செவ்வாய், 26 செப்டம்பர், 2017

போர் காட்சி சோகம் அழுகை விளக்கும் இலக்கியம் கணைக்கால் கோச்செங்கணான் சங்ககால

தொல்காப்பியன் பொற்கோ
களவழி நாற்பது என்ற பதினென்கீழ் கணக்கு புறப்பாடல் நூலில் சேரன்
கணைக்கால் இரும்பொறை மற்றும் சோழன் கோட்செங்கணான் இருவருக்கும் இடையில்
நடந்த கடும் போரின் விளைவுகளை விளக்கும் படல். இதை படிப்போர் கெட்டப்
போரினை வெறுப்பர்.
போர்க்களத்தில் நடைபெறும் கொடுமை; போரால் மக்கள் மாண்டு மடியும் பயங்கரக்
காட்சி; பார்ப்போர் உள்ளத்திலே அச்சத்தை ஊட்டும் போர்க்களக் காட்சி;
இவைகளை இக்களவழிப் பாடல்களிலே காணலாம். இந்நூலைப் படிப்போர் போரை
வெறுப்பார்கள்; அமைதியையே விரும்புவார்கள்.
போரினால், மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படும் பல பண்டங்கள் பாழாகும். இது
ஒருபுறம் இருக்கட்டும். போரிலே பல வீரர்கள் மடிவதன் காரணமாகப் பல மக்கள்
ஆதரவற்ற அநாதைகளாகின்றனர். போர் நடந்தால் - போர்க்களத்திலே வீரர்கள்
மாண்டால்- பிள்ளைகளையிழந்த
ு தவிக்கும் பெற்றோர்கள் பலர்; காதலர்களை இழந்து கவலைப்படும் மனைவிகள்
பலர்; தந்தைகளையிழந்து தவிக்கும் பிள்ளைகள் பலர்; ஆதலால்தான் மக்கள்
சமுதாயத்திலே ஒற்றுமையையும், நல்வாழ்வையும் விரும்புகின்றவர
்கள் போரை வெறுக்கின்றனர். சமாதானத்தை விரும்புகின்றனர். இக்கருத்தை
இந்நூலின் பாடல்களிலே காணலாம்.
சோழன் போர் புரிந்த போர்க்களத்திலே, தங்கள் உறவினர்களாகிய வீரர்களையிழந்த
மக்கள் நாற்றிசையும் கேட்கும்படி அலறி அழுகின்றனர்; ஓடுகின்றனர். இப்படி
அழுகின்றவர்களில் பெண்களே பெரும்பாலோராகக் காணப்படுகின்றனர். இக்காட்சி,
மரங்கள் அடர்ந்த சோலையிலே, பெருங்காற்று புகுந்து வீசுவதைக்கண்டு, அஞ்சிய
மயிலினங்கள், வெவ்வேறு திசைகளிலே சிதறி ஓடுவதைப்போல இருந்தது; என்று
கூறுகின்றது ஒரு செய்யுள்.
"கடிகாவில் காற்று உற்று எறிய, வெடிபட்டு
வீற்றுவீற்று ஓடும் மயில் இனம்போல்-நாற்றிசையும்
கேளிர் இழந்தார் அலறுபவே; செங்கண்
சினமால் பொருத களத்து. (பா.23)"
செங்கட்சோழன் போர் செய்த போர்க்களத்திலே, மரங்கள் அடர்ந்த சோலையில்
காற்று புகுந்து கடுமையாக வீச, அதைக்கண்டு பயந்து பிரிந்து பிரிந்து
ஓடுகின்ற மயிற் கூட்டத்தைப்போல, தம் உறவினரை இழந்தவர்கள் நான்கு
திசைகளிலும் ஓடிஓடி அலறி அழுகின்றனர்.
இச்செய்யுளைப் படிப்பவர்கள், போர் எவ்வளவு கொடுமையானது; மக்களுக்கு
எவ்வளவு மனவேதனையைத் தரக்கூடியது; என்பதை உணராமல் இருக்க முடியாது.
மற்றொரு பாட்டிலே தச்சன் வேலை செய்யும் இடத்தையும், போர்க்களத்தையும்
ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். இக்காட்சியைக் காணும்போது யாருடைய உள்ளமும்
உருகாமல் இருக்காது.
தச்சன் வேலை செய்யும் இடத்தைப் பார்த்தால் அலங்கோலமாகத்தான் காணப்படும்.
வேலை செய்யும் ஆயுதங்கள் பல இடங்களிலே கிடக்கும்; வெட்டப்பட்ட மரங்கள்;
அறுபட்ட மரங்கள்; துண்டுபோடப்பட்ட மரங்கள்; துளை போடப்பட்ட மரங்கள்;
மரங்களிலே செதுக்கிய, இழைத்த, சிறியவும் பெரியவுமான சிராய்த் தூள்கள்;
இவைகள் எங்கு பார்த்தாலும் சிதறிக் கிடக்கும்.
போர்க்களத்திலும் ஆயுதங்கள் பல சிதறிக்கிடக்கும்; பல பிணங்கள் குவிந்து
கிடக்கும்; தனித்தனியாகவும் கிடக்கும்; வீரர்களின் கால் கைகள்
துண்டிக்கப்பட்டுக் கிடக்கும்; உடல்கள் சிதைந்து உருமாறி எங்கும்
கிடக்கும். யானை, தேர், குதிரை முதலியவைகளும் சிதைந்து கிடக்கும்.
இத்தகைய போர்க்களத்திற்குத் தச்சுப்பட்டறையை ஒப்பிட்டது மிகவும்
பொருத்தமானது.
‘‘கொல்யானை பாயக் குடைமுருக்கி எவ்வாயும்
புக்கவாய் எல்லாம் பிணம் பிறங்கத், தச்சன்
வினைபடு பள்ளியில் தோன்றுமே செங்கண்
சினமால் பொருத களத்து."
கோபத்தையுடைய செங்கட்சோழன் போர் செய்த களத்திலே, எவ்விடத்திலும்,
குடைகளையழித்துக் கொல்லுகின்ற யானைகள் பாய்ந்து பொருகின்றன. அவைகள்
புகுந்த இடமெல்லாம் பிணங்களே குவிந்து கிடக்கின்றன. அவைகள் தச்சன் வேலை
செய்கின்ற இடத்தைப் போலத் தோற்றம் அளிக்கின்றன’’.
இச்செய்யுள் போர்க்களத்தின் பயங்கரக் காட்சியை நமக்குக் காட்டுகின்றது
.இதுபோல் போர்க்களத்தின் காட்சியைக் காட்டும் பாடல்கள் பல.

தாமல் கோ சரவணன்
அதே போரில் தோற்ற இரும்பொறை சிறையில் இருக்கும் போது எழுதிய பாடல்
தமிழர்கள் செத்த பிறகு மார்பை கீறி விட்டு புதைப்பார்கள் என்ற
வரலாற்றையும் சொல்லும்.
கவனத்தில் கொள்ள வேண்டிய போர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக