|
31/10/17
| |||
Kalairajan Krishnan
மணவூர் மிகப் பெரிய நகர நாகரிகம். மதுரை நகரைப் புனர்நிர்மாணம் செய்து
மணவூரில் இருந்த மக்களை யெல்லாம் மதுரைக்குக் குடியேற்றியுள்ளான் குலசேகர
பாண்டியன். மணவூர் ஓர் கைவிடப்பட்ட நகரம்.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று, 02:03 PM க்கு
Chembiyan Valavan
ஐயா எனக்கு அப்படித் தோன்ற வில்லை அப்படி குடியேரிய மக்கள் தங்கள் வீடு
பயன் படுத்திய பொருட்களை அப்படியே விட்டுச் செல்ல வாய்ப்பு இல்லை
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · நேற்று, 02:07 PM க்கு
Chembiyan Valavan
ஏதோ இயற்கை அழிவால் நகரம் புதையுண்டு இருக்கலாம் என்றே நினைக்கின்றேன்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று, 02:07 PM க்கு
Kalairajan Krishnan
ஆமாம். கைவிடப்பட்ட நகரம் சுனாமியால் அழிந்துள்ளது. கைவிடப்பட்ட நகரிலும்
சிலர் குடியிருந்திருக்க வேண்டும்.
அதுல கீர்த்தியின் மகன் கீர்த்திவீடணன் ஆட்சிக் காலத்தில் பிரளயம்
ஏற்பட்டு கடல் பொங்கி எழுந்து (ஆழிப்பேரலை, “சுனாமி”) மதுரையை
அழித்துள்ளது.
http://kalairajan26.blogspot. in/2013/02/blog-post_18.html? m=1
திருவாப்புடையார், நாகமலை, சுனாமி
kalairajan26.blogspot.com
எப்போது வந்தது?
எப்படி வந்தது?
என்ன என்ன அழிந்தன?
யார் யார் பிழைத்தார்கள்?
சிவகங்கை மாவட்டம் பிரான்மலையைச் சுனாமி தாங்கியதால், கடல்நீரானது பிரான்மலையைச் சுற்றிச் சென்றுள்ளதைக் காட்டும் படம்.
http://wikimapia.org/#lat=10.2523633&lon=78.4486967&z=15&l=0&m=s
மணவூர் மிகப் பெரிய நகர நாகரிகம். மதுரை நகரைப் புனர்நிர்மாணம் செய்து
மணவூரில் இருந்த மக்களை யெல்லாம் மதுரைக்குக் குடியேற்றியுள்ளான் குலசேகர
பாண்டியன். மணவூர் ஓர் கைவிடப்பட்ட நகரம்.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று, 02:03 PM க்கு
Chembiyan Valavan
ஐயா எனக்கு அப்படித் தோன்ற வில்லை அப்படி குடியேரிய மக்கள் தங்கள் வீடு
பயன் படுத்திய பொருட்களை அப்படியே விட்டுச் செல்ல வாய்ப்பு இல்லை
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · நேற்று, 02:07 PM க்கு
Chembiyan Valavan
ஏதோ இயற்கை அழிவால் நகரம் புதையுண்டு இருக்கலாம் என்றே நினைக்கின்றேன்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று, 02:07 PM க்கு
Kalairajan Krishnan
ஆமாம். கைவிடப்பட்ட நகரம் சுனாமியால் அழிந்துள்ளது. கைவிடப்பட்ட நகரிலும்
சிலர் குடியிருந்திருக்க வேண்டும்.
அதுல கீர்த்தியின் மகன் கீர்த்திவீடணன் ஆட்சிக் காலத்தில் பிரளயம்
ஏற்பட்டு கடல் பொங்கி எழுந்து (ஆழிப்பேரலை, “சுனாமி”) மதுரையை
அழித்துள்ளது.
http://kalairajan26.blogspot.
திருவாப்புடையார், நாகமலை, சுனாமி
kalairajan26.blogspot.com
உ
புலிக்கரை ஐயன் துணை
திருவாப்புடையார் துணை
1) மதுரைக்கு வந்த சுனாமி
2) திருவாப்புடையார் - பெயர்க் காரணம்
3) நாகமலை தோன்றிய வரலாறு
2) திருவாப்புடையார் - பெயர்க் காரணம்
3) நாகமலை தோன்றிய வரலாறு
(மதுரையின் தொன்மை பற்றிய ஓர் அறிவியல் ஆய்வு)
ஆழிப்பேரலை (சுனாமி) மீண்டும் வருமா?
வந்தால் என்ன செய்வது? எப்படிச் செய்வது?
அனைத்து வல்லரசுகளும் பயப்படுகின்றன.
உலகமக்கள் எல்லாம் உயிருக்கு அஞ்சுகின்றனர்.
சப்பான் நாட்டில் சுனாமியால் அணுஉலை எரிந்தது,
தமிழ்நாட்டிலும் இதுபோல் சுனாமி வந்தால்,
கூடங்குளம் அணுமின்நிலையம் பாதிக்கப்படும் என்று அஞ்சுகின்றனர்,
அதனால் அணுமின்நிலையத்தை அரைகிலோமீட்டர் தள்ளிக் கட்டவேண்டும் என்றும்
கூறுகின்றனர்.
ஆனால் மதுரைக்கு சுனாமி வந்துள்ளது!
எப்போது வந்தது?
எப்படி வந்தது?
என்ன என்ன அழிந்தன?
யார் யார் பிழைத்தார்கள்?
அதுலகீர்த்தி என இருபத்திரண்டு மைந்தர் வழிவழியாக, பாண்டிய நாட்டைக்
காத்துவந்தனர். இவர்களுள், பழிதவிர் அதுல
கீர்த்திபாண்டியன் என்னும் மன்னனின் மகன் கீர்த்திபூசணன் செங்கோலோச்சி
ஆட்சி செய்து வந்த காலத்தில் ஒருநாள் ஆழிப்பேரலை பொங்கி மதுரை வரை
வந்தன.
கருங்கடல் ஏழும் ஒருசேரப் பொங்கி மேலே எழுந்து, பெரிய உருவம் பெற்று,
சீறிப் பாய்ந்து, வெகுண்டு ஆரவாரித்து, காவல் கரையைக் கடந்து வந்தன.
விண்ணுலகையும், மண்ணுலகையும்,
இணைக்கின்ற பெரிய பொன்னையுடைய எட்டு
மலைகளும், பெருங்கடி நேமி(சக்கரம்) வரை(பாதுகாப்புச் சுவர்) யும், பெரிய
அச்சத்தைத் தரும் சக்கரவாள கிரியும் தங்களது நிலையிலிருந்து பெயர்ந்தன.
பிரளயத்தின்மீது இன்னுமொரு பிரளயம் கோர்த்து வந்தது.
இவை அனைத்தும், அப்பெருஞ் சகதி வெள்ளத்தின் உள்ளே சென்று விட்டன. கடல்
வெள்ளத்துள் மூழ்கி, அழிவு இலாத பெரிய பூமியும், ஏழு தீபகற்பங்களும்,
ஏழு தீவுகளும், இவைகளிலே
தங்கிநிற்பனவும் செல்வனவுமாகிய பொருள்களும், உயர்ந்த மலைவகைகளும் கடல்
அலைகளுள் சென்றன.
யார் யார் பிழைத்தார்கள்?
ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்றல்ல, நான்கு முறை ஆழிப்பேரலையானது (சுனாமி) மதுரைக்கு வந்து சென்றதாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.
சங்க காலத்திலே, பொங்கி வந்த ஆழிப்பேரலையானது தமிழகத்தையே அழித்து மேற்கே சென்றுள்ளது.
பிரளயத்திற்குமேல் மற்றொரு பிரளயம் உண்டாகியுள்ளது. இதனால் எழுகடலும் பொங்கி எழுந்துள்ளன. அப்போது மதுரையின் வடக்கு எல்லையாக விளங்கும் யானைமலையும், தெற்கு எல்லையாக விளங்கும் திருப்பரங்குன்றமலையும் தங்களது இடங்களிலிருந்து பெயர்ந்து ஆட்டம் கண்டுள்ளன. கடல் அலையானது பொங்கி எழுந்து வந்து யானைமலையும் திருப்பரங்குன்ற மலையும் மூழ்கடித்துள்ளன. மலைகளையெல்லாம் மூழ்கடித்த அந்த அழித்த ஆழிப்பேரலையானது மேற்குத் தொடர்ச்சி மலையையும் தாண்டிச் சென்று அரபிக்கடலில் கலந்துள்ளது.
மலைகள் எல்லாம் ஆடும்படியாக அடுக்கடுக்காகப் பிரளயம் உண்டானபோது பொங்கி எழுந்த கடல் அலையானது ஒரே சேறும்சகதியுமாக இருந்துள்ளது. இந்த அலையில் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால், ஒரேயொரு விருட்சம் (மரம்) மட்டும் இவ்வளவு பெரிய பிரளயத்திலும் ஆடாமல் அசையாமல் பூமிஉருண்டையின் மேல் ஒரு ஆணியை அடித்து வைத்தது போல், அப்படியே நிலையாக ஆழிப்பேரலையை (சுனாமியை) எதிர்த்து நின்றது.
தண்ணீர் பாய்ந்து ஓடும் ஒரு மணற்பரப்பின் நடுவில் ஒரு குச்சியை நிலையாக நிறுத்தி வைத்தால், நீரோட்டத்தினால் அடித்துவரப்படும் மணல்கள் அந்தக் குச்சிக்குப் பின்புறம் சென்று நீண்டதொரு மேட்டினை உருவாக்கும். அலைகள் மிகுந்த கடற்கரையில் நாம் நின்றால், அலையானது நமது கால்களைத் தாண்டிச் செல்லும் போது, நமது கால்களுக்குப் பின்புறமாக ஒரு நீண்ட மணல்மேட்டினை உருவாக்குவதைக் காணலாம். இதனைச் செயற்கையாகவும் நாம் சோதனை செய்தும் பார்க்கலாம்.
இதுபோன்றே, கடல் அலையால் அரிந்து வரப்பட்ட பொருட்கள் இந்த விருட்சத்தில் மேல் மோதி நிலைகொண்டு விருட்சத்திற்குப் பின்புறமாகச் சென்று, மணலும் சேறும் சகதியும் நிறைந்த ஒரு நீண்ட நெடிய மேட்டினை உருவாக்கிவிட்டது. இந்த மேட்டில் கடலிலிருந்து அடித்துவரப்பட்ட கடல்நீர், மணல், சகதி மற்றும் வரும் வழியில் இருந்த அனைத்து வகையான மரம் செடிகொடுகளும், மற்றும் உயிரினங்களும் படிந்து விட்டன.
இவ்வாறு உண்டான மணல்மேட்டுப் படிமம் பலமைல் தூரத்திற்கு நீண்டு சென்றுள்ளது.
இப்போது பல இலட்சக்கணக்கான ஆண்டுகள் பல கழிந்து, யுகங்கள் மாறிவிட்டன. இத்தனை ஆண்டுகளில், பூமியின் மேற்பரப்பில் ஏற்பட்ட அழுத்தத்தினாலும் மற்றும்பல இயற்கைக் காரணங்களாலும் இந்தப் படிமமானது அப்படியே பாறைபோல் மாறிவிட்டது. இப்போது இந்த மேடானது, “நாகமலை“ என்று அழைக்கப்படுகிறது. யானைமலையும் திருப்பரங்குன்றமலையும் கடும்பாறைகளாக இருக்க, நாகமலைமட்டும் கடும் பாறையாக இல்லாமல், மணற்குன்றாக இருப்பதை இன்றும் காணலாம். இதே போன்று பழமுதிர்சோலைமலையையும் (அழகர்கோயில்மலை) ஆழிப்பேரலையானது தாங்கியுள்ளதால் அங்கேயும் இதுபோன்ற படிமங்களைக் காணலாம்.
ஆழிப்பேரலையாலும் அசைக்க முடியாமல் பூமியின் மேல் ஆப்புப் (ஆணி அடித்தது) போன்று அசையாமல் நின்ற அந்த விருட்சமானது, காலப்போக்கில் படிமம் ஆகியுள்ளது. இப்போது “ஆப்புடையார்“ என்று அழைக்கப்படுகிறது. மிகப் பெரிய பிரளயத்திலும் அசையாமல் நின்ற திருவாப்புடையார் உள்ளது பகுதியானது திருவாப்பனூர் என்று பெயர் பெயரலாயிற்று.
திருஆப்புடையார் போன்று, திருப்பரங்குன்றமலையும் ஆழிப்பேரலையை எதிர்த்து நின்றதால், திருப்பரங்குன்றமலைக்கு மேற்குப் பகுதியிலும் நாகமலைக்கு இணையாக ஒரு சிறிய படிம மலைத் தொடர் இருப்பதைக் காணலாம்.
தமிழர்களின் தொன்மையான சான்றுகள் அனைத்தும் நாகமலையில் புதையுண்டு கிடக்கின்றன. நாகமலையை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்தால், தமிழரின் தொன்மையான வரலாறுச் சான்றுகள் எளிதில் கிடைக்கும்.
பிரளயம் வற்றிய போது கடல்நீர் மீண்டும் கடலுக்குள் செல்லும் போது, அடித்துச் செல்லப்பட்ட பொருட்கள் எல்லாம் வைகை ஆறு கடலில் கலக்கும் இடத்தில் மேடாக உள்ளது. இதனால் இந்த இடம் “முகவை“ என்றும் சேதுக்கரை என்றும் பெயர் பெறலானது. இந்த இடங்களை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்தால் தமிழரின் தொன்மைச் சான்றாதாரங்கள் எளிதில் கிடைக்கும்.
ஆடாமல் அசையாமல் நின்று அருள்மிகு திருவாப்புடையாரை வணங்கினால், பிரளயம்போல் தோன்றும் வினைகளையும் எதிர் கொள்ளும் சக்தியைப் பெறலாம்.
திருச்சிற்றம்பலம்.
18 பிப்ரவரி 2013
2011/11/1 கி.காளைராசன் <kalairajan26@gmail.com>
-- வணக்கம்.பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழி பெயர்த்து எழுதிய திருவிளையாடற் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாண்டிய மன்னர் பெயர்களை இங்கே பட்டியலிட்டுள்ளேன்.எத்தனையாவது திருவிளையாடற்புராணத்தில் பெயர்கள் இடம்பெற்றுள்ளன எளிதில் அறிந்து கொள்ள வசதியாக பாடல எண்ணும் கொடுத்துள்ளேன்.ஆழிப்பேரலை(சுனாமி)யும்மதுரையை ஆண்டபாண்டிய மன்னரும்(படலம் 3) குலசேகர பாண்டியன் / மதுரை நகரை மீண்டும் புனர்நிர்மாணம் செய்த பாண்டிய மன்னன்.(படலம் 4) மலையத்துவசன் / பாண்டி மன்னன்காஞ்சனமாலை / மலையத்துவசனின் மனைவி/அருள்மிகு சோமசுந்தரேசுவரரின் மாமியார்/இவள் நீராடும்பொருட்டு சிவபெருமான் அழைத்ததனால் ஏழு கடல்களும் மதுரைக்கு வந்தன.தடாதகை / மலையத்துவனின் மகள்/ அருள்மிகு சோமசுந்தரேசுவரரின் மனைவியான அன்னை மீனாட்சி.சுந்தர பாண்டியன் / அருள்மிகு சோமசுந்தரேசுவரர்(படலம் 11) உக்கிர குமாரன் / சுந்தர பாண்டியனின் (சோமசுந்தரேசுவரரின்) மகன்/மதுரைக்கு வந்த ஆழிப்பேரலை(“சுனாமி”)யை வேல் எறிந்து தடுத்து நிறுத்திய மன்னன்.காந்திமதி / உக்கிர குமாரன் என்ற சுந்தர பாண்டியனின் மனைவி(படலம் 17)வீரபாண்டியன் / உக்கிர பாண்டியனின் மகன்அபிடேக பாண்டியன் / வீரபாண்டியனின் மகன்/ பேரூழி ஏற்பட்டு கடல் பொங்கி(“சுனாமி”) மதுரையை அழிக்க வந்ததது. அதனை வற்றச் செய்த மன்னன்.விக்கிரம பாண்டியன் / அபிடேக பாண்டியனின் மகன்(படல்ம் 24)இராச சேகரன் /விக்கிரம பாண்டியனின் மகன்(படலம் 25) குலோத்துங்கன் / இராசசேகர பாண்டியனின் மகன்(படலம் 28)அனந்தகுணன்/ குலோத்துங்கனின் மகன்/பசுமலை, இடபமலைகள் இவன் காலத்தில் உண்டாகின. இராமபிரான் இம்மலைகளில் தங்கி அகத்தியரிடம் உபதேசம் பெற்றார்.(படலம் 30) குலபூடணன் / அனந்தகுணனின் மகன்(படலம் 34) இராசேந்திரன் / குலபூடணனின் மகன்(படலம் 37) இராசேசன் / இராசேந்திரனின் மகன்இராசகம்பீரன் / இராசேசனின் மகன்பாண்டி வமிச தீபன் / இராசகம்பீரனின் மகன்புரந்தரசித்து / பாண்டி வமிச தீபனின் மகன்பாண்டிவமிச பதாகன் / புரந்தரசித்துவின் மகன்சுந்தரேசபாத சேகரன் / பாண்டி வமிச பாதகனின் மகன்(படலம் 40) வரகுணன் / சுந்தரேசபாத சேகரனின் மகன்(படலம் 44) இராசராச பாண்டியன் / வரகுணனின் மகன்/பன்றிமலை இனது ஆட்சிக்காலத்தில் உருவானது(படலம் 49) சுகுணன் / இராச இராச பாண்டியனின் மகன்/சுகுணனுக்குப் பிறகு சித்திரரதன் முதல் அதுலகீர்த்திவரை 22 பாண்டிய மன்னர்கள் வழி வழி வந்து ஆட்சி செய்தனர்.1) சித்திரரதன்2) சித்திரபூடணன்3) சித்திரத்துவசன்4) சித்திரவருமன்5) சித்திரசேனன்6) சித்திரவிக்கிரமன்7) இராசமார்த்தாண்டன்8) இராச சூடாமணி9) இராச சார்த்தூலன்10) துவிசராச குலோத்தமன்11) ஆயோதனப் பிரவீணன்12) இராச குஞ்சரன்13) பரவிராச பயங்கரன்14) உக்கிரசேனன்15) சத்ருஞ்சயன் வீமரதன்16) வீம பராக்கிரமன்17) பிரதாப மார்த்தாண்டன்18) விக்கிரம கஞ்சனன்19) சமர கோலாகலன்(20, 21.....??)22) அதுல கீர்த்திகீர்த்திவீடணன்/அதுல கீர்த்தியின் மகன்/இவனது ஆட்சிக் காலத்தில் பிரளயம் ஏற்பட்டு ஏழுகடல்களும் பொங்கி எழுந்து (ஆழிப்பேரலை, “சுனாமி”) உலகை அழித்தன.பிரளயத்திற்கு (ஆழிப்பேரலை,,“சுனாமி“)க்குப் பின்னர்.சந்திர குலத்தில் பாண்டியர் தோன்றினர்.சூரியன் மற்றம் அக்னி குலத்தில் மற்ற இரு தமிழ் மன்னர் (சோழ சேரர்) தோன்றினர்.வங்கியசேகர பாண்டியன் / சந்திரகுலத்தில் தோன்றி பாண்டிய மன்னன்/இன்றைய மதுரை நகரை பண்டைப் பெருமை விளங்கம் வகையில் உருவாக்கியவன்(படலம் 51) வங்கிய சூடாமணி (சண்பக பாண்டியன்) /வங்கிய சேகரனின் மகன்.(படலம் 58) சண்பக பாண்டியனுக்குப் பின் குலேச பாண்டியன் வரை 15 பாண்டிய மன்னர்கள் வழி வழி வந்து ஆட்சி செய்தனர்.1) பிரதாப சூரியன்2) வங்கிசத் துவசன்3) இரிபுமருத்தனன்4) சேரவங்கி சாந்தகன்5) பாண்டி வங்கி சேசன்6) வங்கிச்சிரோன்மணி7) பாண்டீச்சுரன்8) குலத்துவசன்9) வங்கிச வீபூடணன்10)சோம சூடாமணி11) குல சூடாமணி12) இராச சூடாமணி13) பூப சூடாமணி14)....?15) குலேசன்(படலம் 58) அரிமர்த்தன பாண்டியன் / மாணிக்கவாசகரை அமைச்சராகக் கொண்ட மன்னன்(படலம் 62) அரிமர்த்த்ன பாண்டியனுக்குப் பின் பல மன்னர்கள் பாண்டிய நாட்டை ஆண்டனர்.கூன்பாண்டியன் (சுந்தர பாண்டியன்) /சோழன் மகள் மங்கையர்க்கரசியாரை மணந்தவன்/திருஞானசம்பந்தரால் சைவத்திற்குத் திரும்பியவர்.மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம்பல்குக வளங்கள் எங்கம் பரவுக அறங்கள் இன்பம்நல்குக உயிர்கட் கெல்லாம் நான்மறைச் சைவம் ஒங்கிபுல்குக உலக மெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்கதிருச்சிற்றம்பலம்--
அன்பன்
கி.காளைராசன்திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,
http://kalairajan26.blogspot. in/
கடல் பூதம் தனது கூடையைத் தட்டி இந்த மலையை உண்டாக்கியது என்று கூறுகின்றனர்.
<iframe src="http://wikimapia. org/#lat=9.9191404&lon=78. 0427551&z=13&l=0&ifr=1&m=s" width="473" height="329" frameborder="0">< /iframe>
சிவகங்கை மாவட்டம் பிரான்மலையைச் சுனாமி தாங்கியதால், கடல்நீரானது பிரான்மலையைச் சுற்றிச் சென்றுள்ளதைக் காட்டும் படம்.
http://wikimapia.org/#lat=10.2523633&lon=78.4486967&z=15&l=0&m=s
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக