சனி, 24 பிப்ரவரி, 2018

குடும்பர் பட்டம் பல சாதி பள்ளர்

aathi1956 aathi1956@gmail.com

22/11/17
பெறுநர்: எனக்கு

அரவிந்த் பாண்டியகுடும்பன்
# மூவேந்தர்_யார் ?
# பகுதி_38
மள்ளரிய தந்தை இரா. தேவ ஆசிர்வாதம் முன்னாள் டிப்டி கலெக்டர்
121
குடும்பன்:
குடும்பன் என்ற குலப்பட்டம் பள்ளுநூல்கள் தோன்றிய பின்னரே பெரு வழக்கில் வந்ததாகத் தெரிகிறது. அதற்கு முன்பு கரிவலம் வந்த நல்லூர், சீவிலிபுத்தூர் ஆலயங்களில் திருமலை நாயக்க மன்னனது ஆணையால் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளில் தேவேந்திரக் குடும்பன் என்று கண்டுள்ளது என முன்னர் குறிப்பிடப்ட்டிருப்பதை வாசகர் அறிவர். குடும்பன் என்பது ஒரு குடும்பத்தின் தலைவன் ஆவன். ஒரு கணவன் மனைவி அவரது குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து கூடி வாழ்வது குடும்பம் எனப்படும். குடும்பம் தனி உடைமை ஏற்பட்டபின் உருவானது ஆகும். தகப்பனே குடும்பத்தின் தலைவனாவான்; அவனுக்குப்பின், அவனது ஆண் சந்ததியினரே அவனது உடைமை களுக்கு உரியவராவர். மக்களிடையே நாகரிகம் ஏற்பட்ட பின்னரே இம்மாதிரிக் குடும்பமுறை மக்களிடையே தோற்றம் பெற்றது என்பர் ஆராய்ச்சியாளர். தமிழகத்தில் முதன் முதல் திராவிடராகிய மருதநில மக்களிடையேதான் குடும்பு முறை ஏற்பட்டது எனலாம். இந்தக் குடும்பன் என்ற பட்டம் கரிவலம் வந்த நல்லூர், சிவிலிபுத்தூர் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள செய்திபற்றியும், பள்ளு நூல்கள் தோன்றியபின், அது பெரும் வழக்கில் வந்தது பற்றியும் மேலே கூறியிருப்பது நினைவிருக்கத் தக்கது. இக்கல்வெட்டுகளும், பள்ளு நூல்களும் நாயக்க மன்னர் ஆட்சி காலத்தில் தோன்றியவை ஆகும். எனவே, நாயக்கர், ஆட்சிக்குமுன் தமிழ் வேந்தர் ஆட்சியின்போது குடும்பன் என்ற பட்டம் இம்மக்களுக்கு ஏற்பட்டிருந்ததா? என்பது ஆய்வுக்குரியது. தமிழ் அகராதிகளில் குடும்பன் என்பதற்குப் பொதுவாய் பள்ளரின் தலைவன் என்று பொருள் கண்டுள்ளனர். சென்னை பல்கலைக் கழக அகராதியில் (Madras lexicon) குடும்பன் என்பதற்கு நிலம் அளப்பவன் என்று பொருள் கண்டுள்ளது. கி.பி. 9 - 10 நூற்றாண்டுகளில் தோன்றிய திவாகரம், பிங்கலந்தை நிகண்டுகளில் குடும்பன் என்பது இடம் பெறக்காணோம். ஆனால் அதற்குப் பதில் குடும்பினி என்ற சொல் இடம் பெற்றுள்ளது. குடும்பினி என்பதற்கு அந்நிகண்டுகளில் குடும்பத்தலைவி என்று பொருள் கண்டுள்ளது. இடைக்காலச்சோழ மன்னர் கல்வெட்டுகளில் “குடும்பிகள்” என்ற சொல் இடம்பெற்றுள்ளது. ஆக குடும்பினியின் ஆண்பால் பெயர் “குடும்பி” என வழங்கியதாக அறிகிறோம். கி.பி.16 - ஆம் நூற்றாண்டில் தோன்றிய சூடாமணி நிகண்டில் “குடும்பினி” என்பதற்குச் தேவி என்று பொருள்
122
கண்டுள்ளனர். தேவி என்பது பெண் தெய்வத்தைக் குறிப்பதுடன், அது மன்னரின் பட்டத்து ராணியையும் குறிப்பதாயுள்ளது. மன்னரின் பட்டத்து ராணி கோப்பெருந்தேவி என வழங்கியது என்பது நாம் அறிந்ததுவே. குடும்பன் என்ற குலப்பட்டம் வழக்கில் உள்ள பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஊர்தலைவரையும் ஊர்க்குடும்பன் என்று வழங்குவர். ஊர்க்குடும்பன் எனில் ஊரில் குடும்பு பார்க்கிறவன் ஊர்சபை, ஊர்மன்றம் இவற்றிற்குத் தலைவராக இருப்பவர் என்று பொருள்படும். சங்க இலக்கியங்களில் வரும் ஊரன், மகிழ்நன், கிழவன் என்பவை அன்று இருந்த ஊர்த் தலைவர்களைச் சுட்டுவதாயுள. இத்தலைவர்கள் ஊர் காவலர், புரவலர் எனவும் வழங்கினர் என்பது நாம் அறிந்ததே.
இம்மரபினரைக் கொத்தடிமையாகச் சித்திரிக்கும் முக்கூடற் பள்ளில் இவரைக் 'குடும்பு செய்தூராருக்குக் குழைத்தான் (செய் - 88) என வருவது காண்க. இச்செய்யுளின்புடி, அக்காலத்தில் இம்மரபினரின் தலைவர்கள் தம் மரபினர்க்கு மட்டுமின்றி ஊரிலுள்ள எல்லாப் பிரிவினருக்கும் தலைவராயிருந்து குடும்பு பார்த்தனர் எனத்தெரிகிறது. கி.பி. 10 - ஆம் நூற்றாண்டின் இறுதியில், சோழர் ஆட்சி தமிழகம் முழுவதுவும் பெரும்பாலும் பரவிய வேலையில் ஊராட்சி முறை சம்பந்தபட்ட பல்வேறு அலுவல்களைக் கவனிப்பதற்கு ஏற்பட்ட ஊர் சபையின் வாரியங்கள் குடும்பு என வழங்கியதாக அறிகிறோம். ஊரானது பல தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் குட ஓலை மூலம் அங்கத்தினர் தேர்ந்தெடுக்கப்
பட்டனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர் ஏரி வாரியம், தோட்ட வாரியம், பஞ்ச வாரியம், பொன் வாரியம், கழனி வாரியம், ஆட்டை வாரியம் எனப் பல்வேறு வாரியங்களில் அங்கம் வகித்தனர். இக்காலத்தில் ஒருவர் தேர்தலுக்கு நிற்க சில விதிமுறைகள் ஏற்பட்டிருந்தன. இக்காலத்தில் தேர்தலுக்கு அபேட்சகராக ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் நிற்கலாம். ஆனால் அக்காலத்தில் ஒருவர் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் தேர்தலுக்கு நிற்க அனுமதிக்கப்படுவர். அவருக்கு இருக்கவேண்டிய குறைந்த பட்ச வயது 31; அதிகபட்ச வயது 60 ஆகும். வயது வரம்பு விதி இடையிடையே மாற்றம் பெற்றுள்ளது. அபேட்சகரது உறவினர் ஒருவரும் ஏற்கனவே அங்கத்தினராக இருந்திருக்கக்கூடாது. அங்கத்தினரோ அல்லது அவரது உறவினரோ கையூட்டு வாங்காதவராகவும் இருந்திருக்கவேண்டும். நல்ல கல்வி, அறிவு உடையவராகவும் அரசுக்குத் தீர்வை (வரி) செலுத்துபவராகவும்,
123
குறைந்தது கால்வேலி நஞ்சை நிலம் உடையவராகவும் இருப்பதுடன், அவரது நடத்தையில் எவ்விதமான ஒழுங்கீனமும் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். இத்தேர்தல் விதிமுறைகள் உத்ரமேரூர், திருச்செய் நல்லூர் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளன. இம்மாதிரியான பல வாரியங்களை மேற்பார்வையிடும் அமைப்பு குடும்பு வாரியம் என வழங்கியது. கல்வெட்டுகளில் குடும்பு வாரியப்பெருமக்களும் தோட்ட வாரியப் பெருமக்களும், (ARE 690 / 1904) களத்து இப்பாட்டை குடும்பு வாரியப் பெருமக்களும், எரிவாரியப் பெருமக்களும், இருநூற்றுவயப் பெருமக்களும் (ARE 688 / 1904) என்று பொறிக்கப்பட்டுள்ளது காண்க. இடைக்காலச் சோழர் ஆட்சியில் வெள்ளாழர் குடும்பு பார்த்தனர் என்பது, தஞ்சை மாவட்டம் மன்னார்குடி கைலாசநாதசுவாமி கோயிலில் உள்ள வெள்ளாழரை . . . பிடாகைகளுக்கு குடும்பும், புரவும் செய்தாரையாதல், ஊர்க்கணக்கரையாதல், பிராமணரிலும், வெள் ளாழரிலும் முதலிகளுக்கு கொளச் சொன்னார் (SII. Vol. VI. ARE 98 / 1897) என்ற கல்வெட்டாலும் மன்னார்குடி இராஜகோபால் பெருமாள் கோயிலிலுள்ள ஆண்டு தோறும் குடும்பு மாறி இடவும்; நாட்டில் வெள்ளாழரையா ... ... ... குடும்பும் புரவும் செய்தாரையாதல், ஊர்க்கணக்கரையாதல் பிராமணரிலும் வெள்ளாழரிலும், முதலிகளுக்குக் கொளச் சொன்னார் (ARE 104 / 1897) என்ற கல்வெட்டாலும் நன்கு விளங்கும். (குறிப்பு: புரவு என்பது வரிவசூல் ஆகும்) அக்காலத்தில் குடும்பு பார்த்தவர் தேவேந்திரகுல வேளாளரே ஆவர். கல்வெட்டுகளில் வெள்ளாழர் என்று பொறிக்கப்பட்டுள்ளவர் இம்மரபினரே என்பதில் எள்ளவும் ஐயம் இல்லை. (இவ்வாசிரியரின் வேளாளர் யார்? நூலைப் பார்க்கவும்).
இன்று வேளாளர், வெள்ளாளர் என வழங்குபவர் அன்று வெவ்வேறு தொழில் மக்களாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வினைஞர், களமர், தொழுவர், கடைசியர், கூத்தர், விறலியர், பரத்தையர், பாணர் முதலிய பல்வேறு இனக்குழுக்களிலிருந்து தோன்றியவர் ஆவர். இவர் நாளடைவில் வளர்ச்சி பெற்று, இன்றைய நிலையை எய்தியுள்ளனர். சோழர் கால மரபை ஒட்டி தேவேந்திர குலத்தாரிடையே குடும்பு முறை பண்டு தொட்டு நீடித்து வருவதை மாவட்டக்குறிப்பு, மற்றும் மக்கள் குடிக்கணக்கு இவைகள் மூலம் அறியலாம். இவரிடையே பஞ்சாயத்து முறை அமுலில் இருந்து வருவது போன்று உயர் சாதி என்று பாராட்டுவோர்மத்தியில் அவை இல்லாதது சிந்திக்கத் தக்க ஒன்றாகும்.
124
அடுத்து குடும்பு என்ற சொல் எப்படிப் பிறந்ததென்பது பற்றிப் பார்ப்போம். இச்சொல் 'குடி என்ற சொல் அடிப்படையிலிருந்தே தோன்றியிருக்கிவேண்டும். குடிமை, குடித்தனம், குடிகை, குடில், குடும்பம், குடும்பி குடும்பினி, குடியானவன், என்ற சொற்கள் பிறந்திருக்கின்றன. குடி என்ற சொல் ஊர்பெயர்களில் அமைந்து குடியிருப்பையும் உணர்த்தும். உறவு முறையுடைய ஒரு குடும்பத்தார் ஒரு குடியினராகக் கருதப்படுவர். இத்தகையப் பல குடிகள் சேர்ந்து வாழும் இடம் குடியிருப்பு என்றும் அவ்விதம் கூடிவாழ்பவர் குடிஎன்றும் பொருள்படும். திருக்குறளில் குடிமை என்னும் அதிகாரத்தில் வழங்குவதுள் வீழ்ந்த கண்ணும் பழங்குடி பண்பிற்தலை பிரிதலின்று (செய். 985) என்ற செய்யுளில் பழங்குடி என்பதற்குப் பரிமேலழகர், சேர, சோழ, பாண்டியர் என்றாப்போல், தொன்றுதொட்டு மேம்பட்டு வரும் குடி என்று பொருள் கண்டுள்ளார் என்பதை நாம் அறிவோம். பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் இச்சொல்பற்றிக் கூறுவதாவது: தமிழில்குடி என்பது குடும்பம், குலம், ஆட்சிக்குடி மக்கள், நாட்டு மக்கள் ஆகிய எல்லாப் பொருளும் உடையது. இப் பொருள்கள் குடியாட்சி, விரிவடைந்து வளர்ந்த வகையைக் குறிக்கின்றன. குடும்பமே குலமாய், சமுதாயமாய், நாட்டு மக்களாய் வளர, குடும்ப ஆட்சியே நாடாக விரிவுற்று வளர்ந்து குடியாட்சியாக முதிர்வுற்ற நிலையை அது காட்டுகிறது. (பன்மொழிப்புலவர் – கா. அப்பாத்துரை. மொழி வளம் சேகர் பதிப்பகம். தி. நகர் சென்னை - 17) குடுமி என்ற சொல்லுக்கு வெற்றி, உச்சி, கண்மயிர் எனப் பிங்கலந்தை நிகண்டு பொருள் கூறுகின்றது. சங்ககாலத்துப்பாண்டிய மன்னருள் ஒருவன் முதுகுடிமிப் பெருவழுதி என்று அழைக்கப்பட்டான் என்பது குடிமிக் கோமாற்கண்டு (புறம். - 64) என்ற செய்யுளால் அறியலாம். குடும்பி என்பதற்கு சம்சாரி என்று பொருள்படும் என்பது குடும்பி யெனுங் குறிப்பை மாற்றி (ஞான பா. உற்ப. 69) என்ற செய்யுள் மேற்கோளால் அறியலாம். குடும்பம் என்பது சமுசாரம் என்பதையே குறிக்கும் என்பது குடும்பத்தைக் குற்றமறைப்பான் (கம்ப. இராமா. சேது. ப. 53) என்ற மேற்கோளால் புலனாகும். அடுத்து குடும்பன் குடும்பத்தலைவன் எனப் பொருள்படும், என்பது. ஏழைக்குடும்பனாகி (தாயு. தே. சோ) என்ற தாயுமானவர் பாடலால் அறியலாம். குடும்பன் எனும் சொல் பொதுவாய், எல்லா மரபினருடைய குடும்பத்தலைவரைக் குறிக்கலாமென்றாலும், ஏற்கனவே கூறியது போன்று அது பண்டு தொட்டு வரும் வழக்கப்படி, தேவேந்திர குலத்தாரின் ஊர் மன்றத் தலைவரையும், அதையொட்டி அம்மரபினரின்
125
ஒவ்வொரு குடும்பத் தலைவரையும் சுட்டும் குலப்பட்டமாக அது
வழங்குகின்றது.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக