வெள்ளி, 21 ஜூலை, 2017

தமிழகத்தமிழர் வெளிநாடுகளில் 22 லட்சம் தொழிலாளர்கள் வளைகுடா 11 லட்சம்

aathi tamil aathi1956@gmail.com

மார். 24
பெறுநர்: எனக்கு
Ingersol Selvaraj
வெளிநாடுகளில் ஓடி ஓடி வேலை செய்யும் என் தமிழ் சகோதரர்கள் 22
லட்சத்திற்கு மேல்; அவர்களால் இந்தியாவிற்கு கிடைக்கும் வருமானம் ஒவ்வொரு
ஆண்டும் ரூ.61,843 கோடி
பேராசிரியர்கள் இருதய ராஜன், பெர்னால்ட் டிசோசா சாமி, சாமுவேல் அசிர்
ராஜ் ஆகியோர் ஒருஆய்வு நடத்தி உள்ளனர். ஆய்வில் கூறபட்டுள்ள முக்கிய
விவரங்கள் வருமாறு
2015 ம் ஆண்டு கணக்கீட்டின்படி, 22 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள்
வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரூ.61,843
கோடியை தமிழகத்திற்கு அனுப்புகின்றனர். மொத்த தமிழர்களில் 15 சதவீதம்
பெண்கள். தமிழகத்தில் உள்ள 5ல் ஒரு வீட்டைச் சேர்ந்தவர் வெளிநாட்டில்
வேலை பார்ப்பவராக உள்ளார்.
அதிகபட்சமாக சிங்கப்பூரில் 4.1 லட்சம் தமிழர்கள் பணியாற்றுகிறார்
கள். யுஏஇ, சவுதி அரேபியா, குவைத், ஓமன், கத்தார் உள்ளிட்ட வளைகுடா
நாடுகளில் 11 லட்சம் தமிழர்கள் பணிபுரிகிறார்கள்.
வளைகுடா நாடுகளில் 50 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை நிலவிய போதிலும்,
தமிழர்கள் கடுமையாக உழைத்து 70 சத்வீதத்திற்கும் அதிகமாக பணம்
அனுப்புகிறார்கள். வெளிநாட்டில் வேலை செய்யும் 52 சதவீத தமிழர்களின் வயது
20 முதல் 34. 10 லட்சம் தமிழக திருமணமான பெண்கள், கணவன், குழந்தைகளை
பிரிந்து வளைகுடா நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 20 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் தங்களின் தாய்
- தந்தை இருவருடனும் சேர்ந்து இருப்பதில்லை.
கங்கை கொண்டான்,கடாரம் கொண்டான் என்பதெல்லாம் ஏட்டில் தான்

 அன்னியசெலாவணி புலத்தமிழர் புலம்பெயர் அகதி வருமானம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக