சனி, 24 பிப்ரவரி, 2018

ஹிந்திய கடற்படை ஹிந்தி பேசு என்று தமிழக மீனவர் மீது தாக்குதல் துப்பாக்கிச்சூடு செய்தி விகடன்

aathi tamil aathi1956@gmail.com

14/11/17
பெறுநர்: எனக்கு
*இந்தியில் பேசக் கூறி தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக்காவல் படை தாக்குதல்*

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடலோர காவல்
படையினர் மீனவர்களை இந்தியில் பேச சொல்லி தாக்குதல் நடத்தியிருப்பது
மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 நேற்று காலை ராமேஸ்வரத்திலிருந்து ஜெபமாலைபிச்சை என்பவருக்கு சொந்தமான
படகில் அந்தோணிபிச்சை, சூசையா, நிஷாந்த், சாண்ட்ரோ, தேவராஜன், ஜான்சன்
ஆகிய 6  மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் பாரம்பரியமாக மீன்
பிடிக்கும் பகுதியில் மீன்பிடிக்க வலைகளை பாய்ச்சிருந்த போது அங்கு வந்த
இலங்கை கடற்படையினர் கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை அறுத்து
சேதப்படுத்தியதுடன் மீனவர்களின் படகுகளையும் விரட்டியடித்தனர்.

நேற்று பகல் 3 மணி அளவில் இந்திய கடல் பகுதியில் சென்னையில் இருந்து வந்த
கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணி அபாக்கா என்ற கப்பலில் இருந்த
வீரர்கள் ஜெபமாலைபிச்சையின் படகினை நிறுத்துமாறு கூறியுள்ளனர். மீனவர்கள்
கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை எடுப்பதற்காக படகை நிறுதாமல் சென்றதால்
ஆத்திரம் அடைந்த கடலோர காவல் படையினர் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு
நடத்தியுள்ளனர். இதில் மீனவர் அந்தோணிபிச்சையின் இடது முழங்கையில் குண்டு
பாய்ந்து வெளியேறி சென்றது. மற்றொரு மீனவரான ஜான்சனின் கைகளிலும் குண்டு
காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் கப்பலில் இருந்து சிறிய படகில் வந்த கடலோர காவல் படை
வீரர்கள் மீனவர்களின் படகில் ஏறி அதிலிருந்த மீனவர்களை தலை கீழாக நிற்க
வைத்து துணிகள் சுற்றிய இரும்பு கம்பிகளை கொண்டு தாக்குதல்
நடத்தியுள்ளனர். மேலும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மீனவர்கள் தமிழில்
பதில் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் இந்தியில் பேச
சொல்லியும், தாக்குதல் பற்றி செய்தியாளர்களிடம் ஏன் சொன்னீர்கள்? என
கேட்டும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை என்ற பெயரில்
சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதன் பின் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இருட்டி விட்டதால் மீண்டும்
பிரச்சனை ஏதும் வரக் கூடும் என கருதி கடலிலேயே இரவு முழுவதும் இருந்து
விட்டு இன்று காலை கரைக்கு திரும்பினர். இதையடுத்து காயம் அடைந்த
மீனவர்கள் இருவரும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களை பாதுகாக்க வேண்டிய இந்திய கடலோர காவல் படையை
சேர்ந்தவர்களே மீனவர்களை சுட்டதுடன் விசாரணை என்ற பெயரில் தமிழில் பேச
கூடாது என அடித்து துன்புறுத்தியிருப்பது மீனவர்களிடையே கொந்தளிப்பை
ஏற்படுத்தியுள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/107715-indian-coast-guard-soldiers-attacked-fishermen-to-speak-in-hindi.html

இந்தி இந்திய கடலோர மீனவர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக