புதன், 14 பிப்ரவரி, 2018

சாகர்மாலா சென்னை - வங்கதேசம் கடல் போக்குவரத்து கடற்கரை கார்ப்பரேட் தாரைவார்ப்பு

aathi tamil aathi1956@gmail.com

31/10/17
பெறுநர்: எனக்கு
Mathi Vanan
வட தமிழ்நாடு, ராசராசன் எந்த சாதி என பெரிய விசயமெல்லாம் இல்லை. ஒரு சின்ன விசயம்..
நேற்று சாகர்மாலா திட்டம் தமிழ்நாட்டில் துவங்கியது. கட்காரி தில்லியிலிருந்த
ு காணொளியில் துவங்கி வைக்க, கருவறுத்தான் பொன்னார் சென்னையிலிருந்து
கைதட்ட சாகர்மாலா திட்டத்தில் எண்ணூரிலிருந்து பங்களாதேசுக்கு சரக்கு
கப்பல் போக்குவரத்து துவங்கியது.
வருடம் 13 ஆயிரம் லாரி சாலைவழியே அனுப்பும் அசோக் லேலண்டு இனி 25 ஆயிரம்
லாரி கடல்வழியே அனுப்பி தொழில் உயருமாம். இதே போல பெருமுதலாளிகளின்
தொழிலும் உயருமாம்.
அசோக் லேலண்டு ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருமானம் இனி 30 ஆயிரம்
கோடியாம். அசோக் லேலண்டு வடநாட்டு சிந்தி முதலாளி+ பிரிட்டிசு கூட்டான
பன்னாட்டு கம்பெனி.
அடுத்து கடலோர மாவட்டங்களில் விவசாயம் இல்லை. பெருமுதலாளிகளின் தொழில்
பேட்டை வருகிறது. 50 ஆயிரம் ஏக்கர் வட தமிழ்நாட்டு மாவட்டங்கள்
கைப்பற்றப்படும்.
பெட்ரோ கெமிக்கல் மண்டலம் வருகிறது. எங்கே பெட்ரோல், நிலக்கரி என
கேட்காதீர்கள். உங்கள் கால்களுக்கு கீழே நிலத்தில்தான்
எடுக்கப்போகிறார்கள்.
2500 ஐட்ரோகார்பன், மீத்தேன் கிணறுகளுக்கு திட்டம் தயார். விவசாயி,
மீனவர்களுக்கு மறுவாழ்வு திட்டமும் தயார்.
தமிழர் எதிர்ப்பை சமாளிக்க இந்திய ஒன்றியம் கைப்பற்றும் கடலோர நிலங்கள்
ராணுவ மயமாக்கப்படும். வட இந்தியர்கள் அதிக அளவில் குடியேற்றப்படுவர்.
இந்தியம் கொடுக்கும் காசை வாங்கி கொண்டு, ஸ்மார்ட் சிட்டிக்கு ஓடுங்கள்.
இனி தமிழ்நாடு அம்பானி, அதானி, பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கே..
சாகர்மாலா திட்டம் வந்தாயிற்று. தமிழ்நாட்டை தியாகம் செய்ய தயாராகுங்கள்.
இந்திய ஒன்றிய பன்னாட்டு பெருமுதலாளிகளின் கூட்டுக்கொள்ளைக்காக..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக