வியாழன், 22 பிப்ரவரி, 2018

கிறித்துவர் பள்ளி மதமாற்றம் பிள்ளை வேளாளர் எச்.ஏ.கிருட்ணபிள்ளை மதவெறி மதம் கல்வி

aathi tamil aathi1956@gmail.com

7/11/17
பெறுநர்: எனக்கு
Ravi Subramanian
அவர் : அதாவதுங்க நீங்க பார்பனியத்த எதிர்க்கிற அளவுல கிறுத்தவத்த
எதிர்க்க மாட்டுக்கிங்க..
நான் : ஆமாங்க, நான் படிச்சது தூய யோவான் கல்லூரி.. எனக்கு படிப்பு
சொல்லி கொடுத்தது,
படிப்புக்கு கிராஸ் பெல்ட் வேண்டாம் னு, என்னயும் படிக்க வச்ச கல்லூரி..
அதனால போற போக்குலாம் ஒட்டு மொத்த கிறுத்தவமும் தப்பு னு சொல்ல
முடியாதுங்க..
அவர் : அப்படி இல்லங்க!!
நான் : ஆமா , நீங்க எங்கங்க படிச்சீங்க?
அவர் : நான் தூய சவேரியார் கல்லூரி..
நான் :பின்ன என்னங்க?
அவர் : இப்படி கிறுத்தவத்த ஆதரிக்கிற உங்கள வெள்ளாளரா ஏத்துக்க முடியாது,
உங்கள கூடிய சீக்கிரம் சாதிய விட்டு ஒதுக்கி வைக்க போறோம்..
நான் : நல்லது, நீங்க வெறும் வெள்ளாளர் தான் , நான் சைவ சமயத்தை
பின்பற்றும் சைவ வேளாளர்.. கிறுத்தவ மதத்தை ஆதரிப்பதால் , நான்
கிறுத்தவனாகி விட மாட்டேன், நான் சைவ சமயத்தை இறுக பின்பற்றுபவன் .. சக
மனிதர்களை மதங்களை கடந்து நேசிக்க சொல்லும் சைவ சமயத்தவன்.. என்னை
நீக்கும் முன் கிறுத்தவ கம்பரான H. A கிருஷ்ண பிள்ளையை என்னும் ஹென்றி
ஆல்பர்ட் பிள்ளையை நீக்கி விட்டு வாருங்கள்..
அவர் : நீங்க தமிழ் தேசியம் பேசுகிறீர்கள், அவர்கள் அனைவரும் கிறித்தவர்கள்..
நான் : அப்படியா? , அப்ப ஐயா பழ. நெடுமாறன் யாருங்க? , என் இறை மொழி
தமிழ்.. பக்தியின் மொழி தமிழ், நான் ஓதும் பன்னிரு திருமுறையும் தமிழ்..
தமிழை நீச பாஷை ( தீட்டு மொழி) என்னும் சமஸ்கிருதம் எனக்கு தீட்டுங்க,
அதனால நான் இயல்பாகவே தமிழ் தேசியவாதி தான்..
அவர் : அதுலாம் தெரியாது, நீங்க கிறுத்தவ கை கூலி..
நான் : நன்றி..

Aathimoola Perumal Prakash
என்ன மக்கா நம்ம சாராள் தக்கர் நடுநிலைப் பள்ளிய ( STC) மறந்துட்ட?
நமக்கு விபரம் தெரியாத வயசுலயே கதை சொல்றோம்னு ஏசப்பா கதயா சொல்லி மதம்
மாற்ற அடிபோடுவானுகளே
காலைல ஏசப்பா பாட்ட பாடி ஜெபம் கூட செய்வாங்களே
டீச்சர் எல்லாரும் பெரும்பாலும் கிறிஸ்டீனாவே இருப்பாங்களே
எல்லாத்தயும் சொல்லு மக்கா
போறபோக்குல கிறித்துவத்த கொற சொல்லவேண்டாம்.
ஆனா அதுவும் ஒரு அடையாள மாற்றத்த கொண்டுவருது.
செல்போன் டவரே இல்லா ஊர்ல கூட தேவாலயமும் மதவெறியும் இருக்குற கிறிஸ்துவ
கிராமங்கள் இருக்கு
போலிச்சாமியார் நில அபகரிப்பு சாதிவெறி பிரிவுவெறினு இந்துத்துவ தன்மைகள்
அத்தனையும் உண்டு.
பாத்த்செய் மக்கா!

Aathimoola Perumal Prakash
கல்வி பார்ப்பனருக்கு மட்டும்தான் கிடைத்தது என்பது தமிழகத்தைப்
பொறுத்தவரை அப்பட்டமான பொய்
http://vaettoli.blogspot.in/2016/08/blog-post_5.html?m=1
கல்வியும் தாழ்த்தப்பட்டதா?

Ravi Subramanian
ஆமா மக்கா, ஆனா நீயோ, நானோ மதம் மாறலயே, இன்னைக்கும் என்னைய அவங்க
பிள்ளையா பாக்காங்க லே, STC டீச்சர்ஸ், ஜெயந்திரா, சாரதா கல்வி
நிறுவனங்கள் ல, இந்து பாட்டு பாடி வேலை ய ஆரம்பிக்கிற மாதிரி சாரா
டக்கருக்கு உரிமை இல்லை யா? மத வெறிய எவன் பரப்பு னாலும் தப்பு தான், அது
ல, இந்து, கிறுத்தவம், இசுலாம் னு எனக்கு வேறுபாடு இல்ல மக்கா, உனக்கு
தெரியாதா? ஆனா இந்த பதிவு சங்கிகளுக்கு Aathimoola Perumal Prakash ,
பாத்த் செஞ்சுட்டன் டா..

Ravi Subramanian
சாதி வெறி இல்லாத இடம் எங்க இருக்கு? பிள்ளைமார் பாதிரியாரா வர கூடாது
னு, நாடாரும், நாடார் பாதிரி வேண்டாம் னு, பிள்ளைமாரும் கூடி தீர்மானம்
போட்ட வள்ளியூரு செய்தி நமக்கு தெரியாதா? ஆனா விடயம் என்ன னா? மதம்
மாறியவன தீண்டதகாதவனா பாக்குற மனித குல விரோதத்த நாம கேள்வி கேட்க தான்
மக்கா செய்யனும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக