வியாழன், 4 மே, 2017

வேர்ச்சொல் பார் காவியம்

aathi tamil aathi1956@gmail.com

12/3/15
பெறுநர்: எனக்கு
பார் என்ற சொல் பார்க்கும் செயலையும் தேடும்
செயலையும் குறிக்கும்...உதாரணமாக,
அங்கு இருக்கிறதா என்று பார்க்கிறேன்...அதே போல்
பார், தேடு என்ற சொற்களுக்கு இணையாக
தேவு(தேவுதல்)>தேகு(தேகுதல்) என்ற
சொற்களையும் நாம் பயன்படுத்துவோம்
...இந்தி மொழியில் தேக்கோ என்றால் பார்
என்று அருத்தம்...
தமிழ் மொழி பாரத துணைக்கண்டம் முழுவதும்(உலகம்
முழுவதும் கூட)
பரவியிருந்தது என்பதற்கு இது போன்ற சொற்களும்
தமிழ் ஊர்ப்பெயர்களுமே ஆதாரம்...
#தமிழ்ச்_சொல

 தமிழ்வேந்தன் தமிழன்
காவியம் என்ற சொல் தமிழ்ச் சொல்லே.
காப்பு+இயம்=காப்பியம். கா எனும் ஓரெழுத்துச்
சொல் காப்பு எனும் சொல்லைக் குறிக்கும். ஆகையால்,
கா+இயம்=கா+வ்+இயம்(உடம்படுமெய்)=காவியம்
எனவும் வரும். இதற்கு,
காத்து இயம்புவது என்று பொருள். அதாவது,
காப்பியம்=காவியம்.
நன்றி : குயில் இதழ்(24-6-1958) - கட்டுரை -
"வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?" -
பாவேந்தர் பாரதிதாசன்
இச்சொல், பேச்சு வழக்கில் சமஸ்கிருதத்தில்
காவியம்>காவியா>காவ்யா என்று திரிந்தது.
#தமிழ்ச்_சொல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக