சனி, 24 பிப்ரவரி, 2018

ஈவேரா சென்னை மீட்பின்போது திருச்சி தலைநகரம் என குழப்பியது மண்மீட்பு தெலுங்கர்

aathi tamil aathi1956@gmail.com

11/11/17
பெறுநர்: எனக்கு
திரித்துக் கூறும் திராவிட எதிர்ப்பாளர்களே! தெரிந்து கொள்ளுங்கள்!!
விவரங்கள்
எழுத்தாளர்: பெரியார்
தாய்ப் பிரிவு:
திசைகாட்டிகள்
பிரிவு: பெரியார்
C வெளியிடப்பட்டது: 16 நவம்பர் 2015
திராவிடம்
எல்லைப் போராட்டம்
பெரியார்
05.09.1949இல் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சில் மனிதனுக்கு இருதயம் போல்
தமிழ்நாட்டிற்கு ஒரு மைய ஸ்தானமாக அமைந்திருக்கும் திருச்சியானது
தமிழ்நாட்டிற்குத் தலைமை நகரமாக இருக்கத் தகுதி உடையதாக இருக்கிறது என்ற
கருத்து விவாதத்தை உருவாக்கியது. தந்தை பெரியாரின் கருத்தை திரித்து சில
பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில்
16.09.1949 அன்று 'விடுதலை' தலையங்கத்தில் பெரியார் தம் கருத்தைத்
தெளிவுபடுத்தினார்.
“நான் திருச்சியில் 05.09.1949 ஆம் தேதி பொதுக்கூட்டத்தில் பேசிய
பேச்சில், "மனிதனுக்கு இருதயம் போல் தமிழ்நாட்டிற்கு நடு மைய ஸ்தானமாக
அமைந்திருக்கும் திருச்சியானது தமிழ்நாட்டிற்கு தலைமை நகரமாக இருக்கத்
தகுதி உடையதாக இருக்கிறது” என்று திருச்சி நகரத்தின் பெருமையைப் பற்றிப்
பேசும்போது குறிப்பிட்டேன்.
அதை பத்திரிகைகள் கண்டபடி பொறுப்பில்லாமல் தலையங்கம் கொடுத்து
பிரசுரித்திருக்கின்றன.
ஆனால், அதே சமயத்தில் ‘விடுதலை’யில் நான் பேசியது விளங்கும்படியாக
வெளியாகி இருக்கிறது.
இப்படி இருக்க நான் ஆந்திரர்களுக்கு சென்னையை விட்டுக் கொடுக்கச்
சம்மதித்ததாக குயுக்தி செய்து கொண்டு சிலர் பேசுகிறார்கள்;
எழுதுகிறார்கள்; சிலர் இதை நம்பிக்கொண்டு என்னையும் கேட்கிறார்கள்.
இது விஷயத்தில் எனது கருத்து ஒன்றும் ஒளிமறைவாய் இல்லாமல் ஆண்டுக்கணக்கான
தெளிவுபடுத்தி வரப்பட்டிருக்கிறது அதாவது :-
இந்த சமயத்தில் திராவிட நாடு, இந்துஸ்தான் ஆட்சியில் இருந்து பூரண
சுயேச்சையுள்ள தனி நாடாகப் பிரியப்பட வேண்டியதுதான் முக்கியமும்
முதன்மையுமான காரியமாக இருக்க வேண்டுமே ஒழிய, தமிழ் தெலுங்கு, கன்னட,
மலையாளம் என்பதான மொழிவாரி மாகாணப் பிரச்சினை இப்போது கூடவே கூடாது
என்பது எனது கருத்தாகும். இதையே மொழிவாரி மாகாணப் பிரிவினை கமிஷன் என்னை
அழைத்துக் கேட்டபோதும் அழுத்தம் திருத்தமாக சொல்லி வந்திருக்கிறேன்.
அதே சமயத்தில் “ஆந்திரர்கள், கன்னடியர்கள், மலையாளிகள் தாங்களும்
பிரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறார்களே, அதைப் பற்றி உங்கள்
அபிப்ராயம் என்ன?” என்று அக்கமிஷனால் கேட்கப்பட்ட போது, “அது திராவிட
நாடு பிரிந்து பின் நாங்கள் எங்களுக்குள் பிரித்துக்கொண்டு திராவிட
நாட்டுக்குப் பொதுவாக ஒரு தலைமை அரசாங்கம் (பெடரேஷனாக) அமைத்துக்கொண்டு
அதற்கு உள் மாகாணங்களாக தமிழ், தெலுங்கு, கன்னடம், கேரளம் என்று நான்கு
மாகாணங்கள் ஏற்படுத்திக்கொள்ளுவோம்” என்று சொல்லி இருக்கிறேன்.
அப்படி ஏற்படும்போது திராவிட நாட்டுக்கு அனேகமாக சென்னை தலைநகராமாயிருக்க
முடியும். அப்படி சென்னை திராவிட நாட்டுக்கு தலைநகரமாக இருக்குமானால்,
தமிழ், தெலுங்கு முதலிய 4 மாகாணங்களுக்கு 4 மாகாணத் தலைநகரம் அந்தந்த
மொழிப் பிரதேசத்தில் தனித்தனியாக ஏற்பட்டுத் தான் தீரும். அப்படி
ஏற்படும் போது தமிழ்நாட்டுத் தலைநகராக இருக்க திருச்சி தகுதி உடையதாக
இருக்கிறது என்பதுதான் நான் திருச்சியில் பேசியதில் உள்ள தொனி,
பொருளாகும்.
திராவிட நாடு முதலாவதாகப் பிரிந்து கிடைத்துவிட்டால் மொழிவாரி மாகாணப்
பிரச்னை இவ்வளவு முக்கியமுடையதாக இருக்காது என்பது என் கருத்தாகும்.
ஆனாலும் அந்தந்த மொழி மக்கள் தாங்கள் ஏராளமாய் இருக்கும் பிரதேசம் தனி
மாகாணமாய் இருக்க வேண்டும் என்றால் சிறிதுகூட ஆட்சேபணை இருக்காது என்று
சொல்லி வந்திருக்கிறேன்.
சவுகரியத்திற்கு ஆகவோ அல்லது வேறு உள்நாட்டு காரியத்திற்கு ஆகவோ
தமிழ்நாட்டில் உள்ள 12 ஜில்லாக்கள் ஆறு ஆறு ஜில்லாக்கள் கொண்ட இரண்டு
மாகாணமாகப் பிரித்து அமைக்கப்படவேண்டும் என்று அப்பிரதேச மக்கள்
விரும்பினாலும் ஆட்சேபணை இருக்காது என்றும் சொல்லி இருக்கிறேன்.
இவற்றுள் எது எப்படி இருந்தாலும் மொழிவாரி தத்துவப்படி பார்த்தால் சென்னை
நகரம் தமிழ்நாட்டுக்குத்தான் சேரும்; அது தமிழர்களுடையது தான் என்பதில்
யாருக்கு ஆட்சேபணை இருக்க முடியும் என்பது எனக்கு விளங்கவில்லை. மொழிவாரி
நாடு என்று பேசுவதன் கருத்தே மொழி பேசும் மக்களை 100க்கு 75 போலாவது
கொண்ட நாடு என்றுதானே கருத்து ஆகும்.
“சென்னையில் உள்ள தெலுங்கு பேசும் மக்கள் எல்லாம் ஆந்திர நாட்டைச்
சேர்ந்தவர்கள் என்று சொல்ல முடியுமா?”
முதலாவது ஒருவனை ஒருநாட்டான் என்று சொல்லுவதற்கு ஆதாரம் அவன் பேசும்
மொழியே ஆகிவிடாது.
அவன் இந்த நாட்டில் பிறந்து இந்த நாட்டில் வாழ்ந்து இந்த நாட்டில்
முடிவெய்துகிற வரை என்பதுதான் ஆதாரமாகும்.
இந்த நாட்டுக்குத் தொழிலுக்கு பிழைப்புக்கு வந்து, வாழ்ந்து கிடைத்ததை
சுருட்டிக்கொண்டு வேறு நாட்டுக்குப் போகிற எவனும் அவன் எந்த மொழி
பேசினாலும் இந்த நாட்டான் ஆகமாட்டான். அது போலவே ஆந்திர நாட்டில் இருந்து
வந்து வக்கீல், உத்தியோகம், வியாபாரம், லேவாதேவி, கூலி, யாசகம், முதலிய
தொழில்களில் பணம் திரட்டிக்கொண்டு ஆந்திர நாட்டுக்குப் போகிற எவனும்
தமிழ்நாட்டான் ஆகிவிட மாட்டான்.
ஆனால், இங்கு பிறந்து வளர்ந்து தொழில் செய்து பணந்தேடி அவற்றை இங்கேயே
வைத்துக்கொண்டு வாழ்ந்து இங்கே முடிவெய்துவதற்கு இருக்கும் எந்த
தெலுங்கனும் ஆந்திர நாட்டானாக ஆகிவிட மாட்டான். இந்த முறையில் கணக்குப்
பார்த்தால் ஆந்திர நாட்டவர்கள் (ஆந்திரர்கள்) என்பவர்கள் 100க்கு சுமார்
10 பேர்கள் சென்னையில் இருப்பார்களா? என்று கேட்கிறேன்.
ஆதலால், எக்காரணம் கொண்டும் மொழிவாரி என்கின்ற அடிப்படையால் ஆந்திர
நாட்டவர்கள் என்கின்ற தத்துவத்தில் சென்னையைத் தமிழர்கள் தவிர -
தமிழ்நாட்டவர்கள் என்பவர்கள் தவிர்த்து வேறு எவரும் உரிமை கொண்டாட
நியாயம், நேர்மை இல்லை என்று வலிந்து கூறுவேன்.
எனவே, எனது திருச்சிப் பேச்சை திரித்துக் கூறிய பத்திரிகைகள் செய்தியைக்
கொண்டு யாரும் தவறாகக் கருதிவிடக் கூடாது என்று வேண்டிக்கொள்வதோடு இது
விஷயத்திற்கு மாத்திரமல்லாமல் மற்றும் என் சம்பந்தப்பட்ட எந்த
விஷயத்திற்கும் பிற பத்திரிகைகளில் காணப்படுவதைக் கொண்டே முடிவு செய்து
கொள்ளக் கூடாது என்றும் வேண்டிக்கொள்கிறேன்" என்று சென்னை தமிழனுக்கே
சொந்தம் என்பதை ஆணித்தரமாகக் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக