சனி, 8 ஜூலை, 2017

1892 யாழ் தமிழ் அகராதி 58,500 சொற்கள் ஈழம் தமிழ்த்தொண்டு

aathi tamil aathi1956@gmail.com

18/8/14
பெறுநர்: எனக்கு
யாழ்ப்பாண அகராதி ஒர் அறிமுகம்
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அதாவது 91 ஆம்
ஆண்டு காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப்
புலிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட விடயம் தூய
தமிழ்ப்பெயரிடல். கடைப்பெயர்ப்பலகைகளில்
இருந்து ஆரம்பித்து நடைமுறைப்பயன்பாடுச் சொற்கள்
வரை இவை புகுத்தப்பட்டுக்கொண்டிருந்தன.
ஐஸ்கிறீம் என்ற பெயர் காணாமற் போய்க்
குளிர்களி என்று மாறியதும், விறகு காலை போய்
மர அரிவு ஆலையாக மாறியதும்,
துர்க்கா என்ரபிறைசஸ்
மறைந்து கொற்றவை கால்நடைத்தீனி வாணிபம்
என்று மாற்றம் பெற்றதுமாக நிறைய மாற்றங்கள்.
அப்போது ஒரு வேடிக்கைப்
பார்வையோடு எள்ளிநகையாடியவர்களும்
இருக்கிறார்கள்.
ஆனால் காலம் செல்லச் செல்ல அந்த
மாற்றமே அங்கே வாழும் சமூகத்தின் புழக்கத்தில்
அதிகம் வந்துகலந்துவிட்டதை அன்றைய காலகட்டத்தில்
வாழ்ந்து இப்போது புலம் பெயர்ந்திருப்பவர்களால்
நன்கு உணரமுடியும். எப்போதும் நல்ல விஷயங்கள்
ஆரம்பத்தில் கசக்கத்தான் செய்யும், காலம்
கடந்து நீண்ட நோக்கில் பார்க்கும் போது அதன்
அறுவடை செழுமையாக இருக்கும். இதைத் தான்
நேற்றுக்கூட ஒரு புத்தக வெளியீட்டு விழாவில்
கலந்துகொண்டிருக்கும் போது என் மனதில்
ஓட்டிக்கொண்டிருந்தேன்.
செந்தமிழ்ச் செல்வர் சு. சிறீ கந்தராஜாவின்
"தமிழின் பெருமையும் தமிழரின் உரிமையும்" என்ற
அந்த நூல் வெளியீடு விழாவில் திரு.
தேவராஜா அவர்கள்
ஆய்வுரை பகிர்ந்தபோது "தமிழோடு 25 வீத
சமஸ்கிருதம் கலந்து மலையாளமாகியும், 50 வீத
சமஸ்கிருதக்கலப்பில் தெலுங்காகியும், 75
வீதக்கலப்பில் கன்னடமாகியும்"
தமிழ்மொழி கிளைமொழிகளாகித் தன் அடையாளத்தைத்
தொலைத்துக்கொண்டு போவதையும்
குறிப்பிட்டிருந்தார். இந்த நூலில் கூட
நூலாசிரியர் இப்படிச் சொல்கிறார், "1100
ஆண்டுகளுக்கு முன்னர் - அதாவது கி.பி. 9 ஆம்
நூற்றாண்டுவரை கன்னடமொழி தமிழாகவே இருந்தது.
900 ஆண்டுகளுக்கு முன்னர் - அதாவது கி.பி. 11
ஆம் நூற்றாண்டுவரை தெலுங்கு மொழி தமிழாகவே
இருந்தது. 700 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 13
ஆம் நூற்றாண்டு வரை மலையாளம்
தமிழாகவே இருந்தது".
கன்னடமும், தெலுங்கும், மலையாளமும்
தமிழிலிருந்து தோன்றாமல் விட்டிருந்தால்
இன்றைக்கு இந்தியாவிலே இருக்ககூடிய தமிழனின்
தொகை 21 கோடி என்கின்றார்.
ஓவ்வொரு முறை என்
தாயகத்துக்கோ தமிழ்நாட்டுக்கோ செல்லும்
போதோ நான் வாங்க நினைப்பது ஒரு தமிழ் அகராதி.
ஆனால் புத்தகத்தின் கனம் தடைபோட்டுவிடும்.
அடுத்தமுறை போகும் போது ஒரு தமிழ்
அகராதியை வாங்கிக் கடல் அஞ்சல்
மூலமாவது அனுப்பிவிடவேண்டும்
என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது எனக்குக்
கிடைத்தது "யாழ்ப்பாணத் தமிழ் அகராதி".
தமிழ்மண் பதிப்பகம் சென்னை, மற்றும்
சேமமடு பதிப்பகம் கொழும்பு ஆகிய
பதிப்பாளர்களால் மே 14, 2006 ஆம்
ஆண்டு மீள்வெளியிடப்பட்ட இப்புத்தகம் மெல்பன்
தமிழ்ச்சங்கத்தால் அவுஸ்திரேலியாவில் கடந்த மாதம்
அறிமுகம் செய்யப்பட்டது. கையெட்டும் தூரத்தில்
கிடைக்கும் கனியை விடலாமோ?
உடனே வாங்கிவிட்டேன்.
புத்தகத்தை வாங்கி விரிக்கும் போது ஆச்சரியமான
வகையில் இருப்பது இதன் முதற்பதிப்பு. 1842 ஆம்
ஆண்டு யாழ்ப்பாணத்து அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில்
அச்சிடப்பட்டு யாழ்ப்பாண புத்தகச் சங்கத்தால் 10
ஷில்லிங் அல்லது 5 ரூபாய்க்கு விற்கப்பட்டதாம்.
சந்திரசேகரப் பண்டிதர், மற்றும் சரவணமுத்துப்
பிள்ளை ஆகியோரை ஆசிரியராகக் கொண்ட இந்நூல்
கனதியான அட்டையோடு 486
பக்கங்களோடு வெளிவந்திருக்கிறது. பின்
அட்டையில் இருக்கும் உணர்ச்சிக் கவிஞர்
காசி ஆனந்தனின் "பதிப்பரசர் எங்கள் படை" என்ற
கவிதை மூலம் இந்நூலை மீள்பதிப்பாகக் கொண்டுவந்த
கோ.இளவழகனை விதந்து பாடுகின்றார்.
நூலை விரிக்கின்றேன்.
அளவையம்பதி தமிழ்ப்புலவன் வேலுப்பிள்ளை குமாரன்
கனகசபாப்பிள்ளையின் சிறப்புப் பாயிரம் முதலில்
அணி செய்கின்றது. அந்த
நேரிசையாசிரியப்பாவை எல்லோரும்
புரிந்துகொள்ளும் விதத்தில்
சந்தக்கவி இராமசாமியால் சீர்கள்
பிரிக்கப்பட்டு இப்பதிப்பில்
கொடுக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து உடுவைநகர்
முத்துக்குமாரசுவாமி சிதம்பரப்பிள்ளையின்
இருபத்து நான்கு சீர்க்கழிநெடிலடி ஆசிரிய
விருத்தம் அமைகின்றது.
முதற்பதிப்பின் முன்னுரையில் (1842 ஆம் ஆண்டு)
அமெரிக்கன் அச்சகத்தாரால் இப்படித் தொடர்கின்றது.
"தமிழ்மொழியின் சொல்வளத்தை அகரவரிசையில்
முழுமையாகத் தரும் முதல் முயற்சியாக
உருவாக்கப்பட்ட இவ்வகராதி தமிழுலகின் முன்னர்
சமர்ப்பிக்கப்படுகின்றது. அவ்வகராதியில் 58,500
சொற்கள் உள்ளன. அதாவது சதுரகராதி முழுவதிலும்
அடங்கிய சொற்களை விட நான்கு மடங்கு சொற்கள்".
மீளப்பதிப்பில் வாழ்த்துரை வழங்கிய தகைசார்
ஓய்வு நிலைப் பேராசிரியர்
கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் கூற்றில் "
அகராதி என்பது அதன் உருவிலும் உள்ளடக்கத்திலும்
மேலைத்தேய பண்பாட்டு வழி வந்ததாகும்.
தமிழ்மரபில் நிகண்டு முறைமையே உண்டு.
அம்முறையினுள் அகராதியில் கிடைப்பன போன்ற
சொல்லுக்கான கருத்து தரப்படாது. மாறாகச் சொற்கள்
தொகுதிகளாத் தரப்படும். சிவனுக்குரிய பெயர்கள்,
கடலுக்குக்குரிய பெயர்கள் என
தொகுதி முறையிலேயே வரும். உண்மையில் ஆங்கில
மரபுப்படி இவை ஒரு பொருளுக்கான பல பெயர்கள்
(Synonyms) எனவே கொள்ளவேண்டும்.
தமிழ்மக்களிடையே தமது மதத்தைப் பரப்ப முனைந்த
முதற்பெரும் பாதிரியார்
முதலே அகராதி முறைமை வழியாகத் தமிழைத்
தமது விளக்கப்பதிவிட்
கொண்டுவருவதற்கு மேலை நாட்டு மரபு வழி வந்த
அகராதி முறைமையக் கையாண்டுள்ளனர்.
(வீரமாமுனிவரின் சதுரகராதி) புரட்டஸ்தாந்தக்
கிறீஸ்தவர்கள் இம்முயற்சியில் அறிவியல் பூர்வமான
அணுகுமுறைமையே மேற்கொண்டனர். இவர்களுள்ளும்
யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டியங்கப் புறப்பட்ட
மிசனரிமார்கள்
தொடக்கத்திலிருந்தே அகராதி முயற்சியில்
ஈடுபட்டனர். ஜோசப் நைற் பற்றி பேராயர் செபநேசன்
சந்துள்ள செய்திகளை நோக்குக. ஜோசப் நைற்
மெதடிஸ்ட மிஷன் பாதிரியாராகிய பர்சிவலுடன்
இணைந்து செயற்பட்டார் என்பது முக்கியமான
செய்தியாகும். இந்த பர்சிவல் தான் ஆறுமுக
நாவலரின் ஆரம்பகால உந்து ஆற்றலாக விளங்கியவர்.
" என்று கூறிச் செல்கின்றார்.
அணிந்துரை வழங்கிய பேராயர்
கலாநிதி.எஸ்.ஜெபநேசனின்
குறிப்பில்"யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய
மிஷனரிமாரின் இன்னொரு பங்களிப்பினை ஆராயப்
புகுவோம். மூன்று மிஷன் சங்கங்களையும் சேர்ந்த
ஆரம்பகால் மிஷன் தொண்டர்கள் ஒரு தமிழ்-ஆங்கில
அகராதி இல்லாத
குறையை உணர்ந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான
பணியை மேற்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக