செவ்வாய், 26 செப்டம்பர், 2017

புகுசிமா அணுவுலை கழிவு என்ன செய்வது என்று ஜப்பான் திண்டாடுகிறது பசிபிக் கடல் பாதிப்பு அணு

Sundar Rajan
புகுஷிமாவும் அதன் தற்போதைய நிலையும்:
புகுஷிமா அணு உலைகளை நிர்வகிக்கும் நிறுவனமான "டோக்கியோ எலக்ட்ரிக் பவர்
கம்பெனி" "டெப்கோ" (TEPCO) கடந்த வாரம் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டு
உலகத்தை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. புகுஷிமா அணு உலைகள் விபத்திற்கு
பிறகு அவற்றை குளிர்விக்க பயன்படுத்தப்பட்ட சுமார் 7,70,000 டன் அதிக
(high level radioactive waste) கதிர்வீச்சு கொண்ட நீரை 580 தொட்டிகளில்,
அந்த அணு உலை வளாகத்தில் சேமித்து வைத்துள்ளனர். சேமித்து வைக்கப்பட்ட
தண்ணீரில் கதிர்வீச்சு அதிகம் கொண்ட ட்ரிடியம் (tritium) உள்ளது.
டெப்கோ இப்போது வெளியீட்டுள்ள அறிவிப்பு என்னவென்றால், ஒட்டுமொத்தமாக
இந்த 7,70,000 டன் கதிர்வீச்சு கொண்ட நீரையும் பசிபிக் பெருங்கடலில்
கொண்டு கொட்டப்போவதாக அறிவித்து உலகத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
உலகத்தில் இதுவரை ட்ரிதியத்தை பிரித்தெடுக்க தொழில்நுட்பம் கிடையாது,
ஆனால் விபத்து நடந்த இந்த ஆறு ஆண்டுகளில் அதற்கென ஏதாவது செய்திருக்கலாம்
என்கிறார் கியோடோவை சேர்ந்த சூழல் செயல்பாட்டாளர் அய்லீன் மியோகோ ஸ்மித்.
டெப்கோ நிறுவன தலைவர் இது குறித்து தெரிவிக்கையில், ஏற்கனவே முடிவுகள்
எடுக்கப்பட்டுவிட்டன, அரசாங்கத்திடமிருந்து அனுமதிக்காக காத்திருக்கிறோம்
என்கிறார்.
பசிபிக் பெருங்கடல் ஏற்கனவே செத்துவிட்டது என அங்கே பயணம் செல்லும்
மாலுமி ஒருவர் பதிவுசெய்துள்ளார், "நான் எப்போதும் பயணம் போகும் போது
பார்க்கும் டால்பின்கள், சுராக்கள், சின்ன மீன்களை கொத்தி சாப்பிட வரும்
பறவைகள் என எதையும் பார்க்கமுடியவில்லை, பசிபிக் பெருங்கடல் இனிமேல்
பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்கு வாழ்வளித்த பசிபிக் அல்ல, அது
செத்துவிட்டது என்று பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இவ்வளவு
கதிர்வீச்சு கொண்ட நீரும் பசிபிக் பெருங்கடலில் சேர்ந்தால் எங்களுடைய
வாழ்வாதாரம் என்னவாகும் என்று கேட்கிறார்கள் அந்த பகுதியில்
இருக்கக்கூடிய மீனவர்கள்.
இப்போது ஒரு முறை தான் என்று அனுமதித்தால் இதுவே பழக்கம் ஆகிவிடும்,
ஏற்கனவே எங்கள் பகுதியில் பிடிக்கப்படும் மீன்களை வாங்க மாட்டோம் என்று
அறிவித்துள்ள அரசாங்கங்கள் இதற்கு பிறகு என்ன செய்வார்கள் என்கிறார் மீனவ
கூட்டுறவை சேர்ந்த கஞ்சி டச்சியா.
ஏற்கனவே நடந்த விபத்தால் முழுவதும் சீர் குலைந்த தங்களுடைய வாழ்வாதாரம்
மேலும் சீரழிந்து மீனவ மக்கள் அனைவரும் வெளியேற வேண்டி வரலாம்.
விபத்துகள் நடந்த பிறகும் அதற்கான மீட்பு தொழில்நுட்பத்தை உருவாக்க
முடியவில்லை, வேறு என்ன செய்வது என்றும் தெரியவில்லை, அணுசக்தியை
பொறுத்தமட்டில் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்றால், வந்த பிறகு
பார்ப்பதற்கு ஒன்றும் இருக்காது.
நாம் பாடம் கற்போமா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக