வியாழன், 11 மே, 2017

ஓவியர் சாதி இலங்கை தமிழகம் தொடர்பு ஈழம் பல்லவர்

aathi tamil aathi1956@gmail.com

28/2/15
பெறுநர்: எனக்கு
ஓவியர் என்போர் சங்க காலத்தில் இப்போதுள்ள
திண்டிவனம் பகுதியில் வாழ்ந்த குடிமக்கள். இந்த
ஓவியர்-குடி மக்கள் வாழ்ந்த நாடு ஓய்மானாடு
எனப்பட்டது. ஓய்மான் நல்லியக்கோடன், ஓய்மான்
வில்லியாதன் ஆகிய மன்னர்கள் இந்த
நாட்டுப்பகுதியை ஆண்ட ஓவியர்-குடி அரசர்கள்.
[1]
'ஓ' என்னும் சொல் மதகடைக்கும் பலகையைக்
குறிக்கும். [2] ஓய்மானாட்டில் ஏரிகள் மிகுதி.
மதகடைக்கும் ஓக்கள் மிகுதியாக இருந்த
நாடு ஓய்மானாடு எனப்பட்டது. இந்த நாட்டைப்
பற்றிக் கூறும் சிறுபாணாற்றுப்படை அடிகள்
இதனை 'பொருபுனல் தரூஉம்'
என்று குறிப்பிடுவது 'ஓ' < ஓய் என
மருவியது என்பதற்கு வலுவூட்டுகிறது.
ஓவியர்குடி மக்கள் வாட்போரில் வல்லவர்கள்.
இவர்களின் முன்னோன் ஒருவன் இலங்கைத்
தீவிலிருந்தபோது கரு தரித்து தாய்
இங்கு வந்தபின் பிறந்தான் என்று பாடல்
தெரிவிக்கிறது. இவன் தலைதூக்கி நிறுவிய ஊர்
‘நன்மாவிலங்கை’. இது இவன் கருவுற்ற
‘தொன்மாவிலங்கை’ நினைவாகச் சூட்டப்பட்டது.
வில்லியாதன் ஆண்ட ஊர்
இப்போது ‘வெள்ளிமேடுபேட்டை’ என்னும் பெயருடன்
விளங்குகிறது.
பல்லவர் வரலாற்றில் வரும்
பீலிவளை கதையை இதனோடு ஒப்பிட்டு
எண்ணவேண்டியுள்ளது. [3]
இவற்றையும் காண்க
சங்க கால நாட்டுமக்கள்
அடிக்குறிப்பு
1. ↑
தொன்மா இலங்கை கருவொடு பெயரிய
நன்மா இலங்கை மன்னர் உள்ளும்
மருவின்றி விளங்கிய வடு இல் வாய்வாள்
உருபுலித் துப்பின் ஓவியர் பெருமகன் ...
நல்லியக்கோடன் சிறுபாணாற்றுப்படை 122
2. ↑
குட மலைப் பிறந்த கொழும் பல் தாரமொடு
கடல் வளன் எதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புது நீர்க் கடு வரல் வாய்த்தலை,
ஓ இறந்து ஒலிக்கும் ஒலியே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக