|
5/11/17
| |||
Mathi Vanan
பசும்பொன் முத்துராமலிங்க தேவர்..
"விருதுநகரில் காமராசர் சாதாரண காங்கிரஸ் தொண்டன். அப்போது நாடார்களில்
90 சதம்பேர் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்ததால், நகரசபை தேர்தலில் காமராசரை
நிற்கவைக்க தேவர் நினைத்தார்.
காமராசருக்கோ ஓட்டர் உரிமை இல்லை. ஏனெனில் அவர் பேரில் சொத்தோ, வரி
கட்டுவதோ இல்லை. தேவர் காமராசர் தாயார் சிவகாமி அம்மையாரை சந்தித்து,
காமராசர் தேர்தலில் நிற்க சிவகாமி பேரில் உள்ள வீட்டை காமராசர் பேருக்கு
மாற்றி எழுதி தர சொன்னார்.
சிவகாமி அம்மையோரோ, ஐயா நானோ விதவை, எனக்கு உள்ள ஒரே சொத்து வீடு.
காமராசர் வீட்டுக்கு உதவாத பிள்ளை. வீட்டை எழுதி தந்துவிட்டால் என்
பெண்ணை என் சாதியில் யாரும் மணம் செய்யவர மாட்டார் என மறுத்து விட்டார்.
உடனே தேவர் ஒரு வெள்ளாட்டை வாங்கி காமராசர் பேரில் நகரசபைக்கு வரி
செலுத்தி, காமராசரை ஓட்டர் ஆக்கினார். காமராசர் தேர்தலில் நின்று
வென்றார்."
"1937 ஆம் ஆண்டு தேர்தல் நடந்தது. ஜஸ்டிஸ் கட்சியை எதிர்த்து காங்கிரஸ்
நேரடியாக களத்தில் இறங்கியது. ஜஸ்டிஸ் கட்சி ஜமீந்தார்கள், பணக்காரர்கள்,
அரசர்கள் கட்சி. தென் மாவட்டங்களில் தேவர் காங்கிரசுக்காக பிரச்சாரம்
செய்தார். ஜஸ்டிஸ் கட்சி ரவுடிகளை வைத்து செய்த அட்டகாசத்துக்கு பதிலடி
கொடுத்தார்.
விருதுநகர் தேர்தலில் நின்ற காமராசருக்கு ஜஸ்டிஸ் கட்சி ரவுடிகளை வைத்து
மிரட்டியது. விருதுநகர் பஜாரில் தெப்பக்குளம் அருகே இரு ரவுடிகள்
காமராசரின் வேட்டியை உருவி அதன் மேல் நின்று கொண்டனர். இரு ரவுடிகள் சாணி
உருண்டையை காமராசர் மேல் வீசி எறிந்தனர். இரவோடு இரவாக காமராசர்
பட்டிவீரன்பட்டிக்கு கொண்டு சென்று கொலை செய்ய திட்டமிட்டனர்.
இதை கேள்விப்பட்ட தேவர் காமராசரின் கேட்டார். காமராசரும் கண் கலங்கி
ஆமாம் ஐயா என்றார்.
அன்றிரவு தேசபந்து மைதானத்தில் பேசிய தேவர், காமராசர் சாதாரண ஏழை தொண்டன்
அல்ல, அவருக்கு பின்னால் கோடிக்கணக்கானோர் இருக்கிறோம். காமராசர் மேல்
துரும்பு விழுந்தாலும், ஜஸ்டிஸ் கட்சியின் வி.வி.ராமசாமி நாடார்
நடமாடமுடியாது என்றார்.
வி.வி.ராமசாமி நாடார் போலிசில் பாதுகாப்பு கேட்க போலிஸ் மறுத்துவிட்டது.
கிராமங்களுக்கு ஓட்டு கேட்க செல்ல பாதுகாப்பு இல்லை என தேர்தலிலிருந்து
வி.வி.ராமசாமி நாடார் விலகி கொள்ள காமராசர் வென்றார்.
தேவர் இல்லையென்றால், காமராசர் தேர்தலில் வெல்வது முடியாது மட்டுமல்ல,
உயிரோடு இருந்திருப்பாரா என்பதும் சந்தேகமே."
( முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் - பக்கம் 68-76 ஏ.
ஆர். பெருமாள்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக