புதன், 14 பிப்ரவரி, 2018

ஓரெழுத்து பாடல் ஏகாக்சரம் ஏகாக்ஷரம் த தமிழ்மொழி

aathi tamil aathi1956@gmail.com

29/10/17
பெறுநர்: எனக்கு
Rajokkiyam Thangaraj, 2 புதிய படங்களைச் சேர்த்துள்ளார் — ஆவாரை
சின்னமணி மற்றும் 5 பேர் உடன்.
# தமிழும்காதலும் :
# தமிழ்விளையாட்டு:
# செய்யுள் :
தாதிதூ தோதீது தத்தைத்தூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூத்தே- தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி.
# எளிதாக்கம்:
தாதி தூதோ தீது!
தத்தைத் தூது ஓதாது!
தூதி தூது ஒத்தித்த தூத்தே!!
தாதொத்த(தாது ஒத்த) துத்தி தத்தாதே!!
தேதுதித்த(தே துதித்த) தொத்து தீது!!!
தித்தத்தது ஓதித் திதி!!!
# விளக்கவுரை:
தாதி- தோழி அல்லது அடிமைப் பெண்
தூதோ-அனுப்பப்படும் தூது
தீது- நன்மைப் பயக்காது(தீமை).
தத்தை- வளர்ப்புக் கிளி
தூதிதூது- தோழியின் தூது
ஒத்தித்த தூத்தே- ஒத்திவைப்பு அல்லது நாட்கடத்தல்.
துத்தி- தேமல்
தத்தாதே- என் மேல் படாராது(தத்தாது)
தே- தெய்வம்
துதித்த(ல்)-வழிபடுதல்
தொத்து- தொடர்ந்து அல்லது தொடர்தல்.
தித்தித்தது- இனிக்கும்(தித்திப்பு நல்கும்)
ஓதித் திதி- ஓதிக் கொண்டிருப்பதையே செய்வேனாக!
# பொருள்:
தோழியின்(அடிமைப் பெண்ணின்) மூலமாக அனுப்பும் தூது நன்மை பயக்காது!
நான் வளர்க்கும் கிளியோ தூதுப் பாணியில் தூதைத் திறம்பட ஓதாது!
தோழியின் தூதோ நாளைக் கடத்திக் கொண்டே போகும்!!
ஆகவே, பூந்தாதினைப் போன்ற தேமல்கள் என்மேல் படராது.
தெய்வத்தை வழிபட்டுத் தொடர்தலும் தீதாகும்.
எனவே, நான் தித்திப்பு நல்கும் என் காதலினின் பெயரை ஓதிக்
கொண்டிருப்பதையே செய்வேனாக!
தித்திப்புப்பகிர்வு : Mathiyalagan Mathi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக