திங்கள், 15 மே, 2017

பல்லவர் தமிழரா சிறிய விவாதம் சோழர் தொடர்பு

aathi tamil aathi1956@gmail.com

27/2/15
பெறுநர்: எனக்கு
Asa Sundar
பல்லவர் தமிழரா???
==================
சோழன் கிள்ளிவளவனுக்கும் மணிபல்லவ
இளவரசி பீலிவளைக்கும் பிறந்தவன் தொண்டைமான்,
பின்னர் முற்கால பல்லவர் ஆட்சியை ஏற்படுத்தினான்
என்றால் சரியா????
 இவன் தான் பட்டயத்தில் காணப்படும் முதல் பல்லவன்.
https://ta.wikipedia.org/s/12r7
 தென்காசி சுப்பிரமணியன்
பல்லவக் கொடி தொண்டைக்கொடி ரெண்டும் ஒன்றென
ஆய்வாளரக்ள் சொல்கிறார்கள். (1?) அதனால்
தொண்டைமான்களுக்கும் பல்லவருக்கும் நெருக்கத்
தொடர்பு இருக்கிறது.
என் கருதுகோள்கள்
1. தொண்டைமான் = பல்லவர்
2. தொண்டைமான்களோடு கொண்டு கொடுத்தல் உறவுடையவர்.
3. தொண்டைமான் மந்திரிகளே சாதவாகண் மன்னனின்
மந்திரிகளாகவும் இருந்து சோழர் வழுவிழந்தவுடன்
தொண்டையை கைப்பற்றி இருக்கலாம்.
அப்ப்டி என்றாலும் அவர்கள் வட இந்தியர் அல்ல.
சாதவாகணர் போலவே அவர்களும் முதலில் பிராகிருதப்
பட்டயங்கள் தான் வெளியிடார்கள்.
அதாவ்து கொடுந்தமிழ்.

 ஆவுடையப்பன் காசிவிசுவநாதன்
பல்லவம் என்ற வடமொழிச்
சொல்லுக்கு கொளுந்து என்று பொருள்.
அதாவது இங்கு பாண்டியர், சோழர்கள் எல்லாம் தங்களின்
அடையாள மாலையாக வேப்பந்தாரும், ஆத்தி மாலையும்
சூடியவர்கள். அது போல சோழர் குடியில் உள்ள சில
பங்காளிகளே களப்பிரர் வருகைக்குப் பின் பல்லவ என்ற
பட்டப் பெயருடன் வட மொழி அடிமையாகவும்
இருந்திருக்கலாம். மயிலை சீனி வேங்கிட
சாமி அவர்கள் வடக்கே குஜராத் பகுதியில் பல்லவ
வம்சம்
ஒன்று ஆட்சி செய்துள்ளது என்பதனை சுட்டுகின்றார்.
அப்ப்டியெனில் இந்தப் பெயர்
ஒட்டு எப்படி என்று தெரியவில்லை. ஆனால் பல்லவர்கள்
தங்களின் சேனைத் தலைவர்களாக சோழர்
குடியினரையே வைத்திருந்தனர்.
அவர்களுக்கு சிற்றரசு உரிமையினையும் பல்லவர்கள்
கொடுத்திருந்தனர் என்பதும் வரலாறு. இதன்
அடிப்படையில் பன் மொழிப் புலவர் அப்பாதுரையார்,
பல்லவர்கள் சோழர்குடிப் பங்காளிகளே என்று முன்
வைக்கின்றார். அதே சமயம் அப்பாதுரையார் மேலும்
சான்றுகள் பெறப்பட்டால் பல்லவர்கள்
சோழர்களே என்பது உறுதியாகும் என்றும்
தெரிவிக்கின்றார். வட மொழி மோகம் அதிகம்
இருந்தது ஒரு புறம் இருந்தாலும், மகேந்திர பல்லவர்
வட மொழியில் ஒரு நாடகம் எழுதினார். அது - " மத்த
விலாச ப்ரகஸ்ணம் " என்பது. அதில் புத்த விகாரையில்
நடைபெறும் ஒழுங்கீனங்களையும் விவரிக்கின்றார்.
கிட்டத்தட்ட இன்று சிங்கள பிக்குகள் செய்த
அத்தனை மோசடிகளும், பெண்களுடனான உறவுகளும்
அன்றும் இருந்துள்ளது. இதுவும் புத்த மத
வீழ்ச்சிக்கு காரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக