சனி, 24 பிப்ரவரி, 2018

பாலிடெக்னிக் ஆசிரியர் அரசுவேலை பிறமாநிலத்தார் ஊடுறுவல் வேலைவாய்ப்பு பறிபோகிறது

aathi tamil aathi1956@gmail.com

11/11/17
பெறுநர்: எனக்கு
==================================
தமிழ்நாடு அரசுப் பணியிலேயே
வெளி மாநிலத்தவர்கள் நியமிப்பதா?
==================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் கண்டனம்!
==================================

தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் – தொழிற்சாலைகளில்
தொடர்ந்து, தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில்,
இப்போது தமிழ்நாட்டு அரசுப் பணிகளிலும் வெளி மாநிலத்தவர்கள்
புகுத்தப்படுவதாக வரும் செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழ்நாட்டிலுள்ள பல்தொழில்நுட்பக் (Polytechnic) கல்லூரிகளில் உள்ள 1058
விரிவுரையாளர் காலிப் பணியிடங்காக “ஆசிரியர் தேர்வு வாரியம்” (Techers
Recruitment Board) வழியே கடந்த 16.09.2017 அன்று எழுத்துத் தேர்வு
நடைபெற்றது. சற்றொப்ப 1,33,567 பேர் அதில் பங்கேற்றனர். அத்தேர்வின்
முடிவுகள் கடந்த 07.11.2017 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்
வெளியிடப்பட்டன.

வழக்கமாக தேர்வு முடிவுகளின்போது பதிவு எண், பிரிவு மதிப்பெண்
ஆகியவற்றுடன் பெயரையும் இணைத்து வெளியிடப்படும் தேர்வுப் பட்டியல், இந்த
முறை வழக்கத்திற்கு மாறாக பெயர்கள் மறைக்கப்பட்டு, வெறும் பதிவு எண்,
மதிப்பெண், பிரிவு ஆகியவை மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது, ஐயங்களைக்
கிளப்பியது.

இதனையடுத்து, சந்தேகமுற்ற மாணவர்கள் அந்த பதிவு எண்கள் பலவற்றை
தனித்தனியே எடுத்து அவர்களின் பெயர்களைப் பார்த்தபோது, அவற்றில்
பெரும்பாலானவை குப்தா, ரெட்டி, சர்மா, நாயர், சிங், பாண்டே என்ற
பின்னொட்டுடன் கூடிய வெளி மாநிலத்தவர்களின் பெயர்களாகவே இருந்தது கடும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்வு நடைபெற்றபோதே, வெளி மாநிலங்களிலிருந்த
வந்திருந்த பலர் சென்னை (PT32) தேர்வு மையத்தில் தேர்வெழுதியதை
தமிழ்நாட்டு மாணவர்கள் பலர் எச்சரிக்கையுடன் வெளிப்படுத்தினர். இப்போது,
அந்த ஐயம் உண்மையாகியுள்ளது!

இதே ஆசிரியர் தேர்வு மையம் கடந்த 31.05.2017 அன்று, பட்டதாரி ஆசிரியர்
மற்றும் சிறப்புப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை
வெளியிட்டபோது, பதிவு எண்ணுடன் பெயரையும் குறிப்பிட்டிருந்தனர். அதற்கு
முன்பு 27.04.2017 அன்று அரசுப் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிவதற்கான
துணைப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளிலும், பதிவு
எண்ணுடன் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு (23.11.2016)
வெளியான விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளில்கூட, பதிவு
எண், பிரிவு மட்டுமின்றி பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இப்போது வெளியிடப்பட்ட பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்
பணியிடங்களுக்கான தேர்வில் வெறும் பதிவு எண் மற்றும் அவர்களது பிரிவு
மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வானவர்களின் பெயரை ஏன்
வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை? பெயர்களைப் போட்டால், அவர்கள் வெளி
மாநிலத்தவர் எனத் தெரிந்துவிடும் என்பதால், இது திட்டமிட்டு
செய்யப்பட்டதா?

இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering) துறைக்கு 219
விரிவுரையாளர்கள் தேவை என்ற நிலையில், அதில் பொதுப்பட்டியலுக்கான 67
இடங்களில் 46 பேர் வெளி மாநிலத்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அதாவது,
இத்துறையின் கீழ் தமிழ்நாட்டு மண்ணின் மக்களுக்கு பொதுப்பட்டியலில்
கிடைக்க வேண்டிய இடங்களில் 68 விழுக்காட்டு இடங்கள் வெளி மாநிலத்தவர்க்கு
தாரை வார்க்கப்பட்டுள்ளது.

அதேபோல், மின்னணு தொடர்பியல் (ECE) துறைக்குத் தேவைப்படும் 118
இடங்களில், பொதுப்பிரிவுக்கான 36 இடங்களில் 31 பேர் வெளி மாநிலத்தவர்
ஆவர். அதாவது, இத்துறையின் கீழ் தமிழ்நாட்டு மண்ணின் மக்களுக்கு
பொதுப்பட்டியலில் கிடைக்க வேண்டிய இடங்களில், 86 விழுக்காட்டு இடங்கள்
வெளி மாநிலத்தவர்க்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. இன்ஸ்ட்ருமென்டேசன்
மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல் துறைக்கு எடுக்கப்பட்ட 3 பேரில் ஒருவர்
வெளி மாநிலத்தவர்!

இதுபோல் ஒவ்வொரு துறையிலும் வெளி மாநிலத்தவர்கள் நிறைந்துள்ளனர். இந்த
இடங்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட – பிற்படுத்தப்பட்ட
வகுப்பு மக்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒதுக்கீட்டின்படியான இடங்களிலும்
இவர்கள் ஆங்காங்கு உள்ளனர். அதையும் கணக்கிட்டால், இந்த விகிதம் இன்னும்
அதிகமாகும்!

இவ்வாறு தேர்வாகியுள்ள வெளி மாநிலத்தவர்கள் பலரும் பொதுப்பிரிவில்
வந்திருப்பதாகச் சொன்னாலும், தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – மிகவும்
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு உரிய பிரிவுகளின் கீழம் பல வெளி
மாநிலத்தவர்கள் தேர்வாகியுள்ளனர். அதன்காரணமாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த
தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு
மாணவர்களின் இடங்கள் வெளிப்படையாகவே தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது!

இவ்வாறு தேர்வான வெளி மாநிலத்தவர்கள், வரும் 23.11.2017 அன்று
நடைபெறவுள்ள  சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு, தமிழ்நாட்டிலுள்ள
30க்கும் மேற்பட்ட அரசுத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் இவர்கள்
பணியமர்த்தப்படவுள்ளனர். ரூபாய் 15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை
இவர்களுக்கு மாத ஊதியம்!

பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலம் இருப்பினும்,
தமிழ்வழிக் கல்வியில் பயின்றுவிட்டு சேரும் மாணவர்களின் நலனைக் கருத்தில்
கொண்டு, தேர்வின்போது அவர்கள் தமிழிலும் எழுதலாம் என்ற நடைமுறை உள்ளது.
இவ்வாறு எழுதுபவர்களில் கணிசமானவர்கள், கிராமப்புறங்களைச் சேர்ந்த
தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு
மாணவர்கள் ஆவர். இனி, தமிழேத் தெரியாத வெளி மாநிலத்தவர்கள்
விரிவுரையாளர்களாகப் பணியமர்த்தப்படுவதால், இந்த உரிமை அடியோடு
ஒழிக்கப்படும்! தமிழில் நடத்தப்படும் பாடங்கள் ஆங்கிலத்தில்
நடத்தப்படும். ஆங்கிலமும் பேசத் தெரியாத வெளி மாநிலத்தவர் இருப்பின்,
அந்த வகுப்பு மாணவர்களின் எதிர்காலமே கேள்விக் குறிதான்! எனவே, இந்த
நியமனங்கள் காரணமாகத் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வித்தரம்
மிகக்கடுமையாகப் பாதிக்கப்படும்! பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும்
தமிழ் மாணவர்களின் எதிர்காலம் வினாக்குறியாகும்!

தமிழ்நாட்டின் மீது இந்திய அரசால் சூழ்ச்சியுடன் திணிக்கப்பட்ட நீட்
தேர்வால், தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரி இடங்கள் வெளி
மாநிலத்தவருக்குத் தாரை வர்க்கப்பட்ட நிலையில், இப்போது தமிழ்நாடு அரசின்
பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாநில அரசே வெளி மாநிலத்தவரைப் பணியில்
அமர்த்த முயலும் செயல் கடும் கண்டனத்திற்குரியது!

குசராத்தில் 1995லிருந்தும், கர்நாடகாவில 1986லிருந்தும், மேற்கு
வங்கத்தில் 1999லிருந்தும் என - தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவின் அனைத்து
மாநிலங்களிலும் மண்ணின் மக்களுக்கே வேலை என சட்டமியற்றப்பட்டுள்ளது.
இந்தியத்தேசியம் பேசும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியிலுள்ள இந்தியத் தலைநகர்
தில்லியில், தில்லிப் பல்கலைக்கழகத்திலும், அதில் இணைக்கப்பட்டுள்ள
அனைத்துக் கல்லூரிகளிலும் 85 விழுக்காட்டு இடங்கள் அம் மாநிலத்தவருக்கே
வழங்க வேண்டுமென சூலை 2017 மாதம், தில்லி சட்டப்பேரவையில் அனைத்துக்
கட்சியினரும் இணைந்து ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இந்திய அரசுப் பணிகளில் மட்டுமின்றி,
தமிழ்நாடு அரசுப் பணிகளிலும் வெளி மாநிலத்தவர்கள் பணியமர்த்தப்படுவது
மண்ணின் மக்களுக்கு இழைக்கப் படும் மாபெரும் அநீதியும், துரோகமும் ஆகும்!

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த பணி நியமனத்தை நிறுத்தி வைக்க
வேண்டும். இதே நிலையில், வரும் 23.11.2017 அன்று நடைபெறவுள்ள சான்றிதழ்
சரிபார்ப்புப் பணியை  நடத்தக்கூடாது! தமிழ்நாடு அரசுப் பணிகளில்,
தமிழ்நாட்டின் மண்ணின் மக்களுக்கே 100 விழுக்காட்டு இடங்களை உறுதி செய்ய
தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
=====================================
பேச: 7667077075, 9840848594
=====================================
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
=====================================
ஊடகம்: www.kannotam.com
=====================================
இணையம்: tamizhthesiyam.com
=====================================

---------- Forwarded message ----------
From: aathi tamil <aathi1956@gmail.com>
Date: Sat, 11 Nov 2017 13:05:24 +0530
Subject: பாலிடெக்னிக் ஆசிரியர் அரசுவேலை டிறமாநிலத்தார் ஊடுறுவல்
வேலைவாய்ப்பு பறிபோகிறது
To: aathi1956@gmail.com

தமிழக அரசின் பல்தொழில் நுட்பக்கல்லூரிக
ளில்(Polytechnics) உள்ள 1058 விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு
16-09-2017 யில் நடத்தப் பட்டு, முடிவுகள் 07.11.2017 அன்று அறிவிக்கப்
பட்டுள்ளது. இதில் தேர்வாகியிருப்ப
வர்களில் கிட்டத் தட்ட 300 பேர் வெளிமாநிலத்தவர்கள். எப்போதும்
தேர்ந்தெடுக்கப் படுபவர்களின் பெயருடன் வெளியிடப் படும் பட்டியல் இந்த
முறை பெயரின்றி வெளியிடப் பட்டுள்ளதாம்(தக
வல் - தமிழ் தேசியப் பேரியக்கம்)/////////
தொடர்ச்சியாக ரயில்வே, வங்கி, தபால்நிலையம்,......எனத் தொடங்கி இப்போது
மாநில அரசின் வேலைவாய்ப்புகளையும் வெளிமாநிலத்தவர்கள் சூறையாடிச்
செல்கிறார்கள்.
இதனை மாநில அரசு கண்டு கொள்வதில்லை.
இளைய தலைமுறை தமிழ்ப் பிள்ளைகள் சிந்திக்கவும். சாதி மாதம் கடந்து நாம்
தமிழராய் இணைந்தால் மட்டுமே இது போன்ற வஞ்சகங்களை அறுத்தெறிய முடியும்.
சிந்திப்பீர். வென்றாக வேண்டும் தமிழ், ஒன்றாக வேண்டும் தமிழர்.
பதிவு: முருகன் மாயாண்டி

Dr. S. Ramadoss , 3 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
பாலிடெக்னிக் ஆசிரியர் பணிகளை
பிற மாநிலத்தவருக்கு தாரை வார்ப்பதா?
----அறிக்கை-----
தமிழ்நாட்டில் பொறியியல் படித்து வேலையில்லாமல் வாடுவோரின் எண்ணிக்கை
ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், பல வகை தொழில்நுட்பக்
கல்லூரிகளின் ஆசிரியர் பணியிடங்களை பிற மாநிலத்தவருக்கு தாரை
வார்த்திருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசு.
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு துரோகம் செய்யும் வகையிலான இந்த நடவடிக்கை
கண்டிக்கத்தக்கது.
தமிழகத்திலுள்ள அரசு பல வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் (பாலிடெக்னிக்)
காலியாக இருக்கும் 1058 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை
கடந்த 16.06.17 அன்று வெளியிடப்பட்டது. அப்பணிக்கு
விண்ணப்பித்தவர்களுக்கு 13.08.2017 அன்று எழுத்துத் தேர்வுகள்
நடத்தப்பட்டு, அதில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தற்போது சான்றிதழ்
சரிபார்ப்பு நடத்தப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 1058 பணிகளுக்காக
சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளுக்கு அழைக்கப்பட்டுள்ளவர்களில் 107 பேர் பிற
மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதுமட்டுமின்றி, இந்த 107 பேருக்கும்
வேலை கிடைப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அதாவது தமிழக அரசு பல
வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் நிரப்பப்படவுள்ள ஆசிரியர் பணியிடங்களில்
10 விழுக்காட்டுக்கும் கூடுதலான இடங்கள் ஆந்திரம், தெலுங்கானா, கேரளம்,
கர்நாடகம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களைச்
சேர்ந்தவர்களுக்கு தாரை வார்க்கப்படுகின்றன. இதன்மூலம் தமிழ்நாட்டைச்
சேர்ந்த மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 107 தொழில்நுட்ப ஆசிரியர்
பணியிடங்கள் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தைச்
சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் மாநில அரசு வேலைவாய்ப்பு
வழங்கப்படுகிறது. அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அண்டை மாநிலமான
புதுச்சேரியில் கூட அரசு வேலைக்கு செல்ல முடியாது. ஆனால், தமிழகத்தில்
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி
ஆசிரியர்கள் நியமனத்திற்கான கதவுகள் அனைத்து மாநிலங்களைச்
சேர்ந்தவர்களுக்கும் திறந்து விடப்பட்டுள்ளன. இதற்காக ஒரே ஒரு நிபந்தனை
மட்டும் தான் விதிக்கப்பட்டிருக்கிறது. பிற மாநிலத்தைச்
சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்படாது; பொதுப்போட்டி
இடங்களில் மட்டும் தான் அவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பது தான் அந்த
ஒற்றை நிபந்தனை ஆகும். இது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.
உதாரணமாக, மின்னணு மற்றும் தொலைத்தொடர்புத்துறைக்கு மொத்தம் 118
ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் பொதுப்பிரிவுக்கான 36 இடங்களில்
31 இடங்களை பிற மாநிலத்தவர் கைப்பற்றுவர். மின் மற்றும் மின்னணு
பொறியியல் துறையில் 28 இடங்களில் 19 இடங்களையும், எந்திரவியல் துறையில்
67 இடங்களில் 46 இடங்களையும் பிற மாநிலத்தவர் தட்டிப் பறிப்பர். இதனால்
பொதுப் பிரிவில் தமிழக மாணவர்களுக்கு இடம் கிடைக்காது. இது இட
ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதுமட்டுமின்றி, வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழக பலவகை
தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆசிரியர்களாக சேர தமிழை ஒரு பாடமாக
படித்திருக்க வேண்டும் என்பதோ, தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க
வேண்டும் என்பதோ கூட கட்டாயமாக்கப்படவில்லை. மாறாக, பணியில் சேர்ந்த
பின்னர் இரு ஆண்டுகளுக்குள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
நடத்தும் மொழித் தேர்வில் வெற்றி பெற்றால் போதுமானது என்று சலுகை
வழங்கப்பட்டிருக்கிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டில் உள்ள பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் அதிகாரப்பூர்வ
பயிற்று மொழி என்னவாக இருந்தாலும், நடைமுறையில் அனைத்துப் பாடங்களும்
தமிழ் மொழியில் தான் பயிற்றுவிக்கப்படுகின்றன. தமிழ் மொழியில்
எழுதப்படிக்கக் கூட தெரியாதவர்களால் மாணவர்களுக்கு எப்படி தமிழில்
பயிற்றுவிக்க முடியும்? தமிழ் தெரியாத பிற மாநில ஆசிரியர்களுக்கு
ஆங்கிலமும் சரளமாக வரவில்லை என்றால் அவர்கள் எந்த மொழியில் பாடம்
நடத்துவார்கள்? என்பன போன்ற வினாக்களுக்கு தமிழக அரசு தான் விடையளிக்க
வேண்டும். இதனால் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் கல்வித்தரம்
பாதிக்கப்படும்.
நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக தமிழகத்திலுள்ள மருத்துவம்,
மருத்துவ மேற்படிப்பு இடங்கள் பிற மாநிலத்தவருக்கு தாரை வார்க்கப்பட்டன.
அடுத்தக்கட்டமாக தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களும் தாரை
வார்க்கப்படுகின்றன. இதேநிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில்
தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களும், பட்டதாரிகளும் சொந்த மாநிலத்திலேயே
அனாதைகளாகவும், அடிமைகளாகவும் மாறும் ஆபத்து உள்ளது. இதை உணர்ந்து பலவகை
தொழில்நுட்பக் கல்லூரிகளில் பிற மாநிலத்தவரை ஆசிரியர்களாக நியமிக்க தடை
விதிக்க வேண்டும். அனைத்து ஆசிரியர் பணி இடங்களையும் முழுக்க முழுக்க
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.
நேற்று, 12:55 PM

DrManikannan Ramaiyan
பாலிடெக்னிக் தேர்வில் 25 இலட்சம் பணம் குடுத்து திண்டுக்கல்லில் மட்டும்
100 பேர் வரை தேர்ச்சி பெற்றுள்ளனர், தமிழகம் முழுவதும் இதே நிலை தான்,
இதை எதிர்த்து உங்கள் கட்சி சார்பில் வழக்கு எதும் தொடர்வீர்களா// இது
எனது ஜூனியர் ஒருவரின் ஆதங்கம் நம் கட்சி இதன் மீது விசாரணை செய்து ஒரு
அறிக்கை வெளியட வேண்டுமாறு பாதிக்கப்பட்ட இளஞ்சர்களின் சார்பா அவர்கள்
உங்கள் மீது வச்சி இருக்கும் நம்பிக்கையில் கேட்கிறேன் வழக்கு
தொடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்

DrManikannan Ramaiyan
தேர்வில் நடக்கும் முறைகேடு வாய்ப்பு //இத செய்வது ஒரு
நெட்வொர்க்,வேலைக்கு அப்ளை செய்யும் முன் குறிப்பிட்ட பணம் குடுத்து
விட்டு அப்ளை செய்ய வேண்டும்,பின் அவர்களுக்கு அப்ளை செய்த பிரிண்ட்
அவுட்டை பார்வேர்ட் செய்யனும்,ஹால் டிக்கெட் வந்தவுடன் மீண்டும் பகுதி
பணம்,அவர்கள் OMR சீட்டே நமக்கு இரண்டாக பிரிண்ட் செய்து விடுவர் பின்
பரிட்சை முடிந்தவுடன் OMR Xerox copy உடன் அறை கண்காணிப்பாளர்
உபயோகப்படுத்திய இங்க் கலரை குறித்து வைத்துக் கொண்டு உடனே அவர்கள்
சொல்லும் இடத்துக்கு சென்றால் அங்கு விடையை புதிய OMR ல் நிரப்பி அதை
பழைய OMR க்கு பதில் மாற்றி விடுகிறார்கள்.-இப்படியும் நடக்கலாம்??
விசாரணை தேவை

வந்தேறி வேற்றினத்தார் பிறமொழியாளர் அரசாங்கவேலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக