள்ளது. தமிழர்களை அழிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் அணியும் முகமூடிகள்தான் காலத்திற்குக்காலம் வேறுபடுமேயொழிய, அம்முகமூடிகளுக்குப் பின்னாலுள்ள சிங்கள பௌத்த பேரின வாதத்தின் கோரமுகம் கடந்த 60 ஆண்டுகளாக ஒரேமாதிரியாகவே இருந்துவந்துள்ளது என்பதே உண்மையாகும். 1985 ஆம் ஆண்டு பெங்களுர்ப் பேச்சுவார்த்தையின்போது அன்றைய சிறிலங்கா அரசாங்கத்தின் சனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வே.பிரபாகரன் அவர்களிடம் ஒரு கோரிக்கையினை விடுத்தனர். வட மாகாணத்திற்கு பிரபாகரனை முதலமைச்சர் ஆக்குவதாகவும் கிழக்கு மாகாணத்தை மூன்றாகப் பிரிப்பதற்கு தயாரிக்கப்பட்ட திட்டத்திற்கு சம்மதிக்கும்படியும் வற்புறுத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், தமிழர் தாயகத்தை கூறுபோடும் திட்டத்தை ஏற்க மறுத்தார். ஆனால் அத்திட்டத்தினை இன்று நீதிமன்றத் தீர்ப்பு என்ற பேரில் மகிந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்த முற்பட்டுள்ளது. சிங்கள தேசத்தின் பௌத்த பேரினவாதிகள் ஆரம்பகாலம் தொட்டே தமிழர் தாயகத்தினை ஏற்கமறுத்தே வந்துள்ளனர். தமிழர் தாயகம் என்பது ஒரு மாயை என்பதே மகாவம்ச காலம் தொட்டு இன்றுவரை பௌத்த பேரினவாதிகளின் சிந்தனையாக இருந்து வந்துள்ளது. ஆனால் இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் தமிழர் தாயகமாகவே இருந்து வந்துள்ளது என்பது வரலாற்று உண்மையாகும். இந்;துமா சமுத்திரத்தில் இந்திய உபகண்டத்திற்கு தெற்கே அமைந்துள்ள ஒரு சிறிய தீவு இலங்கையாகும். 1505 இல் போர்த்துக்கீசரின் வருகையோடு இத்தீவில் அந்நியராட்சி ஏற்பட்டது. போர்த்துக்கீசரின் வருகையின் போது இத்தீவில் கோட்டை இராச்சியம், கண்டி இராச்சியம், யாழ்ப்பாண இராச்சியம் என மூன்று அரசுகள் இங்கு காணப்பட்டன. இதற்கும் மேலாக வன்னி மற்றும் மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிரதேசங்கள் வன்னித் தமிழ்ச் சிற்றரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்தன. வன்னியர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்த பிரதேசங்கள் யாழ்ப்பாண இராச்சியத்தின் எல்லையிலிருந்து கிழக்குக் கரையோரமாக தெற்கே யால - பாணம வரை பரந்திருந்தது. திருகோணமலையும் மட்டக்களப்பும் புவியியல் மற்றும் அரசியல் ரீதியாக ~வன்னி| என்று அழைக்கப்பட்டது. 1591 இல் போர்த்துக்கீசர் யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது படையெடுத்து மன்னன் புவிராஜசிங்கனைக் கொன்று அதனைக் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து தமக்கு ஆதரவான எதிர்மன்னசிங்கன் என்பவனை யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னனாக முடிசூட்டினர். 1616 இல் இவனின் மரணத்தைத் தொடர்ந்து இரண்டாம் சங்கிலி மன்னன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். இவன் போர்த்துக்கீசரின் ஆதிக்கத்தை ஏற்கமறுத்து அவர்களுக்கு எதிராகப் போராடினான். இதனைத் தொடர்ந்து போர்த்துக்கீசர் சங்கிலி மன்னன் மீது படையெடுத்து 1620 இல் அவனைச் சிறைபிடித்து கொழும்பிற்குக் கொண்டு சென்றனர். இதன் பின்னர் யாழ்ப்பாண இராச்சியம் முழுமையாகவும் நேரடியாகவும் போர்த்துக்கலின் முடியாட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1593 இல் முதலாம் இராஜசிங்கனின் மரணத்துடன் ஏற்பட்ட சீதாவாக்கை இராச்சியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இத்தீவின் தென்மேற்குக் கரையோரப் பிரதேசம் முழுவதும் போர்த்துக்கீசரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. கோட்டை இராச்சியத்தின் மன்னனாக இருந்த தர்மபால போர்த்துக்கீசரின் கைப்பொம்மையாகவே (குபைரசநாநயன) இருந்தான். 1597 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி தர்மபாலாவின் மரணத்தைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் சட்டரீதியாக கோட்டை இராச்சியம் போர்த்;துக்கலின் முடியாட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. இவ்வகையில் யாழ்ப்பாண இராச்சியம், கோட்டை இராச்சியம் என்பன தமது சுதந்திரத்தினை போர்த்துக்கீசரிடம் இழந்தன. கண்டி இராச்சியம் தொடர்ந்தும் சுதந்திர அரசாக விளங்கியது. போர்த்துக்கீசர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் முழுவதனையும் தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தபோதிலும் தமிழர் பிரதேசங்களையும் சிங்களவர் பிரதேசங்களையும் ஒன்றாக இணைக்கவில்லை. இவ்விரண்டு பிரதேசங்களும் தனித்தனியாகவே நிர்வகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 1656 ஆம் ஆண்டு மே மாதம் கொழும்புத் துறைமுகம் டச்சுக்காரரிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து இத்தீவில் டச்சுக்காரரின் ஆட்சி ஆரம்பமாகியது. எனினும் முழுமையாகப் போர்த்துக்கீசரை இத்தீவிலிருந்து வெளியேற்றுவதற்கு டச்சுக்காரருக்கு மேலும் இரண்டாண்டுகள் எடுத்தன. 1658 ஆம் ஆண்டு யூன் மாதம் யாழ்ப்பாணம் டச்சுக்காரரால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து இத்தீவின்மீது போர்த்துக்கீசருக்கு இருந்த கடைசிப்பிடியும் தளர்ந்தது. எனினும் தொடர்ந்தும் கண்டி இராச்சியம் சுதந்திர அரசாக விளங்கியது. டச்சுக்காரர் தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களை நிர்வாக ரீதியாக மூன்றாக வகைப்படுத்தினர். 1. யாழ்ப்பாண நீதி மாவட்டம் 2. கொழும்பு நீதி மாவட்டம் 3. காலி நீதி மாவட்டம் யாழ்ப்பாண நீதி மாவட்டம் என்பது தமிழர் பிரதேசங்களான இன்றைய வடக்கு, கிழக்குப் பிரதேசங்களை உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே டச்சுக்காரரும் கூட தமிழர் பிரதேசங்களை இத்தீவின் ஏனைய பிரதேசங்களோடு இணைக்காமல் தனியான நிர்வாகப் பிரதேசமாக வைத்திருந்தனர். 1796 ஆம் ஆண்டு இத்தீவின் கரையோரப் பிரதேசங்களை டச்சுக்காரரிடமிருந்து பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக்கம்பனி கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆங்கிலேய ஆட்சி இத்தீவில் உதயமாகியது. திருகோணமலை 1797 ஆகஸ்டிலும், மட்டக்களப்பு செப்ரெம்பரிலும், யாழ்ப்பாணம் சில நாட்களின் பின்னரும் பிரித்தானியரிடம் வீழ்ச்சியடைந்தது. குறுகிய காலத்தில் மன்னாரும் அவர்கள் வசமாகி, பிரித்தானியர் கரையோரமாக முன்னேறி வழியில் நீர்கொழும்;பைத் தமதாக்கி, கொழும்பிற்கு அண்மையிலுள்ள களனி கங்கையை 1798 பெப்ரவரியில் கடந்தனர். அதே ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதியன்று கொழும்பு வீழ்ந்ததைத் தொடர்ந்து இலங்கையில் டச்சுக்காரரின் ஆட்சி முடிவிற்கு வந்தது. 1815 ஆம் ஆண்டு கண்டி இராச்சியம் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து இத்தீவு முழுவதும் பிரித்தானியரின் ஆளுகைக்குட்பட்டது. எனினும் ஏனைய பிரதேசங்களைப்போல கண்டி இராச்சிய மக்களும் கண்டிப் பிரதானிகளும் ஆங்கிலேயே ஆதிக்கத்தினை இலகுவில் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆங்காங்கே ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக எதிர்ப்புக்கள் கிளம்பிய வண்ணம் இருந்தன. வெல்லச என்ற பகுதியில் முஸ்லிம் ஒருவர் மக்கட் பிரதானியாக ஆங்கிலேயரால் நியமிக்கப்பட்டார். பிரித்தானியரின் பிரித்தாளும் இத்தந்திரம் கண்டிப் பிரதானிகள் மத்தியில் வெறுப்புணர்வினை ஏற்படுத்தியது. இதன் உச்சக்கட்டமாக ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு பெரும் கிளர்ச்சியே 1817-1818 காலப்பகுதியில் கண்டிய மாகாணங்களில் வெடித்தது. ஊவா, வெல்லச பகுதிகளிலேயே இக்கிளர்ச்சி மையம் காணப்பட்டது. ஆங்கிலேயப் படைகள் எங்கெங்கே சிறு குழுக்களாக செயற்பட்டு வந்தனவோ அங்கெல்லாம் அக்குழுக்கள் இனங்காணாதவர்களால் திடீர் திடீரெனக் கொல்லப்பட்டன. கெரில்லா யுத்தத்தில் ஈடுபட்டவர்களை இனங்கண்டு அழிக்கமுடியாத நிலையில் ஆங்கிலேயப் படைகள் பொதுமக்களைத் தாக்கியதுடன் அவர்களின் குடியிருப்புக்களையும் அழித்தன. இதன்மூலம் மக்கள் மனதில் பயத்தினை ஏற்படுத்தி அவர்கள் மத்தியில் கெரில்லாப் போராளிகளுக்கு இருந்த ஆதரவினை அழிப்பதற்கு ஆங்கிலேயப் படைகள் முற்பட்டன. இறுதியில் இந்தியாவிலிருந்து படைகளை வரவழைத்தே ஆங்கிலேய ஆட்சியாளரால் இக்கிளர்ச்சியினை அடக்கக்கூடியதாக இருந்தது. அதுமட்டுமன்றி இப்புரட்சியினை முன்னின்று நடத்திய கெப்பிட்டிப்பொல என்பவனோடு இணைந்து போராடிய மடுகல்ல என்ற மக்கட் பிரதானி தனிப்பட்ட காரணங்களுக்காகப் பிரிந்து சென்று தனிப்படை ஒன்றை அமைத்தான். இச் செயற்பாடும் இக்கிளர்ச்சியின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. 1818 செப்ரெம்பர் மாதமளவில் ஊவா, வெல்லச பகுதிகளை அரசாங்கம் தோற்கடித்ததைத் தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் மாத்தளை, தும்பறை, நுவரகலாவிய (அநுராதபுரம்) ஆகிய பிரதேசங்களை நோக்கி நகர்ந்தனர். 1818 ஆம் ஆண்டுக்கலவரமும் அதனைத்தொடர்ந்து மக்கள் எழுச்சியும் ஆள்பவர்களின் மனதில் பாதுகாப்பற்ற உணர்வொன்றினை ஏற்படுத்தியது. இதனால் கெரில்லாப் போர் முறையில் ஆற்றல் கொண்டிருந்த கிளர்ச்சியாளர்களின் புகலிடமாக இருந்த மத்திய மலை நாட்டை ஏனைய பிரதேசங்களுடன் இணைப்பது என அரசாங்கம் தீர்மானித்தது. இவ்விணைப்பினை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டது. 1820 ஆம் ஆண்டு இலங்கையின் ஆளுநராக பதவியேற்ற திரு. எட்வேட் பார்ண்ஸ் (நுனறயசன டீயசநௌ) என்பவர் அன்றைய இலங்கையின் முதல் மூன்று தேவைகள் என்ன என்பது பற்றிப் பின்வருமாறு கூறினார். முதல் தேவை வீதிகள். இரண்டாவது தேவை வீதிகள். மூன்றாவது தேவை வீதிகள். (றூயவ ஊநலடழn நெநனநன றயளஇ கசைளவ சழயனளஇ ளநஉழனெ சழயனளஇ வாசைன சழயனள) இன்று இலங்கையில் காணப்படும் பல வீதிகள் இவருடைய காலத்திலேயே அமைக்கப்பட்டவையாகும். 1821 ஆம் ஆண்டு கொழும்பு - கண்டி வீதி திறக்கப்பட்டது. இக் கண்டி வீதியிலிருந்து திருகோணமலை, யாழ்ப்பாணம் வரை கிளைகள் திறக்கப்பட்டன. கிழக்கே திருகோணமலை, மட்டக்களப்பு, கோமாரி ஆகிய பிரதேசங்களும், தெற்கே அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி ஆகிய பிரதேசங்களும், மேற்கே களுத்துறை, கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் ஆகிய பிரதேசங்களும் வீதிகள் மூலம் கண்டிப் பிரதேசங்களோடு இணைக்கப்பட்டன. இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் வடக்கையும் கிழக்கையும் இணைத்து எந்தவொரு வீதியினையும் ஆங்கிலேயர் அமைக்கவில்லை. கண்டிப் பிரதேசங்களை இலங்கையின் கரையோரப் பிரதேசங்களோடு இணைத்து கண்டி இராச்சியத்தின் தனித்துவத்தினை அழித்தொழிப்பதை ஒரு முக்கிய நோக்காகக் கொண்டு ஆங்கிலேயர் வீதிகளை அமைத்தனர். இதனால் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களையும் வீதிகளால் இணைக்க வேண்டிய தேவை ஆங்கிலேயருக்கு இருக்கவில்லை. ஆனால் இலங்கையின் சுதந்திரத்தின் பின் அரை நூற்றாண்டு கழிந்த பின்னரும் கூட இலங்கை அரசாங்கம் வடக்கையும் கிழக்கையும் இணைத்து கரையோரமாக வீதியை அமைக்கவில்லை. கண்டி இராச்சியத்தின் தனித்துவத்தினை அழிப்பதற்காகவே கண்டிப் பிரதேசத்தோடு இலங்கையின் ஏனைய பிரதேசங்களை இணைத்து ஆங்கிலேயே அரசாங்கம் வீதிகளை அமைத்தது. மறுபுறம் தமிழ் இராச்சியத்தின் தனித்துவத்தினை அழிப்பதற்காகவே இலங்கை அரசாங்கம் வடக்கையும் கிழக்கையும் இணைத்து வீதியை அமைக்கவில்லை. இன்றும் வடக்குக்கும் கிழக்குக்குமிடையிலான வீதிப் போக்குவரத்து சிங்களப்; பிரதேசங்களின் ஊடாகவே நடைபெறுகின்றது என்பது கசப்பான ஓர் உண்மையாகும். ஒருபுறம் 1821-1831 காலப்பகுதியில் வீதி அமைப்பினூடாக கண்டிப் பிரதேசங்களை இலங்கையின் ஏனைய பிரதேசங்களோடு இணைத்த ஆங்கிலேய அரசாங்கம், மறுபுறம் நிர்வாக ரீதியாக நாட்டை ஒன்றுபடுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டது. 1820-களில் பிரித்தானிய அரசாங்கம் இலங்கையின் நிர்வாகத்தை விசாரிப்பதற்காக ஒரு ஆணைக்குழுவை உருவாக்கத் தீர்மானித்தது. மேஜர். கோல்புறூக் என்பவரை ஆணையாளராகக் கொண்ட அரச ஆணைக்குழுவொன்று 1928 சனவரி 18 ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டது. கோல் புறூக் இலங்கைக்கு 1829 ஏப்ரல் 11 ஆம் திகதி வந்தார். இவரோடு இணைந்து பணியாற்றுவதற்காக திரு.சார்ல்ஸ் கமறோன் என்ற நீதி நிர்வாக ஆணையாளர் 1830 ஏப்ரல் 30 ஆம் திகதி இங்கு அனுப்பப்பட்டார். இலங்கையின் நிர்வாக அமைப்பு, குடியேற்ற அரசாங்கத்தின் வருமானம் என்பன தொடர்பான பரிந்துரைகளை மேற்கொள்ளுமாறு கோல்புறூக் பணிக்கப்பட்டார். இலங்கையின் நீதி பரிபாலனம் தொடர்பான அறிக்கையைத் தயாரிக்கும் பணி சார்ல்ஸ் கமறோனிடம் விடப்பட்டது. இவ்விரண்டு ஆணையாளர்களும் 1831 பெப்ரவரி 3 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் இங்கிலாந்து சென்று மூன்று பிரதான அறிக்கைகளை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தனர். 1831 டிசம்பர் 24 இல் நிர்வாகம் பற்றிய அறிக்கையும் 1832 சனவரி 31 இல் வருமானம் பற்றிய அறிக்கையும் நீPதி நிர்வாகமும் நடைமுறையும் பற்றிய அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டன. இவ் அறிக்கைகளே கோல்புறூக் - கமறோன் சீர்திருத்தங்கள் என அழைக்கப்படுகின்றது. 1833 ஆம் ஆண்டு கோல்புறூக்-கமறோன் ஆணைக்குழுவின் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தன. கோல்புறூக்கினால் பரிந்துரைக்கப்பட்ட நிர்வாக முறையினை நடைமுறைப்படுத்துவதற்குப் பொருத்தமாக 01-10-1833 இல் நிர்வாக ரீதியாக இலங்கை ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. ஆனால் இவ்வாறு 1833 இல் இலங்கை நிர்வாக ரீதியாகப் பிரிக்கப்பட்டது என்று கூறுவது தவறானதாகும். உண்மையில் கோட்டை இராச்சியம், யாழ்ப்பாண இராச்சியம், கண்டி இராச்சியம் மற்றும் வன்னிச் சிற்றரசுகள் என்பன ஐந்து மாகாணங்கள் என்ற பெயரில் 1833இல் ஒன்றிணைக்கப்பட்டன என்று கூறுவதே பொருத்தமானதாகும். அதுமட்டுமன்றி தமிழர் தாயகம் வடக்கு, கிழக்கு எனப் பிரிக்கப்பட்டது 1-10-1833 இலேயாகும். இவ்வாறு 1-10-1833ல் பிரிக்கப்பட்ட தமிழர் தாயகம் 29-8-1987இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் தற்காலிகமாக இணைக்கப்பட்டது. இத்தற்காலிக இணைப்பு 1-1-2007 இல் இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் தமிழர் தாயகம் வடக்கு, கிழக்கு எனத் துண்டாடப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் கருத்து அறியப்படாமல்- அவர்களின் அனுமதியின்றி 1-10-1833இல் தமிழர் தாயகத்தினை வடக்கு, கிழக்கு எனப் பிரித்ததுமட்டுமன்றி, தமிழர் தாயகம் சிங்களவர் பிரதேசங்களோடு ஆங்கிலேயர்களால் இணைக்கப்பட்டது. அன்று தமிழர் தாயகத்தில் வாழ்ந்த மக்களின் அனுமதியின்றி வடக்கு, கிழக்கு எனப் பிரிக்கப்பட்ட தமிழர் தாயகத்தினை இன்று ஒன்றிணைப்பதற்கு அம் மக்களின் அனுமதி தேவை என்ற நிபந்தனை போடப்படுவது வியப்பிற்குரிய ஒரு விடயமே. 1833 ஆம் ஆண்டு ஐந்து மாகாணங்கள் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை ஒரே நிர்வாக அலகாக ஆட்சி செய்யப்படலாயிற்று. 1833 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐந்து மாகாணங்களும் அவற்றின் தலைநகரங்களும் பின்வருமாறு: 1. வட மாகாணம் - யாழ்ப்பாணம் 2. கிழக்கு மாகாணம் - திருகோணமலை 3. மேல் மாகாணம் - கொழும்பு 4. தென் மாகாணம் - காலி 5. மத்திய மாகாணம் - கண்டி இவ்வாறான நிர்வாகக் கட்டமைப்பினை உருவாக்கியதற்கான முதற்காரணம் நிர்வாக செயற்றிறனை அதிகரிப்பதற்காக இருந்தபோதிலும் அதிகபட்சமான பொருளாதார, அரசியல் நலன்களைப் பெறுவதற்காக, சட்டம், ஒழுங்கு என்பவற்றைக் கொண்டதொரு ஆட்சியை மேலும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காவும் இதைச் செய்தனர். 1818 ஆம் ஆண்டு கண்டிக் கலவரமும் அதனைத்தொடர்ந்து மக்கள் எழுச்சியும் ஆள்பவர்களின் மனதில் பாதுகாப்பற்ற உணர்வொன்றினை ஏற்படுத்தியது. இதனால் கெரில்லாப் போர் முறையில் ஆற்றல் கொண்டிருந்த கிளர்ச்சியாளர்களின் புகலிடமாக இருந்த மத்திய மலைநாட்டை ஏனைய பிரதேசங்களுடன் இணைப்பது என அரசாங்கம் தீர்மானித்தது. இப்பின்னணியிலேயே மாகாண எல்லைகள் வகுக்கப்பட்டன. கண்டி இராச்சியத்தின் பிரதேசங்கள் சிதறடிக்கப்பட்டு, கரையோரப் பிரதேசங்களோடு இணைக்கப்பட்டன. எஞ்சிய கண்டி இராச்சியப் பிரதேசங்கள் மத்திய மாகாணமாக மாற்றப்பட்டது. 1845 ஆம் ஆண்டுவரை இலங்கை ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. 1-10-1845 இல் மேல் மாகாணம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1. மேல் மாகாணம் 2. வடமேல் மாகாணம் 1845 ஆம் ஆண்டு வடமேல் மாகாணம் உருவாக்கப்பட்டமைக்கு பின்வருமாறு காரணம் கூறப்படுகின்றது. சந்தர்ப்பத்திற்கேற்றவாறு அரசியற் காரணங்;களுக்காக பழைய கண்டி இராச்சியத்தின் மாகாணப் பிரிவுகளை வௌ;வேறாகப் பிரிப்பதன் மூலம் கண்டி மக்களின் ஒற்றுமையைக் குலைக்க முடியும். மாகாண எல்லைகள் என்ன அடிப்படையில் உருவாக்கப்பட்டன என்பதனை இதன்மூலம் அறியமுடிகின்றது. தமது ஆதிக்கத்தினைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மக்களையும் மண்ணையும் பிரித்தாளுவது பிரித்தானியருக்கு கைவந்த கலை. ஆங்கிலேயரிடம் கற்ற இப் பாடத்தினை குருவை மிஞ்சிய சீடனாக இலங்கை அரசாங்கம், தமிழ் பேசும் மக்களையும் அவர்களது மண்ணையும் தந்திரமாகப் பிரித்தாளுகின்றது. 06-09-1873 இல் வடமத்திய மாகாணம் உருவாக்கப்பட்டது. வட மாகாணத்திலிருந்து நுவரகலாவிய மாவட்டம் (தற்போதைய அநுராதபுர மாவட்டம்), கிழக்கு மாகாணத்திலிருந்து தமன்கடுவ மாவட்டம் (தற்போதைய பொலநறுவை மாவட்டம்), வடமேல் மாகாணத்திலிருந்து ஏழுகோறளையின் தமிழ்ப்பற்றுப் பிரதேசம் (தெமளப்பற்று) என்பவற்றை இணைத்து வடமத்திய மாகாணம் உருவாக்கப்பட்டது. 05-02-1886 இல் மத்திய மாகாணம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1. மத்திய மாகாணம் 2. ஊவா மாகாணம் 04-01-1889 இல் மேல் மாகாணம் இரண்டாகப் பிரிக் கப்பட்டது. 1. மேல் மாகாணம் 2. சப்பிரகமுவ மாகாணம் இம் மாற்றங்களைத் தொடர்ந்து இலங்கையில் ஒன்பது மாகாணங்கள் உருவாகின. பிரித்தானியராட்சிக் காலத்தில் தமிழர் பிரதேசங்கள் சிங்களவர் பிரதேசங்களோடு இணைக்கப்பட்ட போதிலும் தமிழர் பிரதேசங்கள் தனிப் பிரதேசங்களாக அவ்வப்போது வெளிப்படுத்தப்பட்டிருந்தன. பிரித்தானிய குடியேற்ற அரசாங்கத்தில் முதற் செயலதிபராக 1799 இல் பதவியேற்ற சேர் எச்.கிளைய் கோன் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பத்தில் தீவின் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் தமிழர் தாய் நிலம் இருந்ததெனக் குறிப்பிடுகின்றார். இரு வேறு தேசியங்கள் மிகவும் புராதன காலத்திலிருந்தே தமக்கான நிலவுடமையினைத் தமக்குள் பிரித்து வைத்திருக்;கின்றனர். இவற்றுள் முதலாவதான சிங்களவர் நாட்டின் உட்பகுதியில் அதாவது வளவை ஆற்றிலிருந்து சிலாபம் வரையிலான தெற்கு, மேற்குப் பகுதிகளில் வசித்தனர். இரண்டாவதான மலபார்கள் (தமிழர்) வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குச் சொந்தக்காரராக இருந்தனர். இவ்விரு தேசியங்களும் தத்தம் மதம், மொழி, பழக்க வழக்கங்கள் என்பவற்றில் முற்றுமுழுதாக வேறுபட்டவர்கள். 1827 ஆம் ஆண்டுக் குடிசன மதிப்பீட்டு அறிக்கையில் தமிழ் மாவட்டங்கள், சிங்கள மாவட்டங்கள் என இரண்டாகப் பிரித்து சனத்தொகை காட்டப்பட்டுள்ளது. தமிழ் மாவட்டங்கள் என்பதன் கீழ் பின்வருவன உள்ளடக்கப்பட்டிருந்தன. மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார், நெடுந்தீவு. 1834 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஊநலடழn புயணநவவநச என்ற நூலில் தமிழ்ப் பிரதேசங்களும் சிங்களப் பிரதேசங்களும் தெளிவாக வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன. தமிழர்கள் இலங்கையின் வடக்கு மற்றும் வட கிழக்குப் பிரதேசத்தில்; வாழ்கின்றனர். மாகம்பற்று - குமுக்கன் ஆற்றினை எல்லையாகக் கொண்டு யாழ்ப்பாணத்தைச் சுற்றி புத்தளத்தின் தெற்கு எல்லைவரை அவர்களது மாவட்டங்கள் பரந்திருந்தன. வுhந ஆயடயடியசள (ழச வுயஅரடள) ழஉஉரில வாந ழெசவாநசn யனெ ழெசவா நயளவநசn pயசவள ழக ஊநலடழn யனெ வாநசை னளைவசiஉவள நஒவநனெ கசழஅ வாந முரஅரமயn யயச டிழரனெiபெ வாந ஆயாயபயஅpயவவழழ வழ வாந ளழரவாநசn டiஅவை ழக Pரவவயடயஅஇ சழரனெ டில துயககயெ. மாகம்பற்று - குமுக்கன் ஆற்றிலிருந்து வடக்கெல்லையாக சிலாபம் வரையுள்ள கரையோரப் பிரதேசங்களிலும் உட்புற மாவட்டங்களிலும் சிங்களவர்கள் வாழ்கின்றனர். வுhந ளுiபொயடநளந inhயடிவை வாந iவெநசழைச னளைவசiஉவள யனெ வாந ளநய உழயளவள நஒவநனெiபெ கசழஅ முரஅரமயn யயசஇ டிழரனெiபெ ஆயாயபயஅpயவவழழ வழ வாந ழெசவாநசn டiஅவை ழக ஊhடையற 1831 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின் போது இலங்கையின் சனத்தொகைப் புள்ளிவிபரங்கள் பின்வரும் மூன்று பிரதேசங்களாக வகைப்படுத்தப்பட்டு காட்டப்பட்டுள்ளன. சிங்கள மாவட்டங்கள் 448,361 கொழும்பு - 234,791 காலி - 88,242 தங்காலை - 95,582 சிலாபம் - 29,746 தமிழ் மாவட்டங்கள் - 213,641 யாழ்ப்பாணம் - 146,528 திருகோணமலை - 16,335 மட்டக்களப்பு - 27,574 மன்னார் - 20,257 நெடுந்தீவு - 2,947 கண்டி மாகாணங்கள் - 288,486 இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் வரலாற்று ரீதியாக தமிழர் தாயகமாகவே இருந்து வந்துள்ளது. சிறிலங்காவின் சுதந்திரத்தின் பின்னர் பதவிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களினால்; மேற்கொள்ளப்பட்டு வந்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் மூலம்; தமிழர் தாயகத்தில் குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் (தமிழர் தாயகத்தின் தென்பகுதி) தமிழ் மக்கள் சிறுபான்மையினராக மாற்றப்பட்டு வருகின்;றனர் என்பதே தற்போதைய நிலையாகும். சுடு சோற்றினை உண்ண முற்படுகின்ற ஒருவர் சுடு சோற்றின் நடுவே கையை வைத்தால் சூடு தாங்காமல் உடனே கையை எடுக்க வேண்டியிருக்கும். ஆனால் சுடு சோற்றின் ஓரத்திலிருந்து உணவருந்த ஆரம்பித்தால் எதுவித பிரச்சினைகளுமின்றி முழு உணவையும் உண்ணமுடியும். தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளத் திட்டமிட்ட சிறிலங்கா அரசாங்கங்கள் இத்தத்துவத்தினையே கையாண்டன. சிறிலங்கா அரசாங்கம் தனது குடியேற்றத் திட்டங்களை முதலில் அறிமுகப்படுத்திய பிரதேசங்களான அநுராதபுரம், பொலநறுவை என்பன தமிழர் பிரதேசங்களுக்கும் சிங்களவர் பிரதேசங்களுக்குமிடையிலான எல்லைகளாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் வெற்றியைத் தொடர்ந்து தமிழர் பிரதேசங்களின் எல்லைகளில் சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. 1949ஃ50 காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் கல்லோயாக் குடியேற்றத்திட்டம், திருகோணமலை மாவட்டத்தின் தென்பகுதியில் அல்லை, கந்தளாய் குடி யேற்றத்திட்டங்கள் என்பவற்றை சமகாலத்தில் ஆரம்பித்ததன் மூலம் தமிழர் பிரதேசங்களில் தமிழர்களை சிறுபான்மையினராக்கும் திட்டத்தினை அரசாங்கம் ஆரம்பித்து வைத்தது. மறைந்த திரு. எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் 1951 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருகோணமலையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சி மாநாட்டில் பின்வருமாறு கூறினார். பல்தேசிய இனங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் ஒரு சிறுபான்மை இனம் தொடர்ந்து வாழ்வதற்கு சில பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. முதலாவது, எண்ணிக்கை ரீதியான பலம். இரண்டாவது, அதனது வாழ்விடம். ஆனால் இம் முன்தேவைகள் அனைத்தும் ஐக்கியக் தேசிய கட்சி அரசாங்கத்தினால் தகர்க்கப்படுகின்றன. ஏழு இலட்சம் இந்தியத் தமிழர்களின் வாக்குரிமைப் பறிப்பானது தமிழ் மக்களின் வாக்குப்பலத்தை அரைவாசியாக் குறைத்துள்ளது. இப்பொழுது இது தமிழ் மக்களின் வாழ்விடங்களைப் பறிக்கின்றது. இன்று இது கல்லோயாவில். நாளை இது கந்தளாயில் நடைபெறும். பின்னர் பதவியா, வவுனியா, மன்னார் எனத் தொடரும். இந் நடவடிக்கையின் ஆரம்பமாக அமைந்துள்ள கல்லோயாத் திட்டத்தினால் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தாங்கள் வாழும் பிரதேசங்களில் சிறுபான்மைச் சமூகங்களாக மாறிவிடுவர் திரு. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள் 1951 ஆம் ஆண்டு கூறிய விடயம் இன்று எம் கண்முன்னால் நிகழ்ந்து கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது. அடிக்குறிப்புக்களும் விளக்கங்களும் 1. யு ர்ஐளுவுழுசுலு ழுகு ளுசுஐடுயுNமுயு டில மு.ஆ.னுநு.ளுஐடுஏயு 2. வுயஅடை யனெ ஆரளடiஅ ஐனநவெவைநைள ஐn வாந நுயளவ னுநnnளை டீ.ஆஉபுடைஎசயல ஆயசபய ஐளெவவைரவந 2001 3. யு ர்ஐளுவுழுசுலு ழுகு ளுசுஐடுயுNமுயு டில மு.ஆ.னுநு.ளுஐடுஏயு 4. ஊ.ஊhயசடநளஇ Pரடிடiஉ யுனஅinளைவசயவழைn in ஊநலடழnஇ டுழனெழnஇ சுழலயட ஐளெவவைரவந ழக ஐவெநசயெவழையெட யககயசைள 5. யு ர்ளைவழசல ழக வாந ருp-ஊழரவெசல வுயஅடை Pநழிடந in ளுசடையமெய ளு.யேனநளயnஇ யு NயுNனுயுடுயுடுயு PருடீடுஐஊயுவுஐழுNஇ ளுசுஐடுயுNமுயு 1993. 6. யு.து றுடைளழn வுhந டீசநயம-ரி ழக ளுசடையமெய. வுhந ளுinhயடநளந - வுயஅடை ஊழகெடiஉவஇ ர்ரசளவ ரூ ஊழஅpயலெஇ டுழனெழn.1988 7. 1852 இங்கிலாந்து பாராளுமன்ற ஆவணம் ஓஓஏஐ 8. இலங்கை தமிழ் தேசியவாதம் அதன் ஆரம்பத்தோற்றம் பற்றியதோர் ஆய்வு. கலாநிதி முருகர் குணசிங்கம் எம்.வி வெளியீடு தென் ஆசியவியல் மையம் - சிட்னி 2003. 9. சுநுவுருசுN 0கு வுர்நு PழுPருடுயுவுஐழுN ழுகு வுர்நு ஐளுடுயுNனு ழுகு ளுசுஐடுயுNமுயு.இ ஊழுடுழுஆடீழு 1827 10. ஊநலடழn புயணநவவநச - ளுiஅழn ஊயளளi ஊhநநவல 1834 11. ஊநலடழn புயணநவவநச - ளுiஅழn ஊயளளi ஊhநநவல 1834 12. ளுசடையமெய : வுhந யுசசழபயnஉந ழக Pழறநச ஆலவாளஇ னுநஉயனநnஉந ரூ ஆரசனநச. சுயதயn ர்ழழடந ருniஎநசளவைல வுநயஉhநசள கழச ர்ரஅயn சுiபாவள (துயககயெ) 2001 நன்றி: ஈழநாதம் (19.02.07) http://www.tamilnaatham.com/articles/2007/...una20070226.htm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக