புதன், 30 செப்டம்பர், 2020

kvb லட்சுமி இரண்டும் தெலுங்கர் வங்கி விபரம் வரலாறு வந்தேறி வணிகம் பொருளாதாரம்

 

aathi1956 aathi1956@gmail.com

வியா., 24 ஜன., 2019, பிற்பகல் 8:41
பெறுநர்: எனக்கு

Athiyaman Thamuka
தமிழகத்தை அடித்தளமாக்கி வளர்ந்த தெலுங்கர் நிறுவனங்கள்
தமிழகத்தில் சென்னை கோவை மதுரை திருச்சியில் பொருளாதரா ரீதியில் உச்சத்தில் தெலுங்கர்கள் உள்ளது பற்றி உங்களுக்கு தெரியும்
வங்கி துறையில் மிக ஆழமாக வேரூன்றி உள்ள கரூர் வைசியா வங்கியும் லட்சுமி விலாஸ் வங்கியும் தெளுங்கர்களுடையது என்பது நம்மில் பலருக்கு தெரியாது அது பற்றி தெரிந்து கொள்வோம்
ஒரு இனத்திற்கு தேவையான முக்கிய காரணிகளில் அரசியல் முக்கியமானது .அதனை நம் கை வசப்படுத்தாவிட்டால் நாம் முன்னேற முடியாது. தன் இனத்தை சார்ந்தவர்கள் வளர்ச்சிக்கு அது உதவாவிட்டாலும் தடையாக இருக்காது என்பதற்கு இங்கு வளர்ந்து ஓங்கி நிற்கும் தெலுங்கு நிறுவனங்கள் சாட்சி
கரூர் வைசியா வங்கி இந்தியாவில் செயல்பட்டுவரும் தனியார்த் துறையைச் சார்ந்த வங்கியாகும். இது தமிழகத்தின் கரூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இவ்வங்கி 1916ஆம் ஆண்டில் எம். ஏ. வெங்கட்ராம செட்டியார் மற்றும் அதி கிரிஷ்ண செட்டியார் ஆகியோரால் தொடங்கப்பட்டது.
இவ்விருவரும் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட கோமுட்டி செட்டி வகுப்பை சார்ந்தவர்கள் 1916 இல் ஒரு லட்சம் முதலீட்டில் தங்கள் தொழிலை துவங்கி இன்று 798 கிளைகளுடன் 1,780+ ATM தானியங்கி காசாளும் இயந்திர முகமைகளுடனும் , சென்னையில் மட்டும் 65 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது . இதன் இன்றைய வியாபர தொகை ஒரு லட்சம் கோடி
இந்த வங்கியில் எனக்கும் கணக்கு உள்ளது அனாலும் இது நாள் வரை இது ஒரு தெலுங்கர் வங்கி என்பது எனக்கு தெரியாது
இன்றுதான் சற்று விபரமாக தெரிந்தது
வங்கியின் தற்போதைய செயல் தலைவர் சேசாத்திரி வங்கி தலைவர் கே வி ராவ் ஆவர்
கடந்த 2017 ஆம் ஆண்டு இதன் 101 வது ஆண்டு விழா ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் விசாக பட்டினத்தில் நடந்தது அதில் பேசிய அதன் தலைவர் கே வி ராவ் நவீன தொழில் நுட்பங்களை புகுத்துவதிலும் எங்கள் வங்கி சிறந்து விளங்குகிறது எங்களுக்கான தொழில் நுட்ப உதவிகளை ஹைதராபாத்தை தலைமையாக கொண்டு இயங்கும் ஐ டி பி டி ( institute for development and research for banking technology )என்ற நிறுவனத்திலிருந்து பெறுகிறோம் என்றார்
இதே போல லட்சுமி விலாஸ் பேங் என்ற வங்கியும் தெலுங்கர் வங்கி என இன்றுதான் தெரிந்தது அதன் பிறப்பிடம் கருர் ஆகும் வி எஸ் என் ராமலிங்க செட்டியாரால் 1926 இல் துவங்கப்பட்ட இந்த வங்கிக்கு இன்று 541 கிளைகள் உள்ளன 54,811.84 கோடி சொத்து மதிப்புடன் உள்ள வங்கியாகவும் உள்ளது
தமிழ் நாடு மேர்கண்டையில் வங்கி என நம் நாடார்கள் கூடி உருவாக்கிய வங்கிங்கும் இந்த வங்கிங்கும் உள்ள வேறுபாடு இது தமிழ் சாதியில் உள்ள ஒரு சாதியினர் கூடி உருவாக்கிய வங்கி மேற்கண்ட வங்கிகள் தனி நபர்கள் ஒரு சிலர் கூடி உருவாக்கியது
அவ்வாறு உருவாக்கி இருந்த போதிலும் அந்த வங்கி அபரிதமான வளர்ச்சி கண்டுள்ளது அதன் பின்னால் அதன் நிர்வாக திறமை சரியாக திறம்பட உள்ளதை எடுத்துக் காட்டுகிறது அதனை நாம் பாராட்ட வேண்டும்
அவ்வாறு பாராட்டும் நாம் இந்த வங்கி நம் ஆட்களுடைய வங்கி என பெரும்பலான தெலுங்கர்கள் தெரிந்து வைத்திருந்து அங்கு கணக்கு துவங்கி இருப்பார்கள் என்பதையும், இந்த வங்கியின் வளர்ச்சிக்கு பின்னால் தமிழகத்தில் உள்ள தெலுங்கர் ஆதிக்க அரசியல் உதவி இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்
22 ஜனவரி, பிற்பகல் 11:19 ·

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக