ஞாயிறு, 9 ஜூலை, 2017

முத்துலட்சுமி ரெட்டி சின்னமேளம் தேவதாசி

aathi tamil aathi1956@gmail.com

31/7/14
பெறுநர்: எனக்கு
Kathir Nilavan
'தேவதாசி முறை எதிர்ப்புப் போராளி'
முத்துலெட்சுமி அம்மையார்
பிறந்த நாள்
30.7.1886
விசயநகரப் பேரரசு ஆட்சிக்காலத்தில் கோயில்களில்
பார்ப்பனீயம் முழு வீச்சோடு கோலோச்சியது.
அப்போது ஆடல்,பாடல், பூசை பராமரிப்புப் பணிகள்
மேற்கொள்வதற்காக பணியமர்த்தப்பட்ட பெண்கள் பாலியல்
சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டனர். இறைவனுக்காக
அர்ப்பணிக்கப்பட்டவர் எனும் பொருளில் தேவதாசிகள்
என்று அழைக்கப்பட்டனர்.
தாசி என்னும் சொல் அடிமை என்ற பொருள் கொண்டவை.
தாசி, தாசன் சொற்கள் தமிழர் மரபில் இல்லை.
தேவதாசி என்ற சொல் கொண்ட முதல் கல்வெட்டு கர்நாடக
மாநிலம் அலனஹள்ளியில்
உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்ட இந்த தாசிப்பெண்கள்
பார்ப்பனர்களாலும், மன்னர்களாலும் விலை மகளிராக
மாற்றப்பட்டனர்.
இதற்கெனவே இசை வேளாளர் எனும் சமூகம்
உருவாக்கப்பட்டது.
தலைமுறை தலைமுறையாக தேவதாசிப் பெண்கள்
அனுபவித்த கொடிய துயரத்திற்கு முற்றுப்
புள்ளி வைக்க அக்குலத்தில் தோன்றியவர் தான்
முத்துலெட்சுமி. இவரது தந்தை கிருஷ்ண சாமி.
பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர். இவரும் நடிகர்
ஜெமினி கணேசன் தந்தையும் உடன் பிறந்தவர்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணசாமி குழந்தையின்மை காரணமாக
இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த
சந்திரம்மா என்பவரை இரண்டாவது திருமணம்
செய்து கொள்கிறார். இந்த இணையருக்கு பிறந்த
எட்டு குழந்தைகளில் ஒருவர் தான் முத்துலெட்சுமி.
அன்று வெள்ளையர் ஆட்சி என்ற போதிலும் பெண்
கல்வி புறக்கணிக்கப்பட்டது.
அப்போது முத்துலெட்சுமி தந்தையாரோடு போராடி தொடக்க
கல்வியை படித்து முடித்தார். புதுக்கோட்டை சமஸ்தான
கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பிய
போது ஆண்கள் கல்லூரியில்
தங்களுக்கு இடமில்லை என்றனர். இவரின்
கல்வி ஆர்வத்தை கண்டுணர்ந்த புதுக்கோட்டை மன்னர்
கல்லூரியில் படிக்க அனுமதித்தார். வகுப்பறையில்
முத்துலெட்சுமிக்கும், ஆண்களுக்குமிடைய
ே வெள்ளைத்திரை குறுக்கே கட்டப்பட்டது. அவர்
கற்பதை ஆண் சமூகம் கிண்டலும் கேலியும் செய்தது.
ஒரு வழியாக புதுமுக
வகுப்பை படித்து முடித்தார்.
பின்னர் ஆட்கொல்லி நோயான புற்றுநோய்க்கு தீர்வு காண
விரும்பினார். 1912இல் மருத்துவ
படிப்பை முடித்து இந்தியாவில் முதல்பெண்
மருத்துவரானார். இன்று அடையாறில் ஆலமரமாய்
புற்று நோய் மருத்துவமனை புகழ்ப் பெறக் காரணம்
இவரே. முத்துலெட்சுமி 1929இல்
சட்டமேலவைக்கு தேர்வு செய்யப்பட்டார். இதன் முலம்
சட்ட மேலவை முதல் பெண் உறுப்பினர் எனும்
பெருமையும் அவரை வந்து சேர்ந்தது.
அப்போது தலை விரித்தாடிய சமூகப் புற்று நோயான
தேவதாசி முறையை ஒழிக்க விரும்பினார். பெண்கள்
இறைவனுக்கு சேவை செய்தால் மோட்சம் கிட்டும்.
தேவதாசி முறையை தடுக்கலாமா?
என்று சத்தியமூர்த்தி அய்யர் கேள்வி எழுப்பிய போது,
எங்கள் குலப் பெண்கள் சேவை செய்தது போதும், இனி மேல்
உங்கள் குலப் பெண்கள் சேவை செய்து மோட்சம்
பெறட்டுமே! என்று நெத்தியடி தந்தார்
முத்துலெட்சுமி.
1929இல் தேவதாசி ஒழிப்புக்
கொள்கைக்கு ஆதரவு கிட்ட வில்லை. 1948இல் ஓமந்தூர்
ராமசாமி ஆட்சிக் காலத்தில் முற்றிலும்
ஒழிக்கப்பட்டது.
தேவதாசி முறையில் உள்ள நாட்டியத்தை தனியாகப்
பிரித்து கோயில்களில் கொண்டு வருவதற்கு 'இதயம்
பேசுகிறது' மணியன் விரும்பினார்.
கருணாநிதி அதனை வரவேற்றார். பாலோடு கலந்த
தண்ணீரை பிரிக்க முடியுமோ? பரத
நாட்டியத்தோடு பிறந்த
தேவதாசி முறை அகற்றப்பட்டு விட்டது.
அதற்கு பின்னர் பரத நாட்டியம் தனி அரங்குகளில்
நடத்தப்பட்டு வருவதால் கோயில்களில்
இனி தேவையில்லை என்று பெண்ணியவாதிகள் குரல்
கொடுத்தனர். கருணாநிதி எதிர்ப்பு வலுவடைந்ததைக்
கண்டு பின்வாங்கினார். கடந்த ஆண்டு கூட
நடிகை சொர்ணமால்யா கோயில்களில்
பரதநாட்டியத்தை கொண்டு வர
வேண்டுமென்று கூப்பாடு போட்டதும்
நினைவு கூறத்தக்கது. கோயில்களில் பார்ப்பன ஆதிக்கம்
நீடிக்கும் வரை தேவதாசிமுறை எந்தவடிவில்
வந்தாலும் அதை எதிர்ப்பது நமது கடமையாகும்.
-------------------
search 

தேவரடியாரும் தேவதாசிகளும்! -சில கல்வெட்டுச் சான்றுகள்

search விபச்சாரம் 'மாமா' தொழில் ஆனது எப்படி வேட்டொலி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக