திங்கள், 5 பிப்ரவரி, 2018

கோசர் பற்றி நூல் ராகவையங்கார் தமிழரில்லை என குழப்பம் இதற்கு பதிலே பாவாணர் நூல்

aathi tamil aathi1956@gmail.com

23/10/17
பெறுநர்: எனக்கு
Vijay Pallava
துளு தலத்தில் சுட்டது தான்
நான்மொழி கோசர்கள்
துளு நாடு
தமிழ்
துளு
கொங்கணி
நான்காவது மொழி என்ன ?
கோசர் குடிகள் இரண்டு ஜாதிகள் உள்ளனர்
துளுவ வேளாளர் செங்குத்தர்
செங்குந்தர் கோசர் இனத்தை சேர்த்தவர்களா ?
பிற்காலச் சோழ பாண்டிய
கொங்கு நாடுகளில்
கோசரின் வழியினரான கைக்கோளப் படைமறவருள்ளும் தலைவருள்ளும் போர்க்களத்திற்
பட்டவரின் குடும்பத்தார்க்
கு, இரத்தக்காணிக்கை யென்றும் உதிரப்பட்டியென்றும் வழங்கும் மாநிலம்
அரசரால் விடப்பட்டமை ஆங்காங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கும்.
இங்ஙனம் கூற்றுடன்று மேல்வரினும் ஆற்றலுடன் பொரும் தறுகணாண்மைப்
படைமறவரான கைக்கோளர்,
16ஆம் நூற்றாண்டிற்குப் பின் (சேர சோழ பாண்டியரான) முத்தமிழரச மரபும்
அற்றுப்போனதினாலும், போர்த்தொழிற் கிடமின்மையாலும், பிறப்பொடு தொடர்புற்ற
ஆரியமுறைக் குலப்பிரிவினாலும் 'தொல்வரவுந் தோலும்' கெட்டு மறம் என்னும்
திறமும் அறவே இழந்துவிட்டனர்.
அவர் இன்று நெசவுத்தொழிலை மேற்கொண்டிருப்பினும், தமிழ்நாட்டின்
தென்பாகத்தில் கைக்கோளர் என்றும் வடபாகத்தில் செங்குந்தர் என்றும்
இன்றும் அவர்க்கு வழங்கிவரும்
118 தமிழியற் கட்டுரைகள்
பெயர்கள், அவரின் முன்னோர் நிலைமையைத் தெற்றெனக் காட்டாநிற்கும்.
முன்னர்க் கைக்கோளர் படை என்பது மரபாக வழங்கியதுபோன்று, இன்று கைக்கோளர்
தறி என்பது மரபாக வழங்குகின்றது. கைக்கோளர் உயர் என்னுந் தலைப்பில்
திவாகரம் கூறும்,
"செங்குந்தப் படையர் சேனைத்தலைவர்
தந்துவாயர் காருகர் கைக்கோளர்"
என்னும் நூற்பா, கைக்கோளரின் பண்டை நிலைமையையும் இற்றை நிலைமையையும்
ஒருங்கே உணர்த்தும். தந்துவாயார். காருகர் என்பன நெசவுபற்றி வந்த
பெயர்கள். குந்தம் ஈட்டி, செங்குந்தம் குருதியாற் சிவந்த ஈட்டி.
பண்டை வேளிருள்ளும் கோசருள்ளும் இருந்ததுபோன்றே, முறையே அவரின் மரபினரான
வெள்ளாளருள்ளும் கைக்கோளருள்ளும் படைத்தலைவர் இருந்தமையின். இன்றும்
அவ்விரு வகுப்பாரின் வழியினரும் குலத்தாரும், முதலியார் என்னும்
பட்டத்துடன் அழைக்கப் பெறுகின்றனர்.
முதலியார் என்பது சேனை முதலியார் அல்லது படை முதலியார் என்பதன்
குறுக்கம். முதலியார் இங்குத் தலைவர். வடகொங்கில் வதியும் அகம்படியர்
தமக்கு முதலியார் பட்டம் இட்டுக்கொண்டது பிற்கால வழக்கு. தஞ்சை
மாவட்டத்தில் சமணர்க்கு வழங்கும் முதலியார் பட்டம் படைத் தொடர்பின்றிப்
பொதுவாகத் தலைவர் அல்லது பெரியோர் என்று பொருள்படுவதே.
கோசரும் கைக்கோளரும் ஒரு வகுப்பாரே என்று முதன்முதற் கூறியவர்
பெரும்புலவர் ரா. இராகவையங்காரே. கோசர் தமிழரா வேற்று நாட்டரா
என்பதுபற்றி மட்டும் கருத்துவேறுபாடு
ள்ளது. கழகக் காலத்துக் கோசரும் வேளிரும் வடநாட்டின் வெவ்வேறு
பகுதியினின்று தென் னாட்டுப் புகுந்தவர் என்பது அவர் கொள்கை.
புராண காலத்தில் முருகனுக்கு படை வீரர் சேவல் சின்னம் உள்ள
வீர தளபதி வீரபாகு என்று சொன்னர்கள்
தித்தன் கோசர் ஆசிரியர் -
ரா. ராகவையங்கார்
கோசர் யார்?
http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?boo
kid=197&pno=104
http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?boo
kid=197&pno=117

அழகன். விம
ஈரானிய வந்தேறியாரே....இந்த கட்டுரைக்கு மறுப்பு எழுதியது தான் பாவாணர்
கட்டுரை அதைப் படிங்க முதலில்.....
http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?boo
kid=197&pno=104

வடுகர் கோயர் கோளர் ராகவய்யங்கார் இலக்கியம் முதலியார் சாதி சேனையர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக