திங்கள், 19 பிப்ரவரி, 2018

கத்தி எழுத்தாணி சேர்ந்த ஆயுதம்

எழுத்தாணி


எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு - என்பது ஐயன் வாக்கு.

 புத்தியைத் தீட்ட,  கத்தியைத் தீட்டி உள்ளனர் எங்களது முன்னோர்.



எண்ணத்தின் பதிவு எழுத்தில்,
எழுதின் பதிவு ஏட்டில்,
ஏட்டில் எழுதுவது எழுத்தாணி,
ஏட்டை உருவாக்குவது கத்தி,

எனவே புத்தியைத் தீட்ட, 
கத்தியும் வேண்டும்,
எழுத்தாணியும் வேண்டும்.

“கத்தியைத் தீட்டாதே, உந்தன் புந்தியைத் தீட்டு“ என்பது பட்டுக்கோட்டையாரின் அறிவுரை.
ஆனால், எங்களது முன்னோர்கள் தங்களது கத்தியைத் தீட்டியே புத்தியை வளர்த்துள்ளனர்.

கத்தியும் எழுத்தாணியும் ஏறத்தாழ அந்தக் காலத்தில் ஒரு சொத்தை கையில் வைத்திருப்பது போல என்பார்கள். 

மேலே உள்ள படத்தில் பனையோலைப் பிடித்திருப்பது சரியான முறையில் அல்ல. இடதுகையின் பெருவிரலும் சுண்டுவிரலும் மேலே இருக்க வேண்டும்.  நடுவில் உள்ள மூன்று வீரல்களும் கீழே இருக்க வேண்டும்.  நடுவில் பனையோலை இருக்க வேண்டும்.  பழங்காலத்தில் வலது கையில் எழுத்தாணியும், இடது கையில் ஓலையும் இருக்க வேண்டும். எழுதும்போது எழுத்தாணியும் கைகளும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். ஓலை மட்டும் நகர்ந்து செல்வதுபோல் பிடித்துக் கொள்ளவேண்டும். 









கத்தியும் எழுத்தாணியும் ஒன்றாகக் கையிற் கொண்டு, புத்தியைத் தீட்டக் கத்தியைத் தீட்டியுள்ளனர் எங்களது முன்னோர் என்பதில்  எனக்குப் பெருமைதானே !

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா. கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக