திங்கள், 15 மே, 2017

ஒரிசா பாலு கடல் ஆய்வு குமரிக்கண்டம் வேர்ச்சொல் மீனவர் கப்பல் பழமை சான்று

aathi tamil aathi1956@gmail.com

9/2/15
பெறுநர்: எனக்கு
இரண்டு வருடத்திற்கு முந்தைய கவின்
மீடியா வலை தளத்தில் நண்பர் பொன் மூர்த்தியின்
முயற்சியால் வெளி வந்த கட்டுரை உங்கள் பார்வைக்கு
இரண்டு வருடத்தில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு உள்ளது
இப்பொழுது இலக்கு உறுதி செய்ய பட்டு உள்ளது
---------------------------------------------
----------------------------------------
திருத்தப்பட்ட கட்டுரை உங்கள் கருத்துக்களை எதிர்
பார்த்து
இந்த தேடலில் விருப்பம் இருந்தால் நீங்களும்
பங்கு கொள்ளலாம் தமிழர்கள் தான் உலகில் எல்லாம்
என்று சொவது என் நோக்கம் அல்ல
புவியின் சுழற்சியில் நாம் இருக்கும் தென் நில
பகுதி எந்த
அளவு முக்கியமானது என்பதை உலகிற்கு கொண்டு செல்
முயற்சி
நாம் அனைவரும் இன்று இருப்போம் நாளை வேறு பலர்
இருப்பார்கள்
ஆனால் இந்த புவி இயங்கி கொண்டு தான் இருக்கும்
அதை வெளி படுத்த தான் இந்த தேடல்
உலகில் மாந்தர்கள் முதன்முதலில் தோன்றி வாழ்ந்த இடம்
ஆப்பிரிக்கா பகுதிதான் என்று முதலில்
ஒரு தரப்பு ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.
பிறகு குமரிக் கண்டம்தான் மனிதர்கள்
தோன்றி பெருங்கூட்டமாக வாழ்ந்திருக்கிறார்கள்
என்று தமிழ் உணர்வாளர்கள் பலர் சொல்ல பலர்
அதை மறுக்க, தற்போது ஒருங்கிணைந்த கடல்
ஆய்வு மேற்கொண்டு தமிழர்கள் கடலில் இழந்த
நிலங்களையும் அவர்கள் உலகெங்கும் பரவி வாழ்ந்த
தகவல்களையும் திரட்டும் பணியிலும்
ஈடுபட்டிருக்கிறார் சிவ. பாலசுப்ரமணி. இவர்
திருச்சி உறையூரில் பிறந்து 1989இல் தனியார்
துறையில் பொறியாளராக ஒரிசா சென்றார்.
இவர் கடலைப் பயன்படுத்தி நாகரிகத்தையும்
தொழில்வளத்தையும் பெருக்கிய தமிழரின்
வரலாற்றை நிகழ்கால ஆதாரங்களோடு அறிவியல்பூர்வமா
க நிரூபிக்கும் அரிய பணியைச் செய்துவருகிறார்.
சிவ. பாலசுப்பிரமணி தனது 20 ஆண்டுகாலத் தொடர்
கடல் மற்றும் மானுடவியல் ஆய்வின் மூலம் உலகில்
நாகரிகம் அடைந்த மனிதர்கள் தமிழகத்தில்தான்
தோன்றி வாழ்ந்திருக்கிறார்கள் என்று பல ஆவணங்களைக்
கண்டறிந்து ஆதாரங்களோடு விளக்கியிருக்கிறார்.
ஆய்வாளர் சிவ. பாலசுப்பிரமணி அவர்களிடம் கவின்
இணையத்துக்காக தமிழ் நிலம், தமிழர் தொன்மை, கடல்
பரப்பு, மொழி ஆளுமை ஆகியவை பற்றிக் கேட்டோம்.
“ஒரிசாவில் நிலத்தொன்மையியல் துறையில் 20 ஆண்டுகள்
பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது அங்கு தமிழ்நிலத் தொன்மை பற்றி ஆராய்ந்தேன்.
அதில் கலிங்கா , உட்கலம், கோசலம் ஆகிய இடங்களில்
தமிழ்ப் பண்பாட்டு கூறுகள் தென்பட்டன. மேலும்
அங்கு 14 தமிழ்ப் பழங்குடியினர்
வாழ்ந்து வருகின்றனர் என்றும் தெரியவந்தது.
அங்கு இரண்டு வகையான கடற்கரை மக்கள் வாழ்கின்றனர்.
அவர்களை நௌலியா, கேவுட்டா அதாவது கயல்வர்தகர்
என்ற கைபர்தா என்கின்றனர். இவர்கள் தமிழ் மீனவர்கள்.
எனது ஆய்வில், முழுக்க முழுக்க தமிழக நிலம்,
தமிழர்கள் நிலத் தன்மையை எப்படி அறிந்திருந்தார்கள்,
உலகத்தின் நாகரிகத்திற்கு இவர்கள் எப்படிப்
பயன்பட்டார்கள், முன்தோன்றிய மூத்தகுடி என்பதற்கான
அடிப்படை ஆதாரங்கள் எவை என்பதைப் பற்றிய ஆய்வில்
அறிவியல்பூர்வமாக எப்படி நிரூபிக்கமுடியும் எனக்
கண்டறிந்தேன்.
என் கடலாய்வுக்கு வித்திட்டவர் (2007இல் ஒரிசாவின்
மாவட்ட ஆட்சியரான) திரு. சந்தான கோபாலன்
அவர்களைச் சந்தித்தபோது, “சேட்டிலைட்டால்
குமரிக்குக் கீழே நிலநீட்சி தனியா தெரியுது. ஏன்
கிளைகளை ஆய்வு செய்றீங்க?
கடலாய்வு பற்றி தீவிரமா நீங்க ஏன்
ஆய்வு பண்ணக்கூடாது? தமிழனின் மூலம்,
வேரை எடுத்துடலாம். கிளைகளில் தமிழனின்
வரலாற்றைத் தேடாதீர்கள்” என்றார். என் ஆராய்ச்சியில்
இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
மேடம் ப்லாச்த்கி என்பவர்தான் எக்கல் மற்றும் ஸ்லாட்டர்
சொன்ன கடலுக்குள் உள்ள நில பாலம் தொடர்பான
லெமூரியா என்றகொள்கையை தமிழகத்திற்கு கொண்டுவந்த
மெக் லீன் என்பவரும் 5 வருட கடலாய்வில், தமிழரின்
தொன்மை லெமூரியாவில்தான் உள்ளது என்று சொன்ன
தகவல்களை நீதிபதி ம. நல்லசாமி பிள்ளை எடுத்து,
1898இல் முதல் செய்தியாக வெளியிட்டார்.
குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு என்ற
சொல்லைப் பிரபலப்படுத்தியவர் முதலில்
பன்மொழிப்புலவர் அப்பாத்துரையார்தான்.
1941இல் அரசன் சண்முகனார், சோமசுந்தர பாரதி,
சுப்ரமணியம் சாஸ்திரி போன்ற பலர் சொன்னாலும்
தமிழரின் தாயகம் குமரி நிலம்
என்று பிரபலப்படுத்தியவர் மொழிஞாயிறு தேவநேயப்
பாவாணர் ஆவார்.
குமரிக்கண்டம் பற்றிப் பேசிய யாரும் ஏன்
கடலாய்வு செய்யவில்லை என்று தோன்றியது. அதனால்
கன்னியாகுமரியிலிருந்த மீனவர்களுடன்
கலந்தாலோசித்தபோது, திருவோண பாறை எனப்படும்
விவேகானந்தர் பாறையிலிருந்து 8 கி.மீ. தூரத்தில்
36 மீட்டர் ஆழத்தில் 15,000 சதுர அடியில் பழைய கால
இடிபாடுடன் கூடிய கோயில் உள்ளது என
அறியமுடிந்தது. இதனை டாலமியும் சொல்லியுள்ளார்.
ஆபிரகாம் பண்டிதர் தன்னுடைய கருணாமிர்த சாகரம்
என்ற நூலிலும் லெமுரியா கோட்பாடை தெளிவாக
குறிப்பிட்டுள்ளார்.
பின்பு, இந்தியப் பெருங்கடல் முழுவதும்
செய்மதி துணை கொண்டு ஆய்வு செய்தேன்.
இதுவரை நான்கு இடிபாடுகள் உள்ள இடங்களையும்,கடல
ுக்குள் இருக்கும் அலையாத்தி காடுகளையும் மற்றும்
ஒரு தீவு மூழ்கி உள்ளதையும் கண்டிருக்கிறேன்.
மொத்தத்தில் 20000 தீவுகள் இந்திய பெருங்கடலில்
இருப்பதைக் கண்டறிந்தேன்.
கட்டுமரம், திரிமரன், தெப்பம் போன்ற கடல் சம்பந்தப்பட்ட
பல பெயர்கள் தமிழில்தான் உள்ளன. உலகில், கப்பலில்
ஒரு நாளைக்கு ஆறு வேளை மணியடிப்பதைக்
கடைப்பிடிக்கும் முறை இருந்துள்ளது.
ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாகப் பிரித்துக்
காட்டுகிறது தொல்காப்பியம். உலக இலக்கியங்கள்
எதிலும் இதுபோன்ற பகுப்புமுறை இல்லை. தமிழர்கள்
நிலத்திற்குக் கொடுத்த மரியாதை ஆச்சரியப்பட
வைக்கிறது.
குமரிக் கண்டத்தினை ஆய்வு செய்யாமல் எப்படி பொய்
என்று சொல்லமுடியும். இந்தியப் பெருங்கடலில் 2500
பி.சி. சிந்து சமவெளி காலத்திலிருந்து மக்கள்
வந்தார்கள். எகிப்திலிருந்து அரசி புன்ட் என்ற
நாட்டிற்கு தொடர்ச்சியாக தங்கள்
கடலோடிகளை அனுப்பி வந்தார்கள். கி.மு. 4ஆம்
நூற்றாண்டில் அரிஸ்டாட்டில், 6ஆம் நூற்றாண்டில்
பிதாகரஸ் போன்றவர்கள் வடபகுதியில் இவ்வளவு நிலம்
இருக்கும்போது தென்பகுதியில் ஏன் நிலம்
இருக்கக்கூடாது என்று சொல்லி தொடர்ச்சியாக TERRA
AUSTRALLIS- UNKNOWN SOUTH LAND என்ற
ஆய்வு செய்தார்கள்.
நான் எனது ஆராய்ச்சிப் பணியை கடல் துறை, நிலவியல்,
வானியல், மானுடவியல் என 23 துறைகளாகப்
பிரித்துப் பணியாற்றினேன். இயற்கையின் சீற்றத்தால்
எப்படி இடம் மாறியுள்ளோம், நிலம்
எவ்வளவு தொன்மையானது என்பது பற்றி எனது ஆய்வு செ
1863, மே 30இல் சென்னை பல்லாவரத்தில் ராபர்ட்
ப்ருசே பூட் தொடர்ச்சியாக 30 வருட
ஆராய்ச்சி செய்துள்ளார். கற்கால மனிதர்கள் வாழ்ந்த
இடம் தென்மாநிலம் என்று தீர்மானமாகச் சொன்னார்.
கடலை, மலையை ஒட்டிய பகுதிகளில் குறைந்தபட்சம்
300 இடங்கள் கற்கால மக்கள் வாழ்ந்த இடங்கள் எனக்
கண்டறிந்தார். தென்தமிழகத்தில் 10000 வருடங்கள்
மக்கள் வாழ்ந்த 100 இடங்கள் கிடைத்துள்ளன.
தமிழகத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதற்கு,
கடல் சான்று பதில் சொல்கின்றன.
கன்னியாகுமரியில் 4000 சதுர மைலில் 12,500
கி.மீ. நிலப்பரப்புள்ள வாட்ஜ் பேங்க்
என்று இன்று அழைக்கப்படும் மீன்பிடி வளமுள்ள இடம்
இருக்கிறது. குமரியன் பேங்க் என்று முதலில்
அழைக்கப்பட்டு பின்னர் வாட்ஜ் பேங்க் (Wadge bank)
அதாவது சுறா பாறை என 1927இல் பெயர்
வைக்கப்பட்டது.
இங்குள்ள உப்பு, சங்கு, சிப்பி, ஆமை போன்ற நிறைய
ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது 20 மீன்பிடித்
தளங்களில் முக்கியமானது. இங்கு முன்னோர்கள் வாழ்ந்த
இடம் இடிபாடுகளாய் இன்று பல் உயிர் வாழும் இடமாக
உள்ளது.
மூழ்கிய தீவுகள் நமது தொன்மை கடலில்
பாதுகாக்கப்பட்டு வருகிறது. கன்னியா குமரியில்
4 இடங்களின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இப்பொழுது இலங்கைக்குக் கீழாக 450000 கிலோ மீட்டர்
பரப்பு உள்ள நிலம்
தாழ்ந்து இருப்பது கண்டு அடையாளம்
காணப்பட்டு மனிதர்கள் வாழ்ந்து உள்ளார்களா என்று பல
தரவுகளை வைத்து ஆய்வு செய்து வருகிறேன்.
கடல்கோள், நாகரிகத்தையே அழிக்கும் சக்தியா என்ற
கேள்வியினை, 2004இல் ஏற்பட்ட சுனாமி நம்பவைத்தது.
பூமியின் சுழற்சியும் அச்சு மாறுதலும்தான் கடல்
நிலம் கொள்ளல், விடுபடலுக்கான காரணம்
என்று பூமியின் சுழற்சியில் ஏற்படும் மாறுதல்கள்
மூலமாக ஆய்வுப்பூர்வமாக நிரூபித்தேன்.
தமிழர்களுக்கு சுனாமி புதியவை அல்ல
முதல் சங்கம் காலத்திற்கு முன்னேமே கடல் சூழ்ந்த நாம்
நிலங்களை இழந்தோம் என்பதே உண்மை .
இதற்காக கடல் சீற்றத்தின் போது ஆறுகள் வழியாக கடல்
சீற்றத்தை தனித்து வேறு வழியாக கடல்
நீரை வெளியேற்றும் தன்மை நம்மிடம் இருந்தது
பொதுவாக, உலகத்தில் காற்றை வைத்துப் பயணம்
செய்துள்ளார்கள். ஆனால், தமிழர்கள் காற்றையும்
நீரோட்டத்தையும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
கடற்கோள்களால் நிலம் அழிந்ததால் மட்டும் இவர்கள்
பயணம் செல்லவில்லை. அதற்குமுன்பே, கடலில் பயணம்
செய்யும் தன்மை பெற்றிருந்திருக்கிறார்கள். ஏனெனில்
1913 வரை இந்தியாவில் 2000 மெட்ரிக் டன்
கொள்ளவு கொண்டகப்பல்கள் இருந்ததும் அன்றைய ஆங்லேய
அரசாங்கம் அதை தடை செய்ததும் ஓடாவி என்ற
படகு கட்டும் குடும்பத்தில் இருந்து தெரிய
வந்தது . ஆங்கிலேயர்கள் இந்திய வந்த
போது அவர்களிடம் 450 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட
கப்பல்கள் தான் இருந்தது . பொதுவாக முதிய காலத்தில்
பாகிஸ்தான் எல்லையில் இருந்து பர்மா வரை திராவிட
இனத்தவர்கள் தான் வாழ்ந்தார்கள் என்பதும் நிரூபிக்க
பட்டுள்ளது
இதுதான் தமிழர்களின் தனித்தன்மை.
இந்த ஆய்வு தமிழர்களின் கடல்சார் மேலாண்மை பற்றிய
மிகப் பெரிய தகவல்களைத் தரப்போகிறது. மேற்கண்ட
ஆய்வு மூலமும் இலக்கிய ஆதாரங்கள் மூலமும்
குமரிநிலம் கன்னியாகுமரியில் உள்ள கடல்தான்
என்று நிரூபித்துள்ளேன். அங்கு பல தீவுகள்
மூழ்கியிருக்கிறது என்று கண்டுபிடித்துள்ளேன்.
மதங்கள் மற்றும் பல்வேறு பருவங்களைக் கொண்ட இடங்களில்
உள்ள மக்களும் சேரும்போது புதுப் புது மொழிகள்
உருவாகியிருக்கிறது. அவர்களுக்குள்
ஒரு அடிப்படை மொழி இருந்தது என்றால் அதுதான்
தமிழ் எனக் கண்டறிந்தேன்.
மக்கள் முந்திய காலத்தில் தொடர்ச்சியாக வாழ்ந்தார்கள்
என்பதற்கு ஆதாரமாக குடியம் குகை இருக்கும்
அள்ளிகுளி மலைத்தொடரில் பல கற்கருவிகளும்
கிடைத்தன.
வில்லியம் கிங் என்ற ஆய்வாளரின் துணையுடன்
பூண்டிக்கருகில் அத்திரம்பாக்கம்
குடத்தலை ஆற்றுப்படுகைகளிலும் குடியம்தலைப்
பகுதிகளிலும் கிடைத்த பழங்காலக் கற்கோடரிகள்
2,00,000 ஆண்டுகள் பழமையானவை என ராபர்ட்
புருசு பூட் கண்டறிந்து கூறினார்.
இதனால் இந்திய பழமையான கற்கால நகரங்கள் இங்குதான்
தோன்றியது என நிரூபித்தார். அந்த
இடத்திற்கு ‘மெட்ராஸ் கல் கோடரி தொழிற்சாலை’
என்று பெயரிட்டார். இவரை இந்திய ‘கற்கால மனித
ஆய்வுத் தந்தை’ என்று குறிப்பிட்டார்கள் ஆய்வறிஞர்கள்.
அத்திரம்பாக்கம் பகுதியில் மூன்று வகையான
கருவிகள் கிடைத்தன. அவை கிழங்குகளை எடுப்பதற்கும்
விலங்குகளை வேட்டையாடுதற்கும், எலும்புகளின்
உள்ளீடை எடுப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட கருவிகள்
எனக் கண்டறியப்பட்டன.
அந்தக் குறிப்பிட்ட இடத்தில் (அத்திரம்பாக்கம்)
முனைவர் சாந்தி பாப்பு என்பவர் ஆய்வு செய்து இந்த
இடம் 15 -17 லட்சம் ஆண்டுகள் மக்கள் இங்கு அடர்த்தியாக
வாழ்ந்திருக்கிறார்கள் என்று மீண்டும்
நிரூபித்திருக்கிறார்.
முதலில் ஆப்பிரிக்கா (ஓல்வாய் காட்ச்) தான் மக்கள்
தோன்றிய இடம் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால்
நாகரிகம் அடைந்த மனிதன் வாழ்ந்த இடம் தமிழகம்தான்
என இப்போது நிரூபணமாகியிருக்கிறது.
இங்கிருந்தும் மனித இனம் உலகம் முழுக்கப்
பரவியிருக்கிறது. அவர்கள் கடலையும்
பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த ஆய்வின் மூலம்
உலகில் முதல் கடலோடிகள் தமிழர்கள், முதன்
மொழி தமிழ், முதல் இனம் தமிழினம் எனத்
தெள்ளத்தெளிவாக பல ஆதாரங்களோடு சான்றுகளைக்
காட்டமுடியும்.” என்ற ஆய்வாளர் சிவ.
பாலசுப்பிரமணி தன் ஆய்வில் ஏற்பட்ட சிரமங்களையும்
ஆதங்கங்களையும் சொன்னார்.
“இந்தியாவில் கடல்சம்பந்தமாக 23 வகையான
அரசுத்துறைகள் இருக்கின்றன. அவைகள்
ஒன்றுக்கொன்று சரியான தகவல் பரிமாற்றத் தொடர்புகள்
இல்லாமல் தனித்து இயங்குகின்றன.
இது கடலாய்வுக்கு ஒரு பின்னடைவு. இந்தியாவில்
தொல் பழங்காலம் மற்றும் மானுடவியல் ஆய்வாளர்கள்
குறைவு.
அதே போல் மீனவர்கள் பல வகையானவர்கள் இருக்கிறார்கள்.
அவர்களையெல்லாம் ஒருங்கிணைக்க வேண்டும். அதனால்தான்
நான் ‘ஒருங்கிணைந்த கடல் பண்பாட்டு ஆய்வு நடுவம்’
என்ற அறக்கட்டளையை உருவாக்கியுள்ளேன்.
என் இந்த தமிழர் தொன்மை ஆய்வுக்கு அரசு உதவியும்
இருந்தால் இன்னும் சிறப்பாகச் செய்யலாம்.
இதுவரை எந்த உதவியும் இன்றி சொந்தச் செலவில்தான்
இந்த ஆய்வுகளைச் செய்து வருகிறேன். நெருங்கிய சில
நண்பர்களும் உதவி செய்தார்கள் எங்களின் இந்த ஆய்வின்
நோக்கம் மானுடவியல் வரலாறு இன்றைய மக்களுக்கும்
வருங்காலத் தலைமுறைகளுக்கும் பயனுடையதாக
இருக்கவேண்டும் என்பதுதான்.” என்றார்.
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய
மூத்தக்குடி தமிழினம் என்ற தமிழ் சொல் ஆதாரமும்,
எப்படி மக்கள் இரும்புத் தகடுகள் செய்யக்
கற்று கொண்டதன் மூலம் உலகம் முழுவதும்
கடற்கரை நாகரிகங்களில் தங்கள் பண்பாட்டுக்
கூறுகளைக் கொண்டுசென்றார்கள் என்பதையும்
தெளிவுபடுத்த முடியும்.
ஒரிசாவில் இருந்ததால் சித்தாமை வகை ஆமைகள்
முட்டை இடும் இடமான கஹிர்மாதா,ருஷிக
ல்யா தேவி மௌத் போன்ற
இடங்களோடு தொடர்பு இருந்ததால் மூழ்கி போன
நிலங்களை கண்டுபிடிக்க ஆமைகள் செல்லும் பாதைகள்
உதவி செய்ததால்
கடல் நீரோட்டத்தைப் பயன்படுத்தி இந்திய
கடல்கரைகளுக்கு வரும் ஆமைகள் தொடர்புடைய இடங்கள்
தமிழ் பெயரைக் கொண்டுள்ளன என்பதை அடையலாம் காண
முடிந்தது . குறிப்பாக ஹவாய் தீவில் உள்ள வைமணலோ,
நியுஸிலாந்து தீவில் உள்ள வான்கரை, ஓட்டன்கரை,
களிமாந்தன் , பர்மா கடல் கரையில் உள்ள தமிழா,
மலேசிய கடல் கரையில் உள்ள சந்தோகன், மதிய தரைக்
கடலில் உள்ள கடலோனியா, கடலோட்டி அட்லாண்டிக்
கடலில் உள்ள தமுளிபாஸ், ஆஸ்திரேலியாவில் உள்ள
கூலன் ஊரு, ஜப்பானில் உள்ள குறில் தீவுகள் போன்ற பல
ஊர்கள் உலக கடற்கரையில் ஏராளமாக உள்ளது.
இன்றும் கடற்கரைகளில் ஆமைதான் கடலில் செல்ல
உதவியது என்ற வழக்காடு உள்ளது.உலக கடற்கரைகளில்
உள்ள மீனவ பழங்குடிகள் தாங்கள் ஆமைகள் வழி வந்தவர்கள்
என்ற சொல்லி கொள்ளும் வழக்கமும்
உள்ளது ஆமைகளை வணங்கும் பழக்கமும் உள்ளது.
இயற்கையின் துணை கொண்டு உலக கடலில்
அனைத்து பகுதிகளுக்கும் சென்றவர்கள் தென் நில மக்கள்
என்பதை நிரூபிக்க முடியும்
இதன் மூலம் மடகாஸ்கர் முதல் தென் அமெரிக்க வரை உள்ள
தீவுகளை தென் நிலத்தில் வாழ்ந்த மக்கள் அடையாளம்
கொண்டு செல்ல முடிந்தது . உலகம் முழுவதும்
முதலில் தோன்றியவர்கள் நடந்தே சென்றார்கள்
என்பதை விட கடலயும் பயன் படுத்தினார்கள்
என்று தெளிவாக சொல்ல முடியும்
லெமுரியா மற்றும் குமரிகண்டம்
கற்பனை என்று கடலுக்குள் கால் வைக்காமலே வாதம்
செய்வதை விட
நம் முன்னோர்கள் சொன்ன தென்புலத்தார் மற்றும் மத்திய
தரைக்கடலில் பேச பட்ட தெரியாத தென் நில பகுதிகள்
என்று இந்திய பெருங்கடலில் மூழ்கிய உள்ள
பகுதிகளை இனம் கான்பதின் மூலம் நம்
தொன்மையை உலகிற்கு எடுத்து சொல்ல முடியும்
சுமேரிய,சிந்துவெளி மற்றும் வடக்கில்
இருந்து தமிழர்கள் வைத்தார்கள் என்பதை விட தெற்கில்
இருந்து நாகரிகம் அடைந்த மக்கள் உலகின் பல்
வேறு பகுதிகளுக்குகனிமங்கள் தயாரிக்கும்
முறை மற்றும்
இரும்பு நாகரிகத்தை கொண்டு சென்றார்கள்
என்று அறிவியல் மூலமாக நிரூபிக்க முடியும்
இன்றைய தமிழக கடலோரங்களில் மூழ்கி உள்ள
நிலபரப்புகளை அடியாளம் கான்பதின் மூலம் அடுத்த
தலைமுறைக்கு கடலால் ஏற்படும்
பாதிபுகளை தவிர்க்கமுடியும்
அதற்காக இந்த ஆய்விற்கு மிகவும் உதவியாக இருந்த
பொதுபணிதுறை கடல்
அலை அரிப்பு தடுப்பு நிறுவனத்தில் அதிகாரியாக
இருக்கும் திரு .கோமகன் அவர்களின் உதவியுடன்
தமிழக கடற்கரை மேலாண்மை தொடர்பாக தகவல்கள்
திரட்டி கொண்டு இருக்கிறோம்
மூழ்கி உள்ள நிலங்களால் ஏற்பட்டுள்ள பல்உயிர்
வளர்ச்சியை அதனால் பயனடிய போகும் அடுத்த
தலைமுறைக்கு தேவையான தகவல்களை இந்த ஆய்வின்
முடிவுகள் தரும்
இந்த ஆய்வு மேலும் பல தகவல்களைத் தமிழ்
மக்களுக்கு தரும் என்ற எண்ணம் மகிழ்ச்சியைத்
தருகிறது.
சந்திப்பு : பொன். மூர்த்தி
kavinmedia com 19.05.2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக