வியாழன், 22 பிப்ரவரி, 2018

கள் குடிக்க சட்டம் அனுமதி இயக்கம் மது திருக்குறள் தொடர்பெண்

aathi tamil aathi1956@gmail.com

3/11/17
பெறுநர்: எனக்கு
Nallasami Chennimalai
தமிழ்நாடு கள் இயக்கம்
செ.நல்லசாமி 98940-99955
கள ஒருகிணைப்பாளர் 0424-2357090
அறச்சலூர் – 638101, ஈரோடு மாவட்டம்.
கள் இறக்கிக் குடிப்பதை அரசு தடை செய்ய முடியாது – கள் இயக்கம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் கள் இறக்கி விற்பதற்கும், விற்கும் கள்ளை வாங்கிக்
குடிப்பதற்கும் 01-01-1987ல் தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் கள்
இறக்கிக் குடிப்பதற்கு தடை விதிக்கப்படவில்லை.
தகவல் உரிமைச் சட்டப்படி கள் தடைக்கான காரணத்தை அரசு தரப்பு
கொடுத்துள்ளது. பனை மரத்தில் இருந்து இறக்கும் கள்ளில் போதை குறைவு.
கூடுதலான போதை வேண்டும் என்பதற்காக குளோரல் ஹைட்ரேட்டைக் கலந்து
விற்றார்கள். வாங்கி குடித்தவர்கள் பாதிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு பனை
மரமும் ஒரு உற்பத்திச் சாலை என்பதால் கள் கலப்படத்தை அரசால்
கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் 30 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளுக்கு தடை
விதிக்கப்பட்டது.
அவரவர் தேவைக்கு கள்ளை இறக்கிக் குடிப்பதை இந்தத் தடை கட்டுப்படுத்தாத
ு. இறக்கிய கள்ளை விற்போர் மற்றும் வாங்கிக் குடிப்போர் மீது மட்டுமே
அரசின் இந்தத் தடைச் சட்டம் பாயும்.
தை மாதத்தில் பனை மரங்களில் இருந்து பாளை வரத்தொடங்கும். ஆகவே வரும் 2018
ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முதல் பனை, தென்னை, ஈச்ச மரங்கள் வைத்திருப்போர்
அவரவர் சொந்தத் தேவைக்கு ஏற்ப கள் இறக்கிப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
“உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது” – குறள் 1201
செ.நல்லசாமி
கள ஒருகிணைப்பாளர்
30 அக்டோபர், 07:34 PM ·

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக