|
ஏப். 14
| |||
கத்திவாக்கம் நவீனன் , 2 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — ஆனந்த பா
ஸ்ரீநிவாஸ் மற்றும் 73 பேர் உடன்.
இன்று சோழர்கள் உருவாக்கிய நாள்காட்டியின் படி, சோழர்கள் ஆண்ட கேரளம்,
வங்கம், மியான்மார், ஒடிசா, அசாம், தாய்லாந்து, இலங்கை, கம்போடியா,
லாவோஸ் ஆகிய நாட்டினரும் நம்முடன் சேர்ந்து கதிரவ புத்தாண்டை
கொண்டாடுகின்றனர் என்று நினைக்கும் போது , தமிழன் என்ற கர்வம் தன்னால்
பிறக்கிறது......
தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!!
சித்திரை மாதத்தில் புத்தாண்டு, தெய்வம் திகழும் தமிழ்நாட்டில்!! --
நாமக்கல் கவிஞர்...

புதைந்தவை சாட்சி சொல்கின்றன
தமிழரின் சங்ககாலம்
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் அமைந்துள்ள புலிமான்கோம்பையில் கண்டெடுக்கப்பட்ட மூன்று நடுகற்கலிலும் உருவம் செதுக்கப்பட்டும் சிறப்பு எழுதப்பெற்றும் உள்ளன. தமிழி எழுத்தில் தூய தமிழ்ச்சொற்களில் எழுதப்பெற்றுள்ள அவ்வாசகங்களைப் படித்தறிந்த நடன. காசிநாதன் அவை பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டும் அதற்கு முன்னரும் என்று காலக்கணிப்பினைச் செய்துள்ளார்.
அப்படியானால் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டும் அதற்கு முன்னரும் பொதுவாகவே அனைவருக்கும் எழுத்தறிவு இருந்தது என்பது தெளிவாகின்றது.
தாழியிலிட்டுப் புதைக்கும் வழக்கத்தைப் புறநானூறு – 228,236,256,364, பதிற்றுப்பத்து – 44, நற்றிணை – 271, அகநானூறு – 275 ஆகிய செய்யுள் அடிகளில் சுட்டியுள்ளன.
கரூர் மாவட்டம் புகழூர் அருகேயுள்ள ஆறுநாட்டார்மலையில் பதிற்றுப்பத்தில் குறிப்படப்பட்டுள்ள சேர அரசமரபினரின் ஏழு, எட்டு, ஒன்பதாம் பத்துக்குரிய அரசர்களின் பெயர்கள் (செல்வக்கடுங்கோ வாழி ஆதன், பெருஞ்சேரல் இரும்பொறை, இளஞ்சேரல் இரும்பொறை) எழுதப்பெற்றுள்ளன. இக்கல்வெட்டின் காலத்தை நடன. காசிநாதன் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டு என்று கணித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கொடுமணல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற 250-க்கும் மேற்பட்ட பானையோட்டுத் துண்டுகளுள் ஒன்றில் கண்ணன் ஆதன் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இப்பானையோட்டின் காலம் பொ.யு.மு. முதல் நூற்றாண்டாகும்.