திங்கள், 15 மே, 2017

அண்ணாதுரை துரோகம் மொழிப்போரை நிறுத்தினார் மறுபடி பற்ற வைத்த தமிழன்

aathi tamil aathi1956@gmail.com

25/2/15
பெறுநர்: எனக்கு
Kathir Nilavan
நஞ்சுண்டு உயிர் நீத்த "மொழிப்போர் ஈகி"
விராலிமலை சண்முகம் நினைவு நாள்
25.2.1965
தமிழினமே என்னுடலைப் பார்த்தாவது நீ விழித்தெழு!
1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போர்
தீவிரமடைந்து வந்த நிலையில் அதை முன்னெடுக்க
அறிஞர் அண்ணா விரும்ப வில்லை. மொழிப்போரட்டத்த
ை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தார்.
அண்ணா அவர்கள் தமிழைக் காப்பாற்ற
உறுதி கொண்டு விடாது போராட வேண்டும்
என்று அப்போது தமிழ் மீது பற்று கொண்ட ஒரு இளைஞன்
நஞ்சுண்டான். அவனுக்கு வயது 22. அவன் பெயர்
விராலிமலை சண்முகம்.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம் நார்த்த
மலை என்னும் சிற்றூரில் 11.8.1943இல்
மு.இராமையா செளந்தரத்தம்மாள் இணையருக்கு மகனாக
சண்முகம் பிறந்தான். இசை வேளாளர் வகுப்பைச் சேர்ந்த
தந்தையார் ஒரு தவுல் கலைஞர் ஆவார். ஒரு அண்ணன்,
ஒரு தம்பி, ஐந்து தங்கைகள் கொண்ட பெரிய
குடும்பத்தில் பிறந்த சண்முகம் 5ஆம்
வகுப்பு வரை படித்தான். குடும்பச்
சூழ்நிலை காரணமாக கல்வி கற்க இயலாமல் போனதால்
தனது அண்ணன்
மாணிக்கத்தோடு புதுகை சென்று பணியாற்றினான்.
1960ஆம் ஆண்டு தாயார் பிறந்த ஊரான
விராலிமலைக்கு வந்து மளிகைக் கடையில்
பணி புரிந்தான்.
அப்போது அண்ணா, பாரதிதாசன், சம்பத்,
கருணாநிதி ஆகியோரின் நாவண்மை பேச்சைக்
கேட்டு தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டான்.
அப்போது இந்தி திணிப்பிற்கு எதிராக உயிர் நீத்த
ஈகியரை நினைத்து தாங்கொணா துயரம் கொண்டான்.
பேருந்து, சரக்குந்துகளில் தமிழ் வாழ்க!
இந்தி ஒழிக! என்று முழக்கமிட்டு எழுதினான்.
இந்தி எதிர்ப்பு ஊர்வத்தில் இந்தி அரக்கியின்
கொடும்பாவிக்கு தீமுட்டி தலையை மொட்டையடித்துக்
கொண்டான். இறுதியாக அறிஞர் அண்ணாவிற்கும்,
தனது சகோதரருக்கும் தனித் தனியாக கடிதங்கள்
எழுதினான். 23.2.1965
அன்று மூட்டைப்பூச்சி மருந்துண்டு மயங்கிக்
கிடந்தான். அதனைக் கண்ட சிலர் அவனை தூக்கிக்
கொண்டு திருச்சி மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சை பெற்று வந்த சண்முகத்திடம், என்னடா?
இப்படிச் செய்து விட்டாய்? என்று உடன் பிறந்த அண்ணன்
மாணிக்கம் கண்ணீரோடு கேட்டார். சண்முகம் அப்போது,
"அண்ணா! எல்லா தலைவர்களும் இப்போராட்டத்தை கைவிட்ட
நிலையில், என் மூலமாவது மீண்டும் தொடரட்டும்!
நமது குடும்பத்தில் தமிழுக்காக ஒருவன் இறந்தான்
என்று இருக்கட்டும், என்னை மன்னித்து விடுங்கள்!"
என்று கண்ணீர் மல்கக் கூறினான். உடல் முழுக்க
நஞ்சு பரவி விட்டபடியால் காப்பாற்ற முயன்றும்
பலனளிக்காமல் பிப்.25ஆம் நாளில் அவன் உயிர்
பிரிந்தது.
மறு நாள் திருச்சி உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில்
சண்முகத்தின் விருப்பப்படி தீக்குளித்த முதல்
'மொழிப்போர் ஈகி' கீழப்பழுவூர்
சின்னச்சாமி கல்லறை அருகிலேயே அவன் உடல்
புதைக்கப்பட்டது. விராலிமலை சண்முகம் அறிஞர்
அண்ணாவிற்கு தமிழ் உணர்ச்சி பொங்க எழுதிய கடிதம்
அன்றைக்கு அனைத்து தமிழர்களின் விழிகளிலும்
கண்ணீரை வரவழைத்தது. அது வருமாறு:
"வாழ்க தமிழ்!
எனது உயிர் உலுத்தர் கூட்டத்தை அழிக்கும். உடல்
உறங்கிய தமிழரை உணர்வு கொண்டு எழச் செய்யும்.
ஐயா! துரோகி பக்தவத்சலத்தின் ஆட்சியில் தமிழ்
தழைக்க வழியின்றிப் போய் விட்டது. நேருவின்
வாக்குறுதி காற்றில் பறந்து விட்டது.
பக்தவத்சலத்தின் பரிசாக வடவனுக்கு ஏறத்தாழ 150
தமிழனைப் பலி கொடுத்துப் பதவியைக் காப்பாற்றிக்
கொண்டார். அத்துடன் விடவில்லை. சின்னச்சாமி,
சிவலிங்கம், அரங்கநாதன், முத்து இது போன்ற பல
தமிழர்களைத் (இந்)தீக்கு இரையாக்கி அதைத்
தனது பதவியின் பரிசாக
வடவனுக்கு அளித்து விட்டார். இன்னும்
எத்தனை துரோகம் இருக்கிறதோ அத்துணையும் தமிழ்த்
தாய்க்குச் செய்துவிட்டார். இவர் ஆட்சியில்
தமிழ்த்தாயின் குங்குமம், பூ, தாலி போன்ற
சுமங்கல்யம் பறி போய் விட்டது. என் செய்வது? அந்தோ,
பரிதாபம்!
திமுகழகத் தொண்டர்களையும், தமிழ்த்தாயின்
புதல்வர்களையும் பாதுகாப்புச் சட்டம் என்ற
போர்வையில் மூடி மறைத்து விட்டார்கள். ஆர்த்தெழுந்த
மாணவர் (தமிழர்)களையும் அடக்கி ஒடுக்கி அடித்துத்
துன்புறுத்தி உரிமைப்போரை நிறுத்தச்
செய்து விட்டார்கள் இராணுவத்தைக் கொண்டு; என்
செய்வது? நமது தலை விதி.
விதி என்ற பெயரால் வீழ்ந்து விட்ட தமிழினமே! என்
போன்றோர் உடலைப் பார்த்தாவது நீ விழித்தெழு!
வருகிறேன். தமிழ்த்தாயின் பாதம் இரத்தத்தால்
கரை படிந்துள்ளது.
அண்ணா! நீங்கள் ஆணையிட்டால் தமிழகம் தங்கள் ஆணையைச்
செய்யக் காத்துக் கொண்டிருக்கிறது.
சும்மா இருந்து விடாதீர்கள்.
வருகிறேன், வணக்கம்.
உயிர் தமிழுக்கு, உடல் மண்ணுக்கு என்று கூறி உயிர்
விட்ட அரங்கநாதன், சிவலிங்கம் இவர்களைக் காண நான்
செல்கிறேன்."
தனது இன்னொரு சகோதரர் இராமலிங்கத்திற்
கு எழுதியுள்ள கடிதமாவது: "தம்பி! நான் உனக்குத்
துரோகம் செய்து விட்டதாக நினைப்பாய் கிடையாது.
தமிழுக்கு நான் செய்ய வேண்டிய கடமையைச்
செய்து விட்டேன். குடும்ப பாரம் உன்னைச்
சேர்ந்து விட்டது. குடும்பத்தையும் நன்றாகப்
பார்த்துக் கொள். தமிழ்த்தாயைக் காண மூட்டைப்
பூச்சி மருந்து என்ற நுழைவுக் கட்டணம் வாங்கிச்
சென்று விடுகிறேன்.வணக்கம்."
விடைபெற்றவரின் கனவு நனவானதா? எங்கே தமிழ்?
அண்ணாவின் புகழைப் போற்றும் ஒவ்வொருவனும் இதற்குப்
பதில் சொல்லியே தீரவேண்டும்! —

search நொண்ணாதுரை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக