திங்கள், 15 மே, 2017

வீணை செய்தல் இன்றும் சிறப்பாக

aathi tamil aathi1956@gmail.com

27/1/15
பெறுநர்: எனக்கு
பலா மரத்தில் உருவாக்கப்படும் தஞ்சாவூர்
வீணை!
விகடன்
 தஞ்சையில் உருவெடுத்து உலக அளவில்
உலா வரும் இந்த கலைப் பொக்கிஷத்திற்கு,
புவிசார் குறியீடு வழங்கி,
பெருமைப்படுத்தியுள்ளது மத்திய அரசு.
பாரம்பரிய புகழ்மிக்க, தஞ்சாவூர் வீணையில்,
நாதம் மீட்டுவதை பெரும் பாக்கியமாகவும்,
கவுரமாகவும் சிலாகிக்கிறார்கள் இசைக்
கலைஞர்கள். சமூகத்தில் உயரிய அந்தஸ்தில்
இருக்கும் பலர், தங்களுக்கு இசைக்க
தெரியாவிட்டாலும் கூட, வீடுகளில்
தஞ்சாவூர்
வீணை வைத்திருப்பதே பெருமை என்று நினைக்
பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, லண்டன்,
சிங்கப்பூர், அமெரிக்கா என பல நாடுகளுக்கும்
பயணம் செய்கிறது, நம் நாட்டின் தஞ்சாவூர்
வீணை.
தற்போது தஞ்சாவூரில் சுமார் 100
கைவினைஞர்கள், இதனை உருவாக்கும்
உன்னத பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஆண்டுக்கு ஆயிரத்திற்கும் அதிகமான
வீணைகள் தயார்
செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறத
அழகிய மரவேலைப்பாடுகளுக்கு ஏற்ப,
இவை ஒவ்வொன்றும், 12,500 ரூபாய் முதல்
40 ஆயிரம் ரூபாய்
வரை விலை மதிப்பு கொண்டது.
தஞ்சாவூர் வீணை தொழிலாளர்கள் சங்கத்தின்
பொருளாளர்
வீணை சின்னப்பா பெருமையோடு பேசியபோது
‘‘ராஜ ராஜ சோழன் ஆட்சிகாலத்துல
இருந்தே தஞ்சாவூர்ல
வீணை தயாரிப்பு நடந்துக்கிட்டு இருக்கு.
ஆனா இப்பவுள்ள தஞ்சாவூர் வீணை, ரகுநாத
நாயக்க மன்னர் ஆட்சி காலத்துல
உருவாக்கப்பட்டதாக சிலர் சொல்றாங்க.
எது எப்படியோ, நம்ம மண்ல, தஞ்சாவூர்
வீணை, பல
நூறு ஆண்டுகளா உயிர்ப்போடு வாழ்ந்துக்கிட்
இதை உருவாக்குறதே ஒரு தவம் மாதிரிதான்.
எல்லோராலும் இதை நேர்த்தியா,
கலைநயத்தோடு செஞ்சுட முடியாது.
தஞ்சாவூர் வீணையில ஏகாந்த வீணை,
ஒட்டு வீணை என இரண்டு விதமான வகைகள்
உண்டு. ஒரே மரத்துல செய்யப்பட்டது, ஏகாந்த
வீணை. அதில் மரத்துண்டுகளே இருக்காது.
ஒட்டு வீணைங்கறது,
மூன்று மரத்துண்டுகளை கொண்டது.
இதைதவிர, இந்த இரண்டு வீணைக்கும்
வேறு எந்த வேறுபாடும் கிடையாது.
தஞ்சாவூர் வீணைகள் எல்லாமே முழுக்க
முழுக்க பலா மரத்தால் தான்
செய்யப்பட்டிருக்கும். வீணையின் மிக
முக்கியமான பாகமே, பானைதான்.
கம்பிகளை மீட்டும்போது, பானையில் உள்ள
துளைகள் வழியாகத்தான் இசை வெளிப்படுது.
பானை, மரத்துல இருந்தாதான்
இசை நேர்த்தியா வெளிப்படும்.
ஆனா பெங்களூரூ மாதிரியான ஏரியாக்கள்ல
பானைக்கு பைபர் பயன்படுத்துறாங்க.
தஞ்சாவூர் வீணைக்கு இன்னும் பல
தனித்துவமான அடையாளங்கள் இருக்கு.
வீணையின் தலைப்பு பகுதியில் யாழி என்ற
மிருகத்தின் உருவம் தத்ரூபமாக
அமைக்கப்பட்டிருக்கும். இது பல
தலைமுறையா பழக்கப்பட்ட தஞ்சாவூர்
கைவினைகளுக்கும் மட்டுமே கை வந்த கலை.
தஞ்சாவூர் வீணை 8 கிலோ எடை இருக்கும்.
இதோட மொத்த நீளம் 52 இஞ்ச். பானையோட
அகலம் 15 இஞ்ச்... உயரம் 12 இஞ்ச்.
தஞ்சாவூர் வீணையில மட்டும்தான்
இந்தளவுக்கு விதவிதமான சிற்பங்கள்
தத்ரூபமாக செதுக்கப்பட்டிருக்கும். இந்த
சிற்பங்களை எல்லாம் நாங்களே கையால
செதுக்குவோம். எங்களுக்கு வீணை எல்லாம்
வாசிக்க தெரியாது. ஆனா நாங்க அமைக்குற
24 பித்தளை கட்டிகளும் மிக அழகா,
ஸ்வரங்களை துல்லியமா எழுப்பும்.
இது ரொம்ப ஆச்சர்யமான விஷயம்.
கட்டிகளுக்கு இடையே துல்லியமான
நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகள் எதுவும்
கிடையாது.
ஆனா கட்டிகளுக்கு இடையே விதவிதமான
இடைவெளிகள் இருக்கும். இதுல
ஏதாவது ஒரு இடைவெளி, நூல்
அளவுக்கு மாறிப்போனாலும், ஸ்வரங்கள்
மாறிடும். நாங்களா எங்க அனுபவத்துல,
ஒரு நிதானமாதான் இந்த
கட்டிகளை அமைக்குறோம்.
எல்லாமே சரியா இருக்கும். கீபோர்டுல
எல்லா இசையையும் கொண்டு வந்துட்டாங்க.
ஆனா தஞ்சாவூர் வீணையோட
இசையை மட்டும் நேர்த்தியா கொண்டு வர
முடியலை. அதனாலதான் சினிமா பாடல்
பதிவுகளுக்கு நேரடியா தஞ்சாவூர்
வீணையை பயன்படுத்துறாங்க’’ என
பெருமிதப்பட்டார்.

தமிழிசை கருவி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக