திங்கள், 15 மே, 2017

அரையர் சிற்றரசர் வேறுபாடு முத்தரையர் பொருளாதாரம் ஆட்சிமுறை

aathi tamil aathi1956@gmail.com

26/2/15
பெறுநர்: எனக்கு
ஆற்றின் இடையே மணல்தீவுகள் இருக்கும். ஆற்றில்
பொங்கும் புதுவெள்ளம் நுங்கு நுரையாக வரும்,அந்த
புதுவெள்ளம் மணல் தீவைக் கரைக்கும்.
அப்படி கரைக்கும்போது அர் அர் என்ற ஓலி கிடைக்கும்.
அதுபோல அரம் என்ற கருவியால் புல்
அரிவாளுக்கு கருக்கு வைத்தால் அர் அர் என்ற
ஒலி கிடைக்கும். அந்த அரம் போன வழியில்மீண்டும்
மீண்டும்
திரும்பதிரும்ப அரிவாளில் வரும். சிற்றரசர்கள்
தமது ஆட்சி யைக் குறிப்பிட்ட வட்டத்தில் மீண்டும்
மீண்டும் ஆட்சியைச் செலுத்துவர். அதனால் அரையர்
எனப்பட்டனர். பழுவேட்டரையன்,முத்தரையன்
பல்வேல்திரையன் ,என்று கூறப்பட்டனர்.
இவர்களுக்கு மணிமுடி கிடையாது,
காசு அச்சடிக்கும் உரிமையில்லை. அரசர்
என்பவரூக்கு மணிமுடி உண்டு. காசடிக்கும்
உரிமை உண்டு. அரையர்கள்
அரசர்களுக்கு அடங்கி நடப்பர்.அந்தவழியில்
ஆளப்பட்டப்பட்ட இடம் இராயல சீமை. இங்கு சோழ
அரசர்கள்.அல்லது சதவாகன அரசர்கள்
இவர்களுக்கு அடக்கம்.
சோழர்களுக்கு அடங்கி இருக்கும்போது தனது பதலி அரையனாக
தொண்டைமான் இளந்தரையர்களை வைத்து ஆண்டுவந்தனர்.
இது கரிகாலன் காலத்தில் பெரும்பாணாற்றுப
்படை இலக்கிய வழி வெளிப்படையாகத் தெரிந்தது.
 உங்கள் தோழன் சவரிமுத்து
பெரும் பிடுகு முத்தரையனுக்கு முன்னும் பின்னும்
உள்ள முத்தரையர் அரசர்கள் பல்லவர்களையோ,பா
ண்டியர்களையோ சார்ந்தே ஆண்டனர். இருஅரசர்களில்
ஒருவருக்கு சிற்றரசர்களாக வாழ்ந்தனர்.
 காசடிக்கும் அதிகாரம் அதிகமான்களுக்கும்
மலையமான்களுக்கும் சுதந்திரமாக
ஆளும்போது இருந்தது. சிற்றரசராக
மாறும்பொழுது இழந்தனர்.
 உங்கள் தோழன் சவரிமுத்து
முத்தரையர்களில் பலர் பலகாலம் பல்லவர்களுக்குப்
பக்கத்துணையாக இருந்தனர். களப்பிரர்
ஆட்சி வீழ்ந்தபிறகு பாண்டிய,பல்லவப்
பேரரசுகளே இருந்தன.முத்தரைய
அரசு யாரையாவது இடையில் சார்ந்தே ஆண்டனர்.

சவரிமுத்து ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக