திங்கள், 1 மே, 2017

திராவிடம் மடைமாற்று தேவையற்ற போராட்டங்கள் திசைதிருப்பல் ஈ.வே.ரா சிலை உடைப்பு தாலி

aathi tamil aathi1956@gmail.com

20/3/15
பெறுநர்: எனக்கு
Kathir Nilavan
பெரியாரின் கடவுள் சிலை உடைப்பும்...! வீரமணியின்
தாலி அறுப்பும்...!
எப்பொழுதெல்லாம் தமிழர்களின் உரிமைகள் அண்டைய
இனத்தவர்களால் மிகத் தீவிரமாகப் பறிக்கப்படுகிறத
ோ, அப்போதெல்லாம் வேறு பிரச்னைகளைக்
கையிலெடுத்து மடை மாற்றுவது பெரியாருக்கு
கைவந்த கலையாகும். அவரின் தொண்டரடியார்
வீரமணியும் இதற்கு விதிவிலக்கல்ல என்பது தான்
ஏப்.14இல் அவர் அறிவித்துள்ள தாலி அறுப்பு
நிகழ்ச்சியாகும்.
அன்றைக்கு தமிழகத்தில் வடக்கெல்லை மீட்புக்
கிளர்ச்சி நடந்து கொண்டிருந்த போது தான்
பெரியார் கடவுள் சிலை உடைப்புப் போராட்டத்தை
அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
விசாலா ஆந்திரம் கேட்டு 16.12.1952 இல் பொட்டி
சிறிராமுலு உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார்.
அதனால் ஆந்திரப்பகுதியில் கலவரம் மூண்டது.
ஆந்திரத்தில் வாழ்ந்த தமிழர்கள் கடுமையாகத்
தாக்கப்பட்டனர். ஆந்திரர்களின் போராட்டம்
தீவிரமானதை உணர்ந்த பிரதமர் நேரு அவர்கள்
2.10.1953 இல் ஆந்திரம் மொழிவழி மாநிலமாக
பிரிக்கப்படும் என்று அறிவித்தார்.
அப்போது சென்னை நகரத்தை புதிய ஆந்திராவின்
தலைநகராக அறிவிக்கக் கோரி தெலுங்கர்கள்
நிர்பந்தம் செய்து வந்தனர். இதனைக் கண்டு கொந்தளித்த
தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம் "தலையை
கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று
முழங்கியதோடு ஆந்திரர்களின் பேராசை
முழக்கத்தையும் முறியடித்தார்.
அப்போது பெரியார் அலட்சியப் போக்குடன் சொன்னார்:
"எனக்குச் சென்னை நகரம் முக்கியமல்ல, அன்னியன்
ஆதிக்கமற்ற, அன்னியன் சுரண்டலற்ற பூரண
சுயேட்சையுள்ள பிரதேசம் எவ்வளவு சிறிதாக
இருந்தாலும் அது தான் தேவை என்று
சொன்னேன்." (பெரியார் சிந்தனைகள், பக்.727,
ராயப்பேட்டை பேச்சு 5.1.1953)
பெரியாரின் ஆதரவு இல்லாமல், சென்னையை
ஒருவழியாய் மீட்ட போதிலும் பிரச்னையோ
தீர்ந்தபாடில்லை. தமிழர்கள் பெரும்பான்மையாக
வாழும் தகராறுக்குரிய சித்தூர் மாவட்டத்தையும்
சேர்த்து ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது.
சித்தூர் மாவட்டத்தில் இருந்த தமிழர்கள்
பெரும்பான்மையாக வாழ்ந்த திருப்பதி,
திருக்காளத்தி, திருவாலாங்காடு, திருத்தணி,
சித்தூர், கங்குத்தி, பல்லவனேரி, புங்கனூர்
வாயல்பாடி, புத்தூர், நகரி ஆகிய பகுதிகள்
ஆந்திராவிடம் கையளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து
மீண்டும் ம.பொ.சி அவர்கள் சித்தூர் மீட்பு கிளர்ச்சிப்
போராட்டத்தை அறிவித்தார்.
இதிலும் பெரியார் இரண்டகம் செய்திடும் வகையில்
எழுதினார். அது வருமாறு: "பிரிவினை, ஆந்திரா
தமிழ்நாடு என்பது பற்றி 1921லேயே முடிந்து
விட்டது. அதனுடைய எல்லைகளும் அப்போதே தீர்ந்து
போய் விட்டன. இன்றைக்கு 30 வருடங்களாக அனுபோக
பாத்தியதைகளும் ஏற்பட்டு விட்டன. இந்த 30
வருடங்களாக எல்லையிலேயே தமிழனோ, தெலுங்கனோ,
காங்கிரசோ, அனுபோகத்தை எதிர்த்தவர்களும் இல்லை...
இன்றைய தினம் தமிழ்நாடு எல்லைக்குப்
போராடுகிறோம் என்று வருகிறார்களே, வீரர்கள்-
இவர்கள் இந்த 20,30 வருடங்களாக என்ன செய்தார்கள்?
இன்றைய தினம் சிலர் தங்கள் விளம்பரத்திற்கு
பிழைப்புத் தவிர, குமரி முதல் வேங்கடம் வரை
என்கிற அறிவு இன்றைக்கு வருவானேன்?" (பெரியார்
ஈ.வெ.ரா.சிந்தனைகள், தொகுதி 2, பக்கம் 723- 724)
எந்த ஆந்திரனும் அப்போது எங்களுக்கு 30 வருட
அனுபவ உரிமை இருக்கிறது என்று வாதாடவில்லை.
ஆனால் தமிழருக்கு தானே தலைவன் என்று
அறிவித்துக் கொண்ட பெரியாரோ ஆந்திரனுக்கு
ஆதரவாக வாதாடியது காலத்தின் கொடுமையாகும்.
அதைக் காட்டிலும் குமரி முதல் வேங்கடம் வரை
என்கிற அறிவு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
தமிழருக்கு இருந்தது என்பதும் கூட
பெரியாருக்குத் தெரியாதது விந்தையிலும்
விந்தை.
பெரியாரின் நிலைப்பாடு குறித்து 'எனது
போராட்டம்' (பக்கம்.643) நூலில் ம.பொ.சி.
எழுதுகிறார்: "வடக்கெல்லைப் போராட்டம் நடந்து
கொண்டிருந்த போது ஈ.வெ.ரா. அவர்கள் தினத்தந்தி
நாளேட்டிற்கு அளித்த நேர்காணல் அவ் வடக்கெல்லைப்
போராட்டத்திற்கு எதிராக இருந்தது. "தமிழரசுக்
கழகத்தோடு திராவிடர் க கழகத்தாருக்கும் கருத்து
வேற்றுமை இருப்பதால் தான் சித்தூர் கிளர்ச்சியில்
எனது கழகம் கலந்து கொள்ள வில்லை. மேலும், கடவுள்
சிலை உடைப்புப் போராட்டத்தை நான் துவங்கி
இருப்பதால் எல்லைக் கிளர்ச்சியில் கவனம் செலுத்த
என்னால் முடியவில்லை. அவரவர்கள் போராட்டம் தான்
அவரவர்களுக்குப் பெரிது" என்றார்.
ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பீடில்
வாசித்ததைப் போல தமிழர் தாயகப்பகுதிகள்
பறிக்கப்பட்ட போது கடவுள் சிலை உடைப்புப்
போராட்டம் நடத்தி அதனை பெரியார் மடை மாற்றினார்.
இப்போது தமிழர்களின் ஆற்றுநீர் உரிமையை பறிக்கும்
வகையில் கர்நாடக அரசு மேக்கேத் தாட்டு அருகே
அணை கட்ட முயன்று வருகிறது. இதற்காக இந்த ஆண்டு
வரவு-செலவு அறிக்கையில் 25 கோடி ரூபாய்
ஒதுக்கீடும் செய்து விட்டது. அணை கட்டப்பட்டு
விட்டால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட
கிடைக்காது. எனவே தமிழக மக்களை கர்நாடக அரசின்
அநீதிக்கு எதிராக போராடத் தூண்டும் வகையில் தான்
இன்றைய அரசியல் போராட்டங்கள் நடைபெற வேண்டும்.
அதை விட்டு விட்டு வீரமணியார் தமிழ்ப்பெண்களின்
தாலி அறுக்கும் நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம்
தமிழகளின் உயிர்நாடிப் பிரச்னைகளை பெரியாரின்
வழியில் மடைமாற்றத் துணிந்துள்ளார். இதனை
தமிழர்கள் இனியும் பொறுத்துக் கொள்ளக்கூடாது.
வீரமணியின் பித்தலாட்டத்தை தோலுரித்து
அம்பலப்படுத்துவது ஒவ்வொரு தமிழரின்
கடமையாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக