வியாழன், 11 மே, 2017

கடற்புலி தொழில்நுட்பத்தை ஈரான் வாங்கிவிட்டது போர் உத்தி கடல் புலிகள் படகு அமைப்பு

aathi tamil aathi1956@gmail.com

28/2/15
பெறுநர்: எனக்கு
Vallavan Vallavan 2 புதிய புகைப்படங்கள்
படங்களை இணைத்துள்ளார்
புலிகளின் சண்டைப் படகும்
அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்...!!!
******************************
****************
ஈரானுக்கு அருகாமையில் உள்ள ஹோமஸ்
நீரிணையை தனது ஆதிக்கத்தினுள் கொண்டு வரும்
முயற்சியில் ஈரான் உள்ளது. அதன்
ஒரு கட்டமாகவே 2010இல் கடற்புலிகளின்
படகு தொழில் நுட்பத்தை இலங்கை அரசிடம்
இருந்து பெரும் தொகைக்கு வாங்கியிருந்தது.
சிலர் இதை ஏற்க மறுக்கலாம்.!
ஒரு விடுதலை அமைப்பின் தொழில்
நுட்பத்தை ஒரு முன்னனி நாடு வாங்கியதா என்று ??
(இது பற்றிய செய்திகள் அந்த நேரத்தில்
வெளியாகி இருந்தன) அனால் அது தான் உண்மை.!
உலக வல்லரசுகள் தமது கடல் படையில் சிறிய
படகுகளில் நம்பிக்கை கொள்ளவில்லை.
அவர்களது கட்டுமானம் எல்லாம்
பெரியளவிலேயே இருந்தது. தங்கள் நாடுகளின்
பொலிஸ் கடல் ரோந்துக்காகவும், வேறு சில
தேவைகளுக்காகவுமே சிறிய ஆயுத படகுகள்
வடிவமைக்க பட்டன. இவைகளின் உச்ச வேகம் 40 கடல்
மைல்களே ( knots). அனால் இதில் இஸ்ரேல்
விதிவிலக்காக சிறிய வகை சண்டைப் (சுப்பர்
டோரா படகு) படகுகளை தயாரித்தது. அந்த
படகுகளையே எதிரி கொள்முதல் செய்து,
கடற்புலிகலுக்கு எதிராக பயன் படுத்தியது.
அந்த படகில் 20mm கனோன் (20mm cannon)
இரண்டு 50 கலிபர் பொருத்திய படியே அதன் வேகம்
45-50 நொட்ஸ் ஆக இருந்தது. அதன் பின்
எதிரி கைக்கு புதிதாக வந்த "பேபி டோரா" என்னும்
சண்டை படகின் உச்ச வேகம் 50-55 கடல்
மைல்களே ( knots). அனால் கடல் புலிகளின் படகுகளில்
37mm கனோன் ஒன்றும் 14.5mm கனோன் ஒன்றும்
இரண்டு 50கலிபர் பூட்டிய படியே அதன் உச்ச வேகம்
(நிறை கூடிய கனரக ஆயுதங்களுடன்) 60-65 கடல்
மைல்கல் (knots) இந்த படகை பற்றிய விபரம்
வெளிப்படாது புலிகள் பாத்து கொண்டனர்.
புலிகளின் கடல் வெற்றியின் பின்னால்
இருந்தது வேகம் கொண்ட படகின் உற்பத்தியும், அதில்
பொருத்தி இருந்த மேன்மையான
சூட்டாதரவுமே புலிகள் வெற்றியை தீர்மானித்தது.
இறுதி யுத்தத்தின் பின் இந்த
படகுகளை எதிரி கைப்பற்றி இருந்தான். அந்த படகின்
தொழில்நுட்பத்தை தான் "கோட்டபாய"
ஈரானுக்கு விற்றிருந்தார். இதில்
இருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்ள முடியும்
உலகத்திலேயே அதி கூடிய சிறிய
சண்டை படகுக்கு தொழில்நுட்பத்து
க்கு புலிகளே சொந்தக்காரர்கள்.! இதை நாம் தமிழர்
என்னும் ஒரு காரணத்துக்காக மறுக்கப்படலாம் ஆனால்
அது தான் உண்மை.!
ஈரானும் இந்த தொழில்
நுட்பத்தை வைத்து ஆயிரக்கணக்கில் சிறிய
சண்டை படகுகளை உற்பத்தி செய்துள்ளது. ஈரான் ஹோமஸ்
நீரிணையை இந்த
சண்டை படகுகளை வைத்து தனது ஆதிக்கத்துனுள்
கொண்டு வர விரும்புகின்றது. மத்திய கிழக்கின்
வளைகுடாவில் உள்ள முக்கிய போக்குவரத்து பாதையாக
ஹோமஸ் இருக்கின்றது.
உலகின் எரிபொருளின் வழங்களில் 40% இந்த
பாதை ஊடாகவே நடை பெறுகின்றது. ஹோமஸ்
நீரிணை ஓமான் வளைகுடாவையும், பாரசீக
வளைகுடாவையும் இணைக்கும் 35 மைல்கள் கொண்ட
நீரிணையாகும். சவுதி அரேபியா, ஈராக், குவைத்,
ஹட்டார். பாரெய்யின் போன்ற நாடுகளின் எண்ணை வளங்கள்
இந்த பாதை ஊடாகவே நடை பெறுகின்றது.
இந்தப் பாதையில்
ஆதிக்கத்தை கொண்டு வருவதற்கு "கிஸ்புல்லா"
போராளிகளின் உதவியுடன் விடுதலைப் புலிகள்
பயன்படுத்திய அதே போர் முறையுடன்
வெடி குண்டு படகுகளையும்
உருவாக்கி வைத்துள்ளது. அதாவது புலிகளின்
முக்கிய போர்முறை எதிரி கப்பலில் குறிப்பிட்ட
ஒன்றை இலக்கு வைத்து பல
சண்டை படகுகளை ஒருங்கிணைத்து பெரும்
சூட்டாதரவு மூலம் எதிரிப் படகை தடுமாற செய்து,
கரும்புலி படகால் மோதி அழிப்பதே ஆகும். இதன்
சண்டை முறையை சர்வதேச பொறி முறையில்
"குழவி குத்தல்" என்று அழைக்கிறார்கள்.
அதையே ஈரானும் செய்ய ஆயத்தமாகி விட்டது.
இதற்கு மாற்றீடாக அமெரிக்காவும் மூன்று ஆண்டுகள்
ஆராய்ச்சியின் பின் "லேசர் படைக்கலன் முறை" (laser
weapon system) ஒன்றை உருவாக்கி உள்ளது.
சுருக்கமாக LAWS என்று பெயரிட்டுள்ளது.
இதை இப்போது ஆளில்லா விமானங்களிலும் கடல்
கலங்களிலும் பொருத்திய
அமெரிக்கா நாசகாரி கப்பல்கள் ஹோமஸ்
நீரிணைக்கு நகர்த்தபட்டுள்ளது.!
தமிழனின் தொழில் நுட்பத்தின் உச்ச
வளர்ச்சி இது அல்ல. எம்மிடம் இருந்த சொற்ப வளங்களின்
ஊடே உருவான தொழில் நுட்பம் தான் இது. தமிழீழம்
ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்டு எல்லா வளங்களும்
தன்னிறைவாக கிடைக்க பெற்றுப்பின், நிச்சயாமாக
புலிகளின் தொழில் நுட்பம் உலகை ஆண்டிருக்கும்.!!
தொழில்நுட்பம் ஈழம் விடுதலைப்புலிகள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக