செவ்வாய், 26 செப்டம்பர், 2017

சேனைத்தலைவர் ஆங்கிலேயர் கால பதிவு முதலியார்

மேம்போக்காகத் தேடிப் பார்த்ததிலே...
/தர்ஸ்டன் குறிப்பிடும் இச்செய்திகள் பல்வேறு சாதிப்பிரிவினருக்கும் உரிய
சாதிப்பட்டமாக ‘முதலியார்’ என்ற சொல் உள்ளதை உணர்த்துகிறது. முதலியார்
என்ற சொல்லின் மூலச் சொல் ‘முதலி’ என்பதாகும். முதலி என்ற சொல் தலைவன்
என்ற பொருளைத் தருவதாக, சென்னைப் பல்கலைக்கழக லெக்சிகன் குறிப்பிடுகிறது.
முதலி என்ற சொல்லே அர் விகுதி பெற்று முதலியார் என்றாகி யுள்ளது. முதலி
என்ற சொல் தலைவன் என்ற பொருளிலேயே தமிழ்க் கல்வெட்டுகளில் இடம்
பெற்றுள்ளது. படைக்குத் தலைவனாக இருந்தவன் ‘படை முதலி’, ‘சேனை முதலி’
என்று குறிப்பிடப்பட்டுள்ளான்.=
தமிழ்நாட்டில் வெள்ளாளர் சாதிக்குரிய பட்டங்களில் ‘பிள்ளை’ என்பதும்
ஒன்று. ஆனால் ஆங்கில ஆட்சியின் போது எடுக்கப்பட்ட மக்கள்தொகைக்
கணக்கெடுப்பில், பல்வேறு சாதியினரும் இப்பட்டத்தைப் பயன்படுத்தியுள்ளது
வெளிப்பட்டுள்ளது. இது தொடர்பாக எட்கர் தர்ஸ்டன் எழுதியுள்ள செய்தி
வருமாறு:
அண்மைக்காலக் கணக்கெடுப்புகளி
ல் அகமுடையார், அம்பலக்காரர், கொல்லர், இடையர், நாயர், பறையன், நோக்கன்,
பணிசவன், பணக்கன், சாயக்காரன், செம்படவன், சேனைக்குடியர் ஆகிய
சாதியினருக்குரிய பட்டப்பெயராக இது பதியப்பட்டுள்ளது.


A political and general histrory of tinnevely in the presidency of madras ல்
61 ம் பக்கத்தில் கால்டுவெல் சேனைத்தலைவர் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக