சனி, 24 பிப்ரவரி, 2018

ஆதார் சொத்து உடன் இணைப்பது கட்டாயம் சட்டம்

aathi1956 aathi1956@gmail.com

22/11/17
பெறுநர்: எனக்கு

21-நவ்-2017 18:22 இந்தியா , முக்கிய செய்தி No comments
சொத்துக்களுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட வாய்ப்பு
சொத்துக்களுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு பழைய ஆயிரம், ஐநூறு ஆகிய உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கமளித்தது. அப்போது ரொக்கப் பணத்தை விட, அசையா சொத்துக்கள் வாயிலாகவே கருப்புப்பணம் அதிகம் பதுக்கப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். பிரதமர் நரேந்திரமோடி பினாமி சொத்துக்கள் நிச்சயம் ஒழிக்கப்படும் என தொடர்ந்து கூறிவருகிறார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடையே பேசிய மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் ((Hardeep Puri)) ஹர்தீப் பூரி, ரியல் எஸ்டேட் துறையில் உள்ள கருப்புப் பணத்தை ஒழிக்கும் வகையிலும் பினாமி சொத்துக்களை ஒழிக்கும் வகையிலும் விரைவில் ஆதார் எண்ணை சொத்துக்களுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வங்கிக் கணக்குகள் தொடந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பெரிய அளவிலான பணப்பரிமாற்றம், விமான டிக்கெட்டுகள் உள்ளிட்டவையும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்கவேண்டும் என்ற இலக்கை நோக்கியே ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி விளக்கம் அளித்தார்.

https://www.polimernews.com/சொத்துக்களுடன்-ஆதார்-எண்/
Search ஆதார் ஜட்டி காட்டிக்காகொடுக்கும் வேட்டொலி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக