புதன், 14 பிப்ரவரி, 2018

கேட்டலோனியா தமிழகம் இந்தியா ஸ்பெயின் ஒப்பீடு விடுதலை தனிநாடு பிரகடனம்

aathi tamil aathi1956@gmail.com

30/10/17
பெறுநர்: எனக்கு
Bhagyalakshmii Dhananjeyan
தன்னிலிருந்து கேட்டலோனியா தனி நாடாக பிரிந்து செல்வதை ஸ்பெயின் நாடு
விரும்பவில்லை. ஆனாலும் கேட்டலோனியா தனி நாடாக தன்னை அறிவித்து விட்டது.
கேட்டலோனியா நாடாளுமன்றம் கூடி, இந்த வரலாறு சிறப்புமிக்க முடிவை எடுத்து
விட்டது. கோபமடைந்துள்ள ஸ்பெயின் கேட்டலோனியா நாடாளுமன்றத்தைக் கலைத்து
விட்டது. விரைவில் கேட்டலோனியாவில் தேர்தல் நடத்தப்பட்டு புது
நாடாளுமன்றம் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. இதனால் அங்கு
பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
ஸ்பெயினில் இருந்து எந்த மாகாணமும் பிரிந்து செல்ல முடியாது, அதற்கு
ஸ்பெயின் சட்டத்தில் இடமில்லை என்று சொல்லி இருக்கிறது ஸ்பெயின். இதனால்
விரைவில் ஸ்பெயின் படைகள் கேட்டலோனியாவில் நுழைந்து கேட்டலோனிய மக்களை
இனப்படுகொலை செய்யலாம் என்று தெரியவருகிறது.
ஸ்பெயினின் 17 மாகாணங்களுள் கேட்டலோனியா முக்கியமான மாகாணம். நம்
தமிழ்நாட்டைப்போல மற்ற மாகாணங்களைக் காட்டிலும் அறிவுடைச் செலவமும், மனித
ஆற்றலும் நிறைந்த மாகாணம். நம் தமிழ்நாட்டைப்போல கலாச்சாரத்தின்
ஊற்றுக்கண் இந்த மாகாணம். நம் தமிழ்நாட்டைப்போல. கேட்டலோனியாவின்
தலைநகரான பார்சிலோனா உலகின் அழகிய நகரம். பார்சிலோனா கால்பந்து அணி உலகம்
அறியப்பெற்றது. ஸ்பானின் வருவாயில் 20 % பங்கினை கேட்டலோனியா தான்
தருகிறது. நம் தமிழ்நாட்டைப்போல 2008 ஆண்டுகளில் பொருளாதார மந்தநிலை
ஏற்பட்டபோது கேட்டலோனியா மாகாணம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அப்போது, மத்திய ஸ்பெயின் அரசு எந்த உதவியும் செய்யாமல் மாற்றாந்தாய்
மனப்பான்மையில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தது. நமது இந்த மத்திய
அரசு போல. மேலும் கேட்டலோனியா மொழியை அழித்து, ஸ்பானிஷ் மொழியை
திணிக்கும் வேலைகளை ஸ்பெயின் அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்துகிறது. நம்
தமிழ்நாட்டைப் போல, நம் மத்திய அரசைப் போல
இப்போது தனது தனிநாடு அறிவித்தலால், மிகப்பெரிய இனப்படுகொலைக்கு
தயாராகிறது கேட்டலோனியா. விரைவில் ஸ்பெயின் ராணுவத்தின் முப்படைகளும்
அங்கே நுழைந்து, இரசாயன குண்டுகளையும், கொத்து குண்டுகளையும் போடலாம்.
பேரழிவுகளும், பெருங்கொடுமைகளும் அங்கே நிகழவிருக்கிறது.
இந்தியா இலங்கை, சமீபத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தி, அதில் வெற்றி
பெற்று, தம்மை தனிநாடு என அறிவித்துக்கொண்ட குர்து இனமக்களை
அழித்தொழித்து படுகொலை செய்து அவர்களின் குர்து நாட்டைக்
கையகப்படுத்திக்கொண்ட ஈராக் போன்ற ஆதிக்க சக்திகள் தமது படைகளையும் அங்கே
அனுப்புவதற்கு தயாராகிக்கொண்டு இருக்கின்றன.
23 மணி நேரம் · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக