திங்கள், 1 மே, 2017

தமிழர் வானியல் இலக்கியம் சங்ககால அறிவியல்

aathi tamil aathi1956@gmail.com

13/3/15
பெறுநர்: எனக்கு
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்
==============================
=========
பெருந்தச்சு நிழல் நாட்காட்டியின்படி இவ்வாண்டின்
மூன்றாவது முழு நிலவு கடந்த 05.03.2015
அன்று இனிதே கடந்தது. இவ்வாண்டின் 72-ஆம் நாளில்
‘மூவைந்தான் முறை முற்ற’ என்ற புறநானூற்றுக்
கூற்றுப்படி (புறம் 400: 2) நாள்
எண்ணிக்கை வெற்றியடைந்துள்ளதாகக் கருதலாம்.
தமிழர்களின் அடுத்த வானவியல்
எதிர்பார்ப்பு என்பது அடுத்த முறையான
முழு நிலவுதான் ஆயினும் இடையில் வரும்
மறை நிலவு (அமாவாசை) நாளைப் பற்றிக் கவலைப்
படாமல் இருக்க முடியாது. அந்த நாள் 20.03.2015--
ல் அமையவிருக்கிறது.
அது வருமா வராதா என்று காத்திருந்து பார்க்கத்
தேவையில்லை. அப்படிப் பார்க்க முயற்சித்தாலும்
தேய்பிறையின் கடைசிக் கீற்றானது 19.03.2015
விடியற்காலையில் தெரிவதைப் பார்க்கலாம்.
மறை நிலவு நாள் (அமாவாசை) என்பது ஒரு பகலும் ஓர்
இரவும் முற்று முழுதாக
நிலவு கதிரவனோடு பொருந்திய நிலையில் விலகாமல்
சுற்றும் என்று தெரிகிறது.
நிலவானது கதிரவனோடு பொருந்தும் இந்த
நிகழ்வை நிலவின்
வீரச்சாவு என்று புறநானூறு பாராட்டுகிறது.
உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து
இருசுடர் தம்முள் நோக்கி ஒருசுடர்
புண்கண் மாலை மலை மறைந்தாங்கு ....
................ மறத்தகை மன்னன்
வாள் வடக்கு இருந்தனன் - (புறம் 65: 6-8 / 10-11)
நிலவு விண்ணில் உலவுவதாகவும், கதிரவன் வானில்
நீந்துவதாகவும் குறிப்பிடும் இலக்கியங்கள்,
அமாவாசை நாளில் நிலவானது வானத்தில்
இறங்குவதாகக் குறிப்பிடுகின்றன. விண்ணில்
உலவுவது நிலவு மட்டும் அல்ல. ‘விண்செயல் மரபின்
ஐயர்’ என்பாரும் உளர் என்று திருமுருகாற்றுப
்படை குறிப்பிடுகிறது. முருகனின் 12 கைகளில்
ஒரு கையானது அவர்களுக்காக ஏந்திய நிலையில்
இருப்பதாகப் (அடி எண்:107) பேசுகிறது. வானத்தில்
கதிரவன் இயங்குகிறான், மீன்கள் இயங்குகின்றன.
விசும்பானது வளியோடும் மழையோடும்
பேசப்படுகிறது. ‘விண் மீன்’ என்ற சொல் 41 பழந்தமிழ்
இலக்கியங்களில் எங்கும் இல்லை. ஆங்கிலச்சொல் ‘Star’
என்பதற்கு உருவாக்கப்பட்ட சொல் போலும்.
அறுமீன் இருக்கிறது. சிறுமீன் இருக்கிறது. வடமீன்
இருக்கிறது. பன்மீன் இருக்கிறது. மைம்மீன்
இருக்கிறது. மகமீன் இருக்கிறது. இந்த விண்மீன்
மட்டும் பழந்தமிழில் இல்லை.
மறைநிலவு (அமாவாசை) நாளே செவ்வாய்க்கிழமை
என்று மறந்து போன தமிழர்கள், செவ்வாய்
என்பது கிரேக்க வானவியலார் சுட்டும் Mars அல்ல
என்றும் அது மறைநிலவே என்றும் புரிந்து கொள்ள
வேண்டியது இருக்கிறது. (ஒப்பிட்டுக் காண்க:
மாநாகன் இன மணி - 47)
ஆண்டு நாட்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில்
வெளிப்படையாக யாரும் ஈடுபட்டுள்ளதாக தெரியாத
இந்த நிலையில் தமிழர்கள் மறைநிலவு (அமாவாசை)
நாளில் வேண்டாத வேலை செய்யாமல் இருப்பது நல்லது.
அதாவது அன்று ஆரியவைதீகக் கருமாதிக் கிரியைகள்
எதனையும் செய்யாமல் காப்பது நன்று. விரும்பினால்
விளக்கேற்றலாம். மற்றையோர் அன்றைய
இரவு வானத்து மீன்கூட்டங்களின் நகர்வை நன்கு நேரில்
கண்டு அவரவர் நாட்குறிப்பில்
பதிவு செய்து கொள்ளலாம். தமிழர்களின் முன்னோர்கள்
இரவில் வரமாட்டார்கள். முழுநிலவின் வெளிச்சத்தில்
விண்ணில் முழு நிலவு உலவும் வேளையில்
மட்டுமே வருவர். இருட்டில் வர வேண்டிய தேவையும்
இல்லை !.
மாசி மக நாள்
என்பது முழு நிலவன்று கொண்டாடப்படும்.
பஞ்சாங்கத்தை நம்பிய பலரும் கடந்த 04.03.2015
அன்றே முழு நிலவு என்று நம்பி அந்த
நாளை மாசி மக நாள்
என்று கொண்டாடிவிட்டு முறையாகத் தோன்றிய
உண்மையான முழு நிலவு நாளை (05.03.2015) அம்போ!
என்று விட்டு விட்டனர்.
முழு நிலவு வட்டமாகத் தோன்றினாலும்
அது மாலை 6.10-க்குள் தொடுவானத்திற்கு மேல்
ஒரு பனை உயரத்தில்
தெரிகிறாதா என்பதை உறுதி செய்ய வேண்டும். 5.30-
க்கே தோன்றுவது முழு நிலவு ஆகாது.
அது முழு நிலவின் முதல் நாளாக அமைந்து விடலாம்.
அது மட்டும் அல்லாமல் முழு நிலவானது முழு இரவும்
உலவி விட்டுக் காலை 6.00 மணிக்கு மறைய வேண்டும்.
காலை 6.00 மணி வரை தாக்குப் பிடிக்காமல்
மறைந்து போவது முழுநிலவின் தகுதியல்ல.
கடந்த 04.03.2015-ல்
நிலவானது முழு நிலவுக்கு முதல் நாளின்
அறிகுறிகளைக் கொண்டிருந்தது. 05.03.2015-ல்
தோன்றிய முழு நிலவு தகுதியுடையதாக
இருந்தது என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
கடந்த முழு நிலவானது மாசி முழு நிலவு அல்ல.
அது பங்குனி முழு நிலவு. அதன்படி 20.03.2015-ல்
அமையவிருக்கும் மறைநிலவிலிருந்து (அமாவாசை)
கணக்கிட்டுத் தோன்றும் மூன்றும் பிறைநாள்
23.03.2015-ல் தெரியலாம். அன்றைய
நாளே பங்குனியின் இறுதி நாள் ஆகும். 24.03.2015
என்பது சித்திரை முதல் நாள். அன்று முதல் 12-ம் நாள்
ஆகிய 04.04.2015-ல் தோன்றும்
முழு நிலவே சித்திரை முழு நிலவு ஆகும்.
அதாவது இந்த ஆண்டில் 102-ம் நாளில்
சித்திரை முழு நிலவு தோன்ற வேண்டும்.
முந்தினாலும் பிந்தினாலும் அது கோள்பட்ட
வருடை என்று கருதப்படும். (ஒப்பிட்டுக் காண்க:
மாநாகன் இன மணி 33)
தை
24.12.2014 முதல் 22.01.2015 வரை : 30 நாள்
மாசி
23.01.2015 முதல் 21.02.2015 வரை : 30 நாள்
பங்குனி
22.02.2015 முதல் 23.03.2015 வரை : 30 நாள்
முதல் 12-ம் நாள் முதல் முழு நிலவு வந்தது, 42-ம்
நாள் இரண்டாம் முழு நிலவு வந்தது, 72-ம் நாளில்
மூன்றாவது முழு நிலவு முறையாக வந்தது. 102-ம்
நாளில் அடுத்த முழு நிலவை எதிர்பார்க்கிறோம்.
சித்திரை முழு நிலவானது இரண்டு மீன்களுக்கு இடையில்
தோன்றாமல் விலகித் தோன்ற வேண்டும்.
பெருந்தச்சு நிழல் நாட்காட்டியின்
படி என்று மூன்றாம் பிறை தோன்றினாலும்
அது வெள்ளிக் கிழமைதான்.
என்று வெள்ளிக்கிழமை வந்தாலும் அது வாரத்தின்
இறுதியாக, மாதத்தின் இறுதியாக, ஆண்டின்
இறுதியாக அமையும். அதற்கேற்ப என்று ஞாயிற்றுக்
கிழமை பொருந்தினாலும் அது வாரத்தின் முதல்
நாளாக, மாதத்தின் முதல் நாளாக, ஆண்டின் முதல்
நாளாக அமையும். அதற்கேற்பவே செவ்வாய்க்
கிழமைகளில் அமாவாசையைப்
பொருத்துவது தமிழர்களின்
கண்டு பிடிப்பு (ஒப்பிட்டுக் காண்க: மாநாகன் இனமணி:
38)
தமிழர்கள் பஞ்சாங்கத்தை நம்புவதையும்,
திருத்துவதையும்
கைவிட்டு நேரடி வானத்தை நிமிர்ந்து பார்க்கவாவது தலை நிமிர
வேண்டும். வானவியல் அடிப்படையில் சித்திரை முதல்
நாள் பிறக்கும் போது கதிரவனின் நீத்தம் உரசிச்
செல்லும் பரிப்புப்பாதையை நன்றாக ‘மால்’ வைத்துப்
பார்த்து அன்று இரவு அந்தக் கோட்டை இரவு வானில்
பொருத்திப் பார்க்க வேண்டும். வருடையாடு வடிவிலோ,
மேழியாகிய கலப்பை வடிவிலோ ஏதாவது ஒரு மீன்
கூட்டத்திற்குள் கதிரவன்
நுழைவது உண்மைதானா என்று தெரிந்து கொள்ள
முயற்சிக்கலாம். நாட்குறிப்பில்
பதிவு செய்து கொள்ளலாம்.
கதிரவனின் வடசெலவு, தென்செலவு, செலவின் எல்லை,
இடைப்பட்ட இருக்கைகள் 6+6=12 ‘தை’
தெற்கு எல்லையாகவும் ஆடி வடக்கு எல்லையாகவும்
முறையாகப் பிரிக்கப்பட்டுக் கதிரவனின் பரிப்புப்
பாதை, நிலவின் பாரிப்பு, வெள்ளிவீதி,
செவ்வாய்க்கோட்டம் போன்றவை பழந்தமிழர்களால்
நன்கு கண்டறியப்பட்டுள்ளன. தமிழர்களின் ஆழ்ந்த
மரபறிவின் மீது அக்கறை கொண்டு அதனை மீட்டு எடுக்க
முயற்சிக்கும் ஒவ்வொருவரும் திருத்தக்கீர்,
திருத்தகுநல்லீர், திருநெறிய தமிழ் வல்லார்
என்றெல்லாம் இலக்கியங்களால் பெருமைப்படுத்தப்
பெற்றுள்ளனர். அந்த வகையில் இத்தகைய
முயற்சியை முன்னெடுப்போரையே ‘மரபுவழித்
தமிழ்த்தேசியத் தக்கார் அவையம்’ – தக்கார்
என்று பெயரிட்டு அழைக்க விரும்புகிறது.
இரணியல் கோட்டை.
==================
நீண்ட நெடிய தென்பாண்டியர் மரபில் வெளிப்படையான
கடைசி அரச வாழ்க்கையின் கட்டுமான எச்சங்கள்
மலைப்பையும் மகிழ்ச்சியையும் மனவருத்தத்தையும்
ஒரு சேர ஏற்படுத்தின.
பழந்தமிழர்களின் தச்சு நூல் மரபுப்படி உயர்ந்த
திண்ணை, நிறைந்த படிக்கட்டுகள், அச்சுக்கோட்டில்
அம்பலம், ஆக ஓர் அரச மரபினரின் ஓய்வு இல்லம்
ஒன்று 300 ஆண்டுகளுக்கு முன்புவரை செயல்பாட்டில்
இருந்த தடயம் சரிந்து குழைந்து கிடக்கிறது. 20
டன் எடை கொண்ட ஒற்றைக்கல் கட்டில்
ஒன்று வீற்றிருக்கிறது. மரத்தாலான அதன்
மேற்கட்டு அதன் மீதே சரிந்து கிடக்கிறது.
அதற்கு உரிமையுடையோர் தமிழ் இனத்தின்
பெருமைக்குரிய அந்த அடையாள ஆவணத்தைக் காப்பாற்றக்
கடமைப் பட்டுள்ளனர்.
அந்த கோட்டை வாசலில் இருந்து 20.02.2015
மாலையில் இரண்டாம் நாளில் பிறைக்
கீற்று தெரிந்ததை உறுப்பினர்கள் நேரில்
கண்டு பதிவுச் செய்துள்ளனர். 2-ஆம் நாளில்
பிறை தெரிவதும் முழு நிலவு 29-ம் நாளில்
தோன்றுவதும் உற்றுப் பார்க்கப்படவேண்டிய வானவியல்
நிகழ்வுகள் ஆகும். காத்திருப்போம்
சித்திரை முழு நிலவை எதிர்பார்த்து !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக