|
10/11/17
| |||
கதிர் நிலவன்
கி.ஆ.பெ.விசுவநாதம் பிறந்த நாள்
10.11.1889
தள்ளாடும் வயதிலும் சிறை சென்ற தமிழ்ப்போராளி
முத்தமிழ்க் காவலர் என்று போற்றப்படும் கி.ஆ.பெ.விசுவநாதத்துக்கு 95 வயது
ஆகிறது. கடந்த 75 ஆண்டுகாலமாகத் தமிழ் காக்கப் போராடி வருபவர்
முத்தமிழ்க் காவலர். தமிழ்நாட்டில் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை
முன்னின்று நடத்தியவர். இந்த 95 வயதிலும் தமிழ் காக்கும் ஆர்வம்
அவருக்குக் குறைய வில்லை. சென்ற வாரம் சென்னை கோட்டை முன்பு மறியல்
போராட்டம் நடத்தி கைது ஆனார்.
தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்தக் கோரி இந்தப்
போராட்டம் நடந்தது. தலைநகர் தமிழ்ச்சங்கம் நடத்திய போராட்டத்துக்குக்
கி.ஆ.பெ. தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் சாலை இளந்திரையன், சாலினி
இளந்திரையன், கவிஞர்கள் சுரதா, வா.மு.சேதுராமன், கீதா பச்சையப்பன் பலர்
கைது செய்யப்பட்டனர்.
இப் போராட்டம் குறித்து முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. ஒரு அறிக்கை
வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவத
ு:
"1956ஆம் ஆண்டிலேயே தமிழ் ஆட்சிமொழி என்று சட்டம்
நிறைவேற்றப்பட்டிருந்தும் இன்றுவரை அது முழுமையாக செயல்படுத்தப்படாமல்
உள்ளது. தலைமைச் செயலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி
அலுவலகம், சட்டத்துறை, கல்வித்துறை முதலிய துறைகளில் பத்து விழுக்காடு
அளவுக்குக் கூடத் தமிழ் நடைமுறைப்படுத்த படாமல் இருக்கிறது.
தமிழக அரசு ஆட்சிமொழிச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவரும் பொழுது
சிறைத்துறை, காவல்துறை, சமூக நலத்துறை முதலியவற்றின் வட்ட, மாவட்ட அளவில்
கீழ்நிலையிலிருந்து ஓரளவே செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையை தலைகீழாக
மாற்றித் தமிழக அரசு தலைமைச் செயலகத்தின் எல்லாத் துறைகளிலும் மேல்
நிலையிலிருந்து எல்லா நடவடிக்கைகளையும் தமிழிலேயே செயல்படுத்தியிருந்தால்
தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் இந்நேரம் முழுமையாக நடைமுறைக்கு வந்திருக்கும்.
தமிழ்நாட்டில் தமிழ்மக்களுக்குரிய மொழியான தமிழில்தான் அரசாணை உள்ளிட்ட
அனைத்து நடைமுறைகளும் செயல்பட வேண்டும். ஆனால் இங்கோ ஆங்கிலத்திலேயே
அனைத்து அரசாணைகளும் வெளியிடப்படுகின்றன. தமிழின் உரிமையைப் பறிக்கும்
இந்நிலை உயிரையே பறிப்பதற்கு ஒப்பாகும். தமிழ்நாட்டில் தமிழையே
ஆட்சிமொழியாகவும், பயிற்று மொழியாகவும் அனைத்து நிலையிலும்
நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கருத்தரங்கம்,
மாநாடு, ஊர்வலம், பொதுக்கூட்டம், உண்ணாநோன்பு, ஆர்ப்பாட்டம் என்று நடத்தி
அரசுக்கு எடுத்துச் சொல்லியும் இன்றுவரை தமிழக அரசு எதையும்
கண்டுகொள்ளாமல் உள்ளது.
தமிழ்மக்களின் உணர்வை பல்வேறு நிலைகளில் வெளிப்படுத்திய பின்பும்
ஆட்சியாளர்கள் கேளாக் காதினராய் இருந்து கொண்டு எங்கும் தமிழ் எதிலும்
தமிழ் என்று பொய் முழக்கம் செய்வது வேதனைக்குரியதாகும்.
உலகில் எந்த நாட்டிலும், எந்த மாநிலத்திலும் அவரவர் தாய்மொழியில் தான்
பயிற்றுவிக்கப்படுகிறது, ஆனால் பாழ்பட்ட தமிழ்நாட்டில் மட்டும் பிறமொழி
மூலம் சொல்லிக் கொடுக்கிறார்கள். 1956ஆம் ஆண்டு ஆட்சிமொழிச்சட்டம்
கொண்டுவரப்பட்டு 37 ஆண்டுகள் ஆகியும் கூட எந்த ஆட்சியும் இதை
அமல்படுத்தாதது வேதனைக்குரியதாக உள்ளது.
2 வயது, 3 வயது குழந்தைகளுக்கு தாய்மொழி மறக்கடிக்கப்படுகிறது. அந்த
அளவுக்கு எல்.கே.ஜி., யூ.கே.ஜி., ஆங்கிலப் பள்ளிக்கூடங்கள் வந்து
இருக்கின்றன. அதையும் தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டும் கூட
அரசு செவி சாய்ப்பதில்லை. தமிழ்ப்பற்று உள்ளவர்கள் ஆட்சியில் இல்லாதது
தான் இந்த நிலைக்கு காரணம்,
அரசாங்கம் தமிழ்மொழியை இனி வளர்க்க முடியாவிட்டாலும் அழிந்து
கொண்டிருக்கிற தமிழை காப்பாற்றவாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின்
கவனத்தை ஈர்ப்பதற்காகத்த
ான் இந்தப் போராட்டமே தவிர வேறு எந்த நோக்கமும் கிடையாது.
தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலே பட்டம் பெறுகின்ற இழிநிலை இருக்கிறது.
இது அடியோடு மாற வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்ற நிலைமையை
பார்க்கும் போது, "வாழ்வதை விட சாவதே மேல்" என்று எண்ணத் தோன்றுகிறது.
விழி இழந்து வாழலாம். ஆனால் மொழி இழந்து வாழ முடியாது."
நன்றி: 'ராணி' வார இதழ் 30.5.1993.
குறிப்பு: தமிழ் நாட்டில் இன்னும் இந்த கேவலமான இழி நிலை தொடர்கிறது.
கி.ஆ.பெ. நூற்றாண்டு தாண்டி இன்றும் நம்மிடையே ஒரு வேளை வாழ்ந்திருந்தால்
இப்படித்தான் பழைய கருத்தை மாற்றிக் கூறியிருப்பார்.
"தமிழ்நாட்டில் திராவிட ஆட்சியை தலை முழுகாமல் தமிழுக்கும், தமிழனுக்கும்
வாழ்வில்லை. திராவிட ஆட்சியை அழிப்பதே என் முதல் வேலை" என்று சூளுரை மேற்
கொண்டிருப்பார்.
6 மணி நேரம்
தமிழ்மொழி ஆட்சிமொழி கல்வி மொழிப்பற்று
Kanchiamuthan Yoganathan
அந்த போராட்டத்தில் நானும் கலந்து கொண்டு கைதானேன்.120 பேர் கைதானோம்
.திருவல்லிக் கேணி காவல்நிலையத்தில் வைக்கப் பட்டு மாலை விடுவிக்கப்
பட்டோம் .இது குறித்து
மொழிகாக்க பாட்டன் களும் பேரன்களும் கைது என தமிழர் கண்ணோட்டத்தில்
செய்தி எழுதினேன்.அவர் அப்போது திராவிடர் இயக்கம் பற்றி ஏதும் பேசவில்லை.

தமிழறிஞர் தமிழ்ப்பற்று மொழிப்பற்று தமிழ்மொழி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக