வியாழன், 4 மே, 2017

வேர்ச்சொல் சொல்லாய்வு ரகசியம்

aathi tamil aathi1956@gmail.com

12/3/15
பெறுநர்: எனக்கு
தமிழ்வேந்தன் தமிழன் > தமிழ்ச் சொல்லாய்வு
இரகசியம் என்ற சொல் தமிழ் மொழிச் சொல்லே.
அகசு=பொழுது, பகல், இராப்பகல் கொண்டநாள்.
அகசு+இயம்=அகசியம். இதன்பொருள், ஆசியம்,
வேடிக்கை, பகிடிக்கூத்து, ஏளனம் என்பவையாகும்.
அதாவது, அனைவரையும் பார்க்கும் படி பார்க்கும்
பொழுது செய்வது அகசியம் எனப்படும். இரு எனும்
சொல் உரிச்சொல்லாக வரும்பொழுது இருண்ட, கரிய
முதலிய பொருள்களைக் குறிக்கும். உதாரணம், இரா,
இருள், இருட்டு, இருண்டு மற்றும் இரவு ஆகிய
சொற்கள். இரு+அகசியம்=இரகசியம். இதன்பொருள்,
யாரும் பார்க்காதபடி அல்லது யாரும்
பார்க்காதபொழுது, யார் கண்ணுக்கும்
அல்லது யாருக்கும் தெரியாத இருட்டான
அல்லது மறைவான இடத்தில் இருக்கும் நேரத்தில்
சொல்லப்படுவது செய்யப்படுவது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக