|
9/11/17
| |||
Jaquvar Raja
பனாமா கால்வாய் தெரியும்... அது செயல்படும் முறை தெரியுமா?
பொறியியல் கண்டுபிடிப்பில் உருவான சிறந்தப் படைப்பு; இருபதாம்
நூற்றாண்டின் மிகப்பெரும் சாதனை. சர்வதேச கடல்வழி வர்த்தகத்தை தன்
கட்டுப்பாட்டுக்குள் அடக்கிய சிறப்பு என பனாமா கால்வாய்க்கு ஏகப்பட்ட
சிறப்புகள் உண்டு.
பனாமா கால்வாய் உருவாக்கப்படுவதற்கு முன்னர் கப்பல்கள் 13,000 மைல்கள்
சுற்றித்தான் தெற்கு அமெரிக்காவை அடைய முடிந்தது. ஆனால் பனாமா கால்வாய்
மூலம் 7,872 மைல்கள் வரை பயண தூரத்தை குறைக்க முடிந்தது. பனாமா கால்வாய்
உலகம் முழுவதும் 160 நாடுகள் மற்றும் 1700 துறைமுகங்களை இணைக்கிறது.
பனாமா கால்வாய் என்பது செயற்கையாக உருவாக்கப்பட்ட 77 கிலோமீட்டர் நீர்
வழி மார்க்கம். இது அட்லாண்டிக் கடலையும், பசிபிக் கடலையும் இணைக்கிறது.
சர்வதேச கடல்வழி வர்த்தகம் பனாமா கால்வாயில்தான் நடைபெறுகிறது. ஓர்
ஆண்டுக்கு மட்டும் இந்த வழியாகப் பயணம் செய்யும் கப்பல்களின் எண்ணிக்கை
14,000.
உண்மையில், அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடலை இணைப்பதற்கு தெற்கு மற்றும்
வடக்கு அமெரிக்கவில் நீர்வழி இல்லை. அங்கிருந்ததெல்லாம் 50 மைல்கள் பரந்த
குறுகிய நிலம். வட அமெரிக்காவையும் தெற்கு அமெரிக்காவையும் இணைக்கும்
இடம் "தெற்கு மத்திய அமெரிக்கா". இந்த நிலத்தின் பெயர் பனாமா பூசந்தி.
(பூசந்தி - இரண்டு பெரும் பகுதிகளை அல்லது பாகங்களை இணைக்கும் குறுகிய
நிலப்பரப்பு) .
மிகப்பெரும் இரண்டு கடல்களை இணைக்க, கடல்வழிப் பயணத்தை எளிமையாக்க பனாமா
பூசந்தியில் அமெரிக்கர்களால் கட்டப்பட்டதுதான் பனாமா கால்வாய்.
அமெரிக்கர்கள் இதை வடிவமைத்திருந்த
ாலும், பல அரசியல் மாற்றங்களுக்கு பின் 1999ம் ஆண்டு கால்வாயின்
கட்டுப்பாட்டை பனாமாவிடமே ஒப்படைத்தது அமெரிக்கா. பனாமாவின் குறுக்கே
செயற்கையாக கட்டப்பட்ட ஏரி, இரண்டு பெரும் கடல்களையும் இணைக்கிறது. இந்த
ஏரியின் பெயர் காடன் ஏரி (Gatun lake). இந்த ஏரி கடல் மட்டத்தில் இருந்து
85 அடி உயரத்தில் உள்ளது .
அப்படியென்றால் பயணிக்கும் கப்பல்கள் எப்படி 85 அடி உயரம் மேலே செல்ல முடியும்?
இதற்காக இவர்கள் கால்வாயில் உருவாக்கிய அமைப்பு நீர்ப் பூட்டு (Water
lock system). இந்த அமைப்பு ஓர் உயர்த்தும் சாதனத்தை (Lift) போல
செயல்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து படகுகளையும், கப்பல்களையும்
உயர்த்தவும், இறக்கவும் பயன்படும். நதி அல்லது கால்வாயின் நீர்நிலை
மாறும் இடத்தில்தான் இது கட்டப்பட்டுள்ளது. லாக் கியர்கள் அறையில் உள்ள
தண்ணீரை காலியாக்கவும், நிரப்பவும் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பூட்டு
அமைப்பில் உள்ள மற்றொரு அமைப்பு நிலையான அறை (Fixed chamber). இங்கே
நீரின் அளவு மாறுபடும். ஒவ்வொரு லாக்கின் இறுதியிலும் பெரிய அறை கொண்ட
வாயில் கதவு இருக்கும். அங்கே வரும் கப்பல் அடைப்பான் திறக்கும் வரை
காத்திருக்கும்; பின் ஒரு லாக்கிலிருந்து மற்றொரு லாக்கிற்கு ஓட்டம்
நடைபெறும். லாக்கின் பரப்பு 110 அடி மற்றும் நீளம் 1050 ஆகும். மூன்று
ஜோடி லாக்குகள் - மூன்று உயர்த்தும் லாக், மூன்று இறக்கும் லாக்.
பனாமாவில் லாக்குகள் இல்லையெனில் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடலில்
நீரின் ஓட்டம் இருக்காது. ஏனெனில் இவற்றிற்கிடையேதான் மலை உள்ளது.
லாக்குகள் வேலை செய்யும் விதம் (Water lock function):
கப்பல் செல்லும்போது ஏரியிலிருந்து வரும் நீரின் மூலம்
உயர்த்தப்படுகிறது. ஒவ்வொரு பூட்டும் கடல் மட்டத்திலிருந்த
ு படகை உயர்த்திக் கொண்டேயிருக்கிறது; அவை 85 அடி உயரம் அடையும்வரை
கப்பலை மேலே கொண்டு செல்கிறது. பிறகு கப்பல் காடன் ஏரியை கடந்து
செல்கின்றன. ஏரியை கடந்தபின் பூட்டில் உள்ள நீரின் அளவு குறைந்து கொண்டே
வரும்; கப்பலானது கடலின் சமநிலையை அடையும் வரை நீரின் மட்டம் குறையும்.
இவ்வாறு கப்பல் நீரின் சமநிலையில் இருந்து, பூட்டின் உதவியுடன்
படிப்படியாக மேலே சென்று 85 அடி உயரத்தை அடைந்து ஏரியை கடந்து பின்,
நீரின் அளவு படிப்படியாக குறைந்து மீண்டும் கடலை அடைகிறது.
நீர்மேலாண்மை புதுமுயற்சி போக்குவரத்து

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக