திங்கள், 1 மே, 2017

முக்குலம் ஒரே குலம் கிடையாது தேவர் பட்டம் அரசியல்

aathi tamil aathi1956@gmail.com

23/3/15
பெறுநர்: எனக்கு
* மறவரின் ஓட்டு அதிமுக'வுக்கு என்பது
எழுதப்படாத நியதி. அப்படி எனில், திராவிட
இயக்கங்கள் சாதி வெறியர் என்று கூறும் 'மறவர்
முத்துராமலிங்கம் ' அவர்களின் குருபூஜைக்கு
திமுக,மதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள்
செல்வது ஏன்? அட....பா.ஜ.க,காங்கிரஸ் தேசிய
கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் கூட, தமிழ் நாடு என்று
வரும் போது 'தேவர்' மக்கள் என்கிற அரசியலை கையில்
எடுப்பது ஏன்?
* ஏன் திராவிட, தேசிய கட்சிகள் கள்ளர்களின்
(பெருங்காம நல்லூர்) நினைவேந்தல் நிகழ்வுக்கோ,
மருது சகோதரர்களின் வீர வணக்கத்திர்க்கோ செல்வது
இல்லை? கண்டு கொள்வது இல்லை? அரசு விழாவாக
அறிவிக்க வில்லை? மறவர் ஒருவரின் நினைவேந்தல்
நிகழ்வை, மற்ற இருவருக்குமான நிகழ்வு என்று
சேர்த்து திணிப்பது யார்...? ஏன்? என்ன நோக்கம்..?
யாருக்கு பலன்...? யாருக்கு அழிவு...? இதை எல்லாம்
நாம் பார்க்க இருக்கிறோம்.
'தேவர்' என்றால் என்ன?
---------------------------------------
தேவர் என்பது கள்ளர் மறவர் அகமுடியாயாரை
குறிக்கும் சாதி அல்ல. அது ஒரு பட்டம். இந்தியா
முழுவதும், தமிழகத்தில் வன்னியர் உட்பட
பலருக்கும் இருக்கும் பட்டம் அது. அப்படி இருக்க,
'தேவர்' என்பது மூன்று சாதிகளை மட்டும்
குறிக்கும் ஒரு சொல் என்றும், இந்த மூவரும்
சேர்ந்து தேவர் இனம் என்று சொல்வது அபத்தம். தேவர்
என்பதே பட்டம் என்று ஆகிய பின்பு, தேவரினம்
என்பது ஒரு மாயை என்பதை மறவர் உள்ளிட்ட
முக்குலத்தொரெ ஒத்து கொள்கிறார்கள். 'தேவரினம்'
என்று சொல்வதை எதிர்க்கிறார்கள். அப்படி எனில்
'தேவர்' என்று இன்று சொல்லப்படுகிற மூன்று சாதி
கூட்டமைப்பு எப்படி உருவாகியது? இயல்பாகவே
உருவாகியதா?
'தேவர்' மூவர் கூட்டணி
--------------------------------------
இந்த மூவர் கூட்டணி இயல்பாக உருவாகவில்லை.
இன்னும் சொல்லப்போனால், இந்த மூன்று சாதி மக்களும்
என்றும் ஒற்றுமையாகவே இருந்தனரா என்பது
சந்தேகமே....!!! மண உறவு உள்ளிட்ட எந்த கொடுக்கல்
வாங்கலும் இவர்கள் கலாச்சாரத்தில் இல்லை. இதை தான்
இந்த மூவரும் வரலாற்றில் ஒருவரை ஒருவர்
எதிரிகளாக பார்த்து வந்துள்ளனர் என்பதற்கு ஒரு
சில சான்றுகள் இதோ.
* மறவர் தினகரன் எழுதிய 'முதுகுளத்தூர் கலவரம்'
என்னும் நூலில், 'பார்வர்டு பிளாக் கட்சியின்'
அடக்குமுறையில் இருந்து எம்மை காக்க வேண்டும்
என்று, ஜில்லா அதிகாரிக்கு அந்த பகுதி மக்கள்
கடிதம் எழுதினதாக ஒரு செய்தி உள்ளது. அதில் கை
எழுத்து இட்ட மக்களில் நாடார்,கோனார் உட்பட
'சேர்வை'யும் இருப்பர். பார்ப்வர்டு பிளாக் கட்சியில்
இரண்டாம் நிலை தலைவர்களாக, 'மறவர்
முத்துராமலிங்கம்' அவர்களுக்கு மெய்
காப்பாளர்களாக இருந்தவர்கள் பள்ளர்களே....!!! எனவே
பார்வர்டு பிளாக் கட்சியின் ஒடுக்குமுறை என்பது
மறவர் + பள்ளர் கூட்டணி என்றே கொள்ள வேண்டும்.
இதில் இருந்து மறவர் + பள்ளர் கூட்டணி 'சேர்வை'
உள்ளிட்ட சாதிகளை ஒடுக்கி உள்ளனர் என்கிற தகவலை
நாம் உணர முடியும். இதன் மூலம் முத்துராமலிங்க
தேவர் காலத்தில் கூட கள்ளர் மறவர் அகமுடையார்
கூட்டணியாக 'தேவர்' என்கிற சொல்லாடலோ, அதை
ஒட்டிய அரசியலோ இருந்ததா என்பது சந்தேகமே....!!!
* மறவர் சாதியை வீழ்த்தியதே மருது சகோதரர்கள்
தான், எனவே அகமுடையார் சாதி மக்கள் 'மா மன்னர்'
என்று மருது சகோதரர்களை அழைப்பது கூடாது
என்று மறவர் சமூக மக்கள் கொடுத்த புகார் நகல்
இங்கே இணைக்கப்பட்டு உள்ளது. மேலும், 'மறவர்
முத்துராமலிங்கம்' அவர்களின் குருபூஜைக்கு கூட
அகமுடையார் சாதி மக்கள் ஒரு நாள் முன்னதாகவே
வந்து செல்வதாக கேள்வி. இதில் இருந்து இவ்விரு
சாதி மக்களும் வரலாற்றில் ஒன்றாக இருந்தது இல்லை
என்பதை அவர்களே ஒத்து கொள்வது தெரிகிறது.
* பாடுபடுவது மறவர், ஆனால் 'தேவர்' என்கிற
பெயரில் ஆண்டு அனுபவிப்பது மற்ற இருவருமா
என்று 'மறவர்' சாதி மக்கள் சார்பாக குரல் எழுப்பிய
அமைப்பு, 'தேவர் இனம்' என்று சொல்வதை ஏற்க்கவில்லை
என்று தெளிவாக தெரிகிறது. இன்றைய சாதி
பட்டியலில் கூட 'தேவர்' என்று பதிய ஒரு பிரிவு
கூறினால், பதிய கூடாது என்று அவர்களுக்குல்லை
யே கலகம் கேட்பதும் பரவலாக அறிந்தது தான்.
அப்படி எனில், வரலாற்றில் என்றும் இல்லாத தேவர்
என்கிற ஒரு இனத்தை, வெறும் பட்டமாக மட்டுமே உள்ள
ஒரு வார்த்தையை, 'தேவர்' என்று அரசியலாக்கில்,
மூவரை அதில் திணித்து, அந்த மூவருக்கும் ஒருவரை
தெய்வமாக்கி, அடையாளம் ஆக்கி, திணித்தது மிக,
திராவிட அரசுகளால் போற்றி வளர்க்கப்படும்
அரசியல் அன்றி வேறு இல்லை.
ஏன் தேவர் அரசியல்?
-------------------------------------
வடக்கில் வன்னியர் பறையர் மோதலில் கூட இந்த
நுணுக்கமான அரசியல் பின்பற்ற பட வில்லை. ஆனால்
தென் தமிழகம் தான் ஒட்டு மொத்த தமிழகமும்
அமைதியாக இருக்கிறதா, பதட்டமாக இருக்கிறதா
என்பதை தீர்மானிக்கும்.
> கள்ளர் மறவர் அகமுடியார் என்ற மூன்று சாதிகளை
சேர்த்து தேவர் என்று ஒரு சாதியாக்கி, இறுதியில்
தேவர் என்கிற ஒரு இனமாக காட்டும் முயற்சி
தொடங்கப்படுகிறது.
> இவர்களின் அடையாளமாய் மறவர் சமூகத்தில் இருந்த
ஒருவர் காட்டப்படுகிறார். காங்கிரசுக்கும்,
திராவிட கட்சிக்கும் எப்படி பார்வர்டு பிளாக்
சிம்ம சொப்பனமாக இருந்தது என்கிற வரலாறு, இன்று
எப்படி மேற்ப்படி கட்சிகள் குருபூஜையில் அக்கறை
செலுத்துகின்றன என்பதில் இருந்து, மேற்ப்படி
'தேவர்' அரசியலின் வீரியம் உங்களுக்கு புரியும்.
> 'தேவர்' அடையாளம், தேவர் சொல்லாடல், தேவர் பற்றிய
திரைப்படங்கள், அரசு விழா, என அடுக்கடுக்காக
காட்சிகள் அரங்கேறுகின்றன.
> இறுதியில், தேசிய திராவிட கட்சிகளுக்கு
மேற்ப்படி சாதிகளில் இருந்து அமைச்சர்களை,ஆதி
க்கவாதிகளை பெறுவது எளிது. மக்களுக்கு
கொடுக்கப்பட்டது 'தேவர்' என்கிற சொல்லாடலும், அதன்
பின்பு உள்ள போதையும். அது இன்றுவரை 'கொம்பன்' படம்
வரை தொடர்கிறது. ஆனால் சாமானிய முக்குலத்து
மக்களின் நிலை, சில பட்டியல் சாதி மக்களின்
நிலையை விட மோசம் என்பது அவர்களே
ஒத்துக்கொள்ளும் உண்மை.
'தேவர்' அரசியலால் தமிழ் தேசியம் எப்படி
பாதிக்கப்படும்?
1. இதே 'தேவர்' என்கிற சொல்லாடல் தமிழ் தேசிய
ஆட்சியில் இருந்தால் கேள்விக்கோ, பதட்டத்துக்கோ,
விமர்சனத்துக்கோ அவசியம் இல்லை. அனைவரும் ஏற்றுக்
கொள்வர். ஆனால் எதிரியானவன் இங்கே ஆண்டு கொண்டு
இருக்கும் போது, அவன் 'தேவர்' அரசியலை கையில்
எடுக்கும் போது, கேள்விகள், சந்தேகங்கள் வருவது
இயல்பே....!!!
2. எதிரிகள் 'தேவர்' அரசியல் மூலம் தென் தமிழக
சமூகங்களை அச்சுருவதன் மூலம், தங்கள் அரசியல்
தங்கு தடை இன்றி நடைபெற விரும்புகின்றனர்.
உதாரணமாக, நியூட்ரினோ திட்டத்தை நிறைவேற்ற
வேண்டும் என்றால், ஏதாவது ஒரு முத்துராமலிங்கம்
அவர்களின் சிலையையோ, இம்மானுவேல் அவர்களின்
சிலையையோ உடைத்தால் போதும். ஈழப் போராட்டத்த்ல்
மாணவர்கள் மிக தீவிரமாக இறங்கிய போது, தென்
தமிழகத்தில் சிலைகள் உடைக்கப்பட்டதன் நோக்கம், யார்
உடைத்தார்கள் என்பது இப்போது புரிந்திருக்கும்.
எனவே, கள்ளர் மறவர் அகமுடையார் சமூக மக்களே,
தமிழர் ஒற்றுமை, திராவிட எதிர்ப்பு, தமிழ்
தேசியம் போன்றவற்றில் இருந்து உங்களை
அப்புறப்படுத்த, அன்னியபப்டுத்த எதிரிகள்
உங்களையே மற்றவர்களுக்கு எதிராக பகடை காயாக
பயன்படுத்த கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக