வியாழன், 22 பிப்ரவரி, 2018

எல்கேஜி UKG இல்லாமல் ஒன்றாம் வகுப்பு சேர்க்கலாம் கல்வி பள்ளி குழந்தை குழந்தைநலம் வளர்ப்பு

aathi tamil aathi1956@gmail.com

8/11/17
பெறுநர்: எனக்கு
Rajkumar Palaniswamy
LKG, UKG, PRE-KG போன்ற வகுப்புகளுக்கு பிள்ளைகளை அனுப்ப வேண்டாம்.
ஒன்றில் இருந்து ஆறு வயது வரை குழந்தைகளுக்கு எந்த பள்ளி வகுப்புகளும்
தேவையில்லை. இக்காலத்தில் மழலைகள் வடிவங்கள், நிறங்கள், எண்கள்,
எழுத்துக்கள் அறியத் தொடங்குவார்கள். பாடல்கள் பாடுவதற்கு பழகுவார்கள்.
இதை கடந்து வேறு எதுவும் அவர்கள் கற்கத் தேவையில்லை. இவற்றை வீட்டில்
இருந்தபடியே எளிமையாக சுதந்திரமாக பிள்ளைகள் கற்க முடியும். தாய் தந்தை
அரவணைப்பில் மழலைகள் பாடம் படிப்பது தான் சிறப்பான கல்விமுறையாகும். இதை
விடுத்து வணிகக் கல்வி நிலையங்களுக்கு சென்று பல ஆயிரம் லட்சம் செலவு
செய்து பிள்ளைகளின் சுதந்திரமான படிக்கும் திறனை மழுங்கடிக்க வேண்டாம்.
பெற்றோர்களே சிந்திப்பீர். மாற்றுக் கல்வியை வீட்டில் இருந்தே
தொடங்குங்கள். மழலைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள் !

கார்த்திகேயன் பாண்டியர் மதுரை
UKG படிக்காமல் ஒன்னாம் வகுப்பு சேர்பாங்களா?
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 7 மணி நேரம் முன்பு

Carthiq Ila
அரசு பள்ளியில் சேர்க்க முடியும் ( சாதி மதமும் கூட குறிக்க தேவையில்லை )
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 5 மணி நேரம் முன்பு

Rajkumar Palaniswamy
கல்வி உரிமை சட்டப்படி எந்த பள்ளியிலும் ஒன்றாம் வகுப்பு சேரலாம்.
6 · விரும்பு · புகாரளி · 5 மணி நேரம் முன்பு

Kavignar Thamarai
நடைமுறையில், அரசுப் பள்ளிகளில் கட்டாயம் சேர்த்துக் கொள்வார்கள்.
தனியார் பள்ளிகளில் பேசிப் பார்க்கலாம்.
அல்லது ஒன்று செய்யலாம். ஒன்றாம் வகுப்பு நேரடியாக அரசுப் பள்ளியில்
சேர்த்து விட்டுப் பிறகு இரண்டாம் வகுப்புக்குத் தனியார் பள்ளி மாற்றிக்
கொள்ளலாம் .
என்ன செய்வது, தமிழ்நாட்டின் நிலை அப்படியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக