திங்கள், 15 மே, 2017

இந்தி எதிர்ப்பு ராணுவம் வரவழைத்து துப்பாக்கிச்சூடு ஹிந்தியா

aathi tamil aathi1956@gmail.com

26/1/15
பெறுநர்: எனக்கு
சன.26 இந்தியக் குடியரசு நாள்
இந்திக்கு முடி சூட்டும் நாள்!
தமிழர்களுக்கு துக்க நாள்!
-இப்படியொரு முழக்கம் தமிழகத்தில் மாணவர்களாலும்,
தி.மு.க.வினாராலும் இன்றைய நாளில் தான்
முன்னெடுக்கப்பட்டது.
சன.25முதலே இந்தியை வலியுறுத்தும் இந்திய
அரசமைப்பின் 17வது பகுதியை கொளுத்திய மதுரை,
சென்னை, கோவை மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அப்போது பல்லாயிரக்கணக்கானோர் நடத்திய ஊர்வலத்தில்
காங்கிரசு குண்டர்கள் கலகம் விளைவித்தனர். காவல்
துறையின் குண்டாந்தடிகள்,
கண்ணீர்புகை வீச்சை போர்க்குணத்தோடு எதிர்கொண்டனர்.
சன.26 விடிவதற்குள்ளாகவே கல்லூரிகளிலும்,
கழகத்தவர் வீடுகளிலும் கறுப்புக்கொடி கட்டப்பட்டது.
அன்று காலை ஆறு மணியளவில் சென்னை கோடம்பாக்கம்
திடலில் சிவலிங்கம் தி.மு.க. என்ற இளைஞர்
தீக்குளித்து மாண்டார். இச்செய்தி காட்டுத் தீயாய்
பரவியது.
சனவரி 26ஆம் நாள் சிதம்பரம்
அண்ணாமலை பல்கலைக்கழகமே தன்னெழுச்சியாய்
அணி திரண்டது. அப்போது பேரணியாகச் செல்ல முயன்ற
மாணவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியது.
இன்று குடியரசு நாள் என்பதால்
நாளைக்கு கண்டனப்பேரணி நடத்திக்கொள்ளுங்கள்,
அனுமதி தருகிறோம்
என்று காவல்துறை உறுதியளித்ததால்
கலைந்து சென்றனர்.
மறுநாள் சன.27ஆம்நாள் மீண்டும் மாணவர்கள்
ஒன்று கூடினர். எழுச்சியோடு புறப்பட்ட
மாணவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தி உறுதிமொழியை காற்றில்
பறக்க விட்டது. கோபம் கொண்ட மாணவர் சமூகத்தினர்
காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி ஊர்வலம் நடத்தத்
தொடங்கினர். தடியடிக்கு அஞ்சாத மாணவர் சமூகத்தின்
மீது காவல் துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது.
அதில் 18 வயது நிரம்பிய இராசேந்திரன் என்ற மாணவன்
பலியானான். 1938 முதல் தமிழ் மக்கள் நடத்தி வரும்
நீண்ட நெடிய போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக்குப்
பலியான முதல் தமிழன் இராசேந்திரன்
என்பது குறிப்பிடத்தக்கது.
காமராசரின் எடுபிடியான பக்தவத்சல
அரசு கலவரத்தை அடக்கி குடியரசு நாளை கொண்டாட
முயன்றதில் தோல்வி அடைந்தது.
தமிழகமே கறுப்புமயமாகியது. தமிழகம் முழுவதும்
தமிழர்கள் குடியரசு நாளை புறக்கணித்து துக்க
நாளாக கொண்டாடினர். சன.27 இல்
இரவு 1மணிக்கு சென்னை விருகம்பாக்கம் அரங்கநாதன்
தீக்குளித்து மாண்டார்.
அதன் பிறகு ஏற்பட்ட தமிழர் எழுச்சியை அடக்க
இராணுவம் வரவழைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கில்
வடவனின் இராணுவம் தமிழர் குருதி குடித்தது.
எத்தனை உயிர் மாண்டாலும் கவலையில்லை. தமிழ்
உள்ளிட்ட ஏனைய தேசிய இனங்களின்
மொழிகளை தில்லியில் அரியணை ஏற்ற மாட்டோம்
என்று இன்று வரை திமிர்
பேசுகிறது தில்லி வல்லாதிக்கம். இந்தி பேசும்
மக்களுக்காக நடத்தப்படும் இந்த குடியரசுநாளில்
தமிழர்கள் பங்கெடுக்கக் கூடாது என்பதையே தமிழர்கள்
நடத்திய 1965 குடியரசு புறக்கணிப்பு நாள்
நமக்கு உணர்த்துகிறது! —

ஹிந்தி இந்தியெதிர்ப்பு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக