திங்கள், 1 மே, 2017

நீரோட்டம் பார்த்தல் நீர்மேலாண்மை அறிவியல் நிலத்தடி நீர் புதுமுயற்சி தொழில்நுட்பம்

aathi tamil aathi1956@gmail.com

16/3/15
பெறுநர்: எனக்கு
ம.பொன்ராஜ் காலாடி
"கிணற்றுக்கு ஊத்து பாக்குறீங்க.... உங்க பட்டம்
என்ன....அல்லது விவசாயத்தில் உங்க தொழில்
பிரிவு என்ன...?"
"விளங்கலியே....?"
"விவசாயத்தில் மிக முக்கிய பங்கு 'நீர்
மேலாண்மைக்கு' உண்டு. உதாரணமா 'மடையை' சுத்தம்
செய்து பராமரிப்பவர்களை மடை வாரியன்(சுருக்கமாக
மடையன்) என்றும், நீர்க்கட்டி என்றும் சொல்வாங்க.
அது மாதிரி ஊத்து பாக்கும் உங்களுக்கு என்ன
பேர்...?"
"தெரியல.....அப்படி ஏதும் இருக்க
மாதிரி நினைவு இல்ல..."
"இது உங்க குல தொழிலா..?"
"இல்ல....ஈரோட்டு பக்கம் இருந்து ஒரு பெரியவர்
வந்தார்...நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது நான்
அவர் பின்னாலையே சுத்தினேன்....ந
ாலு பேரை தேர்ந்தெடுத்தார்....அதில் நானும்
ஒன்னு.....அவர் கையில் இருக்கும் எந்த கருவியையும்
எனக்கு கடைசிவரை காட்டல....சின்ன
பாலை குச்சியை வச்சி சுத்தி சுத்தி கத்து கொடுத்தார்....அ
ந்த நாலு பேரில் எனக்கு மட்டும் தான்
திறமை இருக்குன்னு சொன்னார்....அவர் என்னை தொடுவதன்
மூலம் உடல் வழியே பாயும் கரண்ட்டு ஷாக் தான்
முக்கியமான விஷயம்..."
"நீங்க கத்துகிட்டதும் என்ன சொன்னார் அவர்...?"
"35 வயசுக்கு மேலே தான் நான்
சரியா ஊத்தை கணிப்பேன் என்று சொன்னார்....பால
ை குச்சி, தென்னம் குச்சி என்று தொடங்கி, அப்புறம்
நானே எல்லா கருவியையும்
எனக்குன்னு கண்டு புடிச்சிக்கிட்டேன்.....ஆனால்
அடிப்படை ஐடியா ஒன்னு தான்.....செம்பு
,தங்கம்,பித்தளை'ன்னு உலோகம் மூலம் சரியா கணிக்க
முடியும்....கொஞ்ச நாள் கழிச்சு கால் நரம்புகள்
மூலமா நீரோட்டத்தை உணர ஆரம்பிச்சேன்...
..அதுக்கு பிறகு, நரம்பு மண்டலத்தை பாதிக்கும்
குடி பழக்கம், போதை வஸ்துகள் எல்லாத்தையும்
விட்டுட்டேன்....அதன் பிறகு தான் நான் கணித்தவை 95%
- 100% என்று துல்லியம் ஆகியது..."
"நீங்க மத்தவங்களுக்கு கத்து தருவீங்களா...?"
"A +ve இருந்தா நல்லது. ஆனால் அது மட்டும்
போதாது. கட்டு கடங்காத ஆர்வம் வேணும். இதை கத்துக்க
நான் சோறு தண்ணி இல்லாம அலைஞ்சு இருக்கேன்.
எத்தனையோ பேர் செய்வதை கவனிச்சு இருக்கேன்.
அதை செஞ்சு பாத்து இருக்கேன். அந்த அடிப்படையில்
பார்த்தா பிரபாகரனுக்கு அந்த ஆர்வம் இருக்கு.
எதுக்கும் ஒரு அஞ்சு வருஷம் போகட்டும்...எல்
லாத்தையும் அவனுக்கு சொல்லி தரேன்....அவன்
கண்டிப்பா புடிச்சுக்குவான்...."
### எனக்கும் என் மாமனார் கந்தசாமி கவுண்டருக்கும்
இடையே இந்த உரையாடல் நடக்கும் போது, பிரபாகரன்
வெளியே களிமண் பொம்மை செஞ்சு விளையாடிக்கிட்ட
ு இருந்தார் என்பது கொசுறு தகவல். 'நான் தான்
உருப்புடாம போயிட்டேன்,
நீயாவது செழிப்பா வாடா'ன்னு மனசில் சின்ன
ஒரு ஏக்கம்.....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக