திங்கள், 1 மே, 2017

காவிரி உபநதிகள் கூட மறிப்பு 2007 தீர்ப்பு 419 டிஎம்சி தமிழகத்திற்கு கன்னடர் இனவெறி கர்நாடகா

aathi tamil aathi1956@gmail.com

28/3/15
பெறுநர்: எனக்கு
காவிரி நடுவர் மன்றம் 2007 பிப்ரவரி 5 ஆம்
தேதி வழங்கிய தீர்ப்பில் தமிழ் நாட்டிற்கு 419
டிஎம்சி, கர்நாடகவிற்கு 270 டிஎம்சி,
புதுசேரிக்கு 6 டிஎம்சி நீரை பயன் படுத்தி
கொள்ள வேண்டும் என ஆணையிட்டுள்ளது...
மேலும் தமிழக எல்லையில் கண்கெடுக்க
பட்டு கர்நாடகா 192 டிஎம்சி நீரை தமிழ்
நாட்டிற்கு திறந்து விட வேண்டும் எனவும்
ஆணையில் குறிபிட்டுள்ளது...
தமிழ் நாடு அரசு இந்த தீர்ப்பை ஏற்று
கொள்வதாகவும் சில குறைகளை நீக்க உச்ச
நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய
போவதாக அறிவித்துள்ளது...
ஆனால் கர்நாடகா இந்த நடுவர் மன்ற தீர்ப்பை
ஏற்று கொள்ள முடியாது எனவும்
தமிழகதிற்கு நீரை திறந்து விட முடியாது
எனவும் அறிவித்துள்ளது...
இந்த நியாயமான தீர்ப்புக்கு... காராணமான
முன்னாள் பிரதமர் வி.பி.சிங், முன்னாள் நீர்வள
துறை அமைச்சர் மனுபாய் கொட்டாடியா...
இருவரும் நன்றியோடு நினைத்து பார்க்க
வேண்டியவர்கள்.

 காவிரிச்சிக்கல்1924ல் உருவான ஒப்பந்தம்
1974ல் முடியும் நிலையில் ஒப்பந்தமே
காலாவதி ஆகிவிட்டதாக கூறியதோடு,
மைசூர் சமஸ்தானத்துடன் செய்துக்கொண்ட
ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்த முடியாது
என்று கூறி காவிரியின் உபநதிகளான
ஹேமாவதி, ஹாரங்கி, கபினி பகுதிகளில்
அனுமதியின்றி அணைகளைக் கட்டி காவிரி
தண்ணீர் முழுவதையும் அடைத்துக் கொண்டு
காவிரி ஒரு பல மாநில நதி என்பதை மறந்து
இயற்கை வழங்கும் நீரை தனியுடைமையாக்கி
யது கர்நாடாகா.
இதன் மூலம் காவிரி சிக்கல் விசுவரூபம்
எடுக்க ஆரம்பித்தது.இதன் பொருட்டு தமிழக
அரசு 1971 ம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில்
வழக்கு தொடுத்து அப்போதைய பிரதமரின்
தலையீட்டால் மீண்டும் தாக்கல் செய்யும்
உரிமையுடன் வழக்கை திரும்பப் பெற்றுக்
கொண்டது.

search காவிரி பிரச்சனை சுருக்கமாக வேட்டொலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக