வியாழன், 22 பிப்ரவரி, 2018

பாவாணர் தமிழ் பேசினால் தமிழர் வரையறை

aathi tamil aathi1956@gmail.com

7/11/17
பெறுநர்: எனக்கு
தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் Suresh N உடன்.
தமிழர் யார்..? யார் தமிழர்..?
(பாவாணர் விளக்கம்)
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதே தமிழர் கொள்கை...
தமிழருக்கு மிக நெருக்கமான திராவிடர் மட்டுமன்றி, மராட்டியர்,மார்
வாடியர்,முதலிய வடநாட்டாரும், ஆப்பிரிக்கர்,ஐரோப்பியர் முதலிய அயல்
நாட்டாரும் தமிழரே...
""பெருமையெனப் புன்செருக்கிற் பிரிந்து வாழ்ந்து
பிறருக்கொன் றீயாத புல்ல ரேனும்
எருமையொடு குரங்கரவம் தவளை தின்பார்
இரப்பெடுப்பார் தீயதொழு நோய ரேனும்
கருமைமிகு ஆப்பிரிக்கர் முண்ட மெய்யர்
காடுறையும் விலங்காண்டி மாந்தரேனும்
அருமையுறுந் # தனித்தமிழை விரும்புவாரேல்
அவரன்றோ தலையாய தமிழர் கண்டீர்""
தமிழை போற்றுதலாவது, தமிழ் திராவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு
மூலமுமாகும் என்னும் உண்மையை ஒப்புக்கொள்வதே....
++++++
@ # தமிழர்_வரலாறு நூல் பக்கம் 394.....

Aathimoola Perumal Prakash
பாவாணர் மொழிப்பற்றாளர் அதனால் அவரது இனப்பற்று பின்தள்ளப்பட்டு விட்டது.

தமிழன் சுரேஷ் அகம்படி மறவன்
இப்பதிவை பாவாணரை அதிகமா நிறைய நூல்களை படித்தவர்களால் உணரமுடியும்...
இது இன வரையரை இறுதி என எவறும் குழம்பிவிடாதீர் நண்பர்களே...

யாரெல்லாம் தமிழர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக