வெள்ளி, 22 செப்டம்பர், 2017

புறக்கணிக்கப்படும் ரவிமங்கலம் இன்னொரு ஆதிச்சநல்லூர் பழனி அருகே அகழ்வாராய்ச்சி விழிப்புணர்வு பழமை மூடிமறைப்பு

பாதுகாக்கப்படுமா இரவிமங்கலம் தொல்லியல் களங்கள்? அரசும்,
தொல்லியல்துறையும் நடவடிக்கை மேற்கொள்ளுமா?
உலகில் இதுவரை கண்டறியப்பட்டதி
ல் மிகப்பெரும் பெருங்கற்கால
# தொல்லியற்களம் என கருதப்பட்டது
# ஆதிச்சநல்லூர் மட்டுமே! 114 ஏக்கர் பரப்பளவு கொண்டது!
ஆனால் # இரவிமங்கலம் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவாக, 200
ஏக்கர்களில் மிக நெருக்கமாகவும், 300 ஏக்கரில் பரவலாகவும், 500 ஏக்கரில்
சிதறியுள்ளது!
#இரவிமங்கலம்! # பழனி அருகே 12 கிமீ தொலைவில் காணப்படும் 3000 ஆண்டுகள்
மிகப்பழமையான
# தொல்லியல் சின்னங்களின்
# களஞ்சியம் இதுவே!
பெருங்கற்கால சின்னங்களான புதைமேடுகள், கற்படுக்கைகள் ,கல்திட்டைகள்
,குத்துக்கல், நடுகல் ,கல்லரண் ,கல்வட்டம் அனைத்தும் இங்கேயே
கிடைக்கின்றன! அதனால் இக்களத்தை பெருங்கற்கால சின்னங்களின் களஞ்சியம்
என்று கூறுகின்றனர்! இந்த சின்னங்களின் விட்டம் 5 - 30 மீட்டர்கள் வரை
வெவ்வேறு அளவிலுள்ளன .
இந்தியாவுக்குக் கடல் வழியே மரக்கலங்களில் வந்து வாணிகம் செய்த
கிரேக்கரையும், பிற்பாடு ரோமானியரையும் # யவனர் என்று
சங்கநூல்க்குறிப்பிடுகின்றன.
சங்ககால ரோமானிய, கிரேக்க தமிழக தொடர்பை உறுதிப்படுத்தும் வண்ணம் #
ரோமானியர் நாணயங்களும் # கிரேக்கர் நாணயங்களும் பல தமிழகத்தில்
கிடைத்துள்ளன!
யவனர் மூலம் தமிழகத்துக்கு வந்ததாக கருதப்படும் "அம்ப்போரா மதுச்சாடிகள்"
இங்கு கிடைப்பதால் இக்களம் யவனர் வணிகத்தளமாக விளங்கியதை அறிய முடிகிறது
.#இரவிமங்கலம் கிழக்கே 6 கிமீ தொலைவிலுள்ள # கலையமுத்தூர் பகுதியில் 63
ரோமானியர் தங்கக்காசுகள் கிடைத்தது இதை மேலும் உறுதி செய்கிறது!
இங்கு இரும்பு உருக்காலைகள் , இரும்பு அச்சுகள் ஏராளமாக இருந்ததற்கான
தடயங்கள் கிடைப்பதால் தமிழகத்தின் இரும்புகாலம் கிமு 8000 வரை செல்லும்!
தற்போது #இரவிமங்கலம் (இதுவரை எந்தவொரு அகழாய்வுகள் நடைபெறாமல்,
அழிவிற்குள்ளாகி) அழிந்துவரும் தொல்லியற்களங்களின் பட்டியலுள்
கேட்பாரற்று உள்ளது .
3 வருடங்கள் முன்பு நல்ல நிலையில் இருந்தது! # குத்துக்கல்
# கல்வட்டம் # கல்பதுக்கை பல இருந்தன, இப்போழுது ஒன்றும் இல்லாமல்
அழிக்கப்பட்டுவிட்டது
தகவல்: முனைவர் ம. குமரவேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக